Link copied!
Sign in / Sign up
6
Shares

குழந்தை பிறந்து ஒரு வருடம் தான் ஆகிறதா? இதை எல்லாம் கவனித்தீர்களா?

பிறந்த முதல் வருடத்தில் தான் குழந்தைகள் பல நோய் தாக்குதல்களுக்கு உள்ளாவார்கள். இதற்கு காரணம், குழந்தையின் நோய் எதிர்ப்பு மண்டலம் அப்போது தான் செயல்பட ஆரம்பித்திருக்கும் என்பதால் தான். அதுமட்டுமின்றி, அவர்கள் எந்த நோய் மற்றும் கிருமிகள் தாக்கத்திற்கும் ஆளாகவில்லை என்பதால் ஆன்டி-பையோட்டிக் உற்பத்தியும் ஆரம்பித்திருக்காது. இதனால் தான் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுகிறார்கள். எனினும், சில நோய்களுக்கு தடுப்பூசி இல்லை என்பதால், அந்த நோய் தாக்குதல்களுக்கு எளிதில் ஆளாவார்கள்.

1 சளி

அறிகுறிகள்

இருமல், மூச்சுத் திணறல், தொண்டை வலி, மூக்கில் சளி வருதல், மிதமான காய்ச்சல்

சிகிச்சை

சளியை குணப்படுத்த உங்கள் குழந்தையின் மூச்சு பாதையை சரி செய்தால் போதும். இதனால், குழந்தைகள் சிரமமின்றி மூச்சு விடுவார்கள். மருந்துகள் கொடுத்தால் ஆபத்தாக முடியும். மேலும், நாசி ஸ்ப்ரேக்கள், ஈரப்பதமூட்டுதல் மற்றும் நீராவி ஆகியவைகளை பயன்படுத்தலாம். சளி தொடர்ந்தால், மருத்துவ ஆலோசனை பெறுவது சிறந்தது.

தடுப்பு முறைகள்

நோய் தொற்று உள்ளவர்களிடம் இருந்து குழந்தையை விலக்கி வையுங்கள். மேலும், உங்கள் குழந்தை மற்றும் உங்கள் குழந்தையின் சுற்றுப்புற பகுதிகளை சுத்தமாக வைத்திருங்கள்.

2 வயிற்றுப்போக்கு

அறிகுறிகள்

அடிக்கடி மற்றும் தண்ணீராக மலம் வெளியேறுதல். இதனால், நீச்சத்து குறைபாடு ஏற்படும்.

சிகிச்சை

இது பொதுவாக இரண்டு நாட்களில் குணமாகி விடும். குழந்தையை கவனித்துக்கொண்டே இருங்கள். மேலும், குழந்தையின் நிலை குறித்து மருத்துவ ஆலோசனையை பெறுங்கள். நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தடுப்பு முறைகள்

குழந்தையின் சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பாட்டிலில் பால் கொடுப்பதை முதல் சிறிது மாதங்களுக்கு தவிர்க்க வேண்டும். உங்கள் குழந்தைக்கு சுத்தமாக தயாரித்த உணவுகளை கொடுக்க வேண்டும்.

3 சுவாச பகுதியில் ஏற்படும் வைரஸ் தொற்று

அறிகுறிகள்

இதன் அறிகுறிகள் சளிக்கான அறிகுறிகளை ஒத்திருக்கும். ஆனால் இந்த நிலை தொடர்ந்தால் அது மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் மூச்சு திணறலுக்கு வழிவகுக்கும். இது நுரையீரலுக்கு பரவினால் அது நிமோனியாவுக்கு வழிவகுக்கும்.

சிகிச்சை

ஆரம்ப கட்டத்தில் சளிக்கான அதே சிகிச்சைகள் போதுமானது. ஆனால் ஒரு வாரத்திற்கு மேல் இது தொடர்ந்தால், மருத்துவரை அணுகவும்.

தடுப்பு முறைகள்

குழந்தையின் சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குழந்தை இருக்கும் இடத்தில் யாரும் புகைபிடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உங்கள் குழந்தையை தூக்கும் முன் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.

4 காய்ச்சல்

அறிகுறிகள்

அதிக உடல் வெப்பநிலை

சிகிச்சை

குழந்தைக்கு பெரிய பாதிப்பு ஏதும் இல்லை என்றால், மருத்துவர் பரிந்துரைக்கும் வலி நிவாரணிகள் மற்றும் சூடான நீரில் துணியை நனைத்து ஒத்தடம் கொடுத்தாலே போதும். ஆனால் குழந்தை மிகவும் அசௌகரியமாக காணப்பட்டால் மருத்துவரிடம் அழைத்துசெல்லவும்.

தடுப்பு முறைகள்

குழந்தையின் சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதனால் குழந்தைகளை கிருமிகளிடம் இருந்து பாதுகாக்க முடியும்.

5 காதில் நோய்தொற்று

அறிகுறி

அசௌகரியதால் அழுவது, இரவில் அடிக்கடி விழிப்பது

சிகிச்சை

குழந்தைகளுக்கான வலி நிவாரணிகள் இதற்கு உதவும். காதில் இருக்கும் திரவம் வெளியற, குழந்தையை நேராக பிடித்துக்கொள்ளுங்கள். அதன் பின்னரும் குழந்தை அசௌகரியமாக உணர்ந்தால், மருத்துவரிடம் அழைத்துச்செல்லுங்கள்.

தடுப்பு முறைகள்

அலர்ஜி ஏற்படுத்தும் பொருட்களை தவிர்த்திடுங்கள். குறிப்பிட்ட காலம் வரை தாய்ப்பால் கொடுங்கள். குழந்தையின் சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதனால் குழந்தைகளை கிருமிகளிடம் இருந்து பாதுகாக்க முடியும்.

6 கை, கால் மற்றும் வாய்

அறிகுறி

களைப்பு, காய்ச்சல், தொண்டை புண், கொப்புளங்கள் மற்றும் கை, கால், வாய்களில் கொப்புளங்கள் ஏற்படும். சில நேரங்களில் சருமத்தில் தடிப்புகள் ஏற்படும்.

சிகிச்சை

தொண்டை புண், குளிர்ந்த திரவங்கள் கொண்டு சரிசெய்யலாம். காரமான உணவுகள் மற்றும் திரவங்களை தவிர்க்கவும். உங்கள் குழந்தை வலியைப் போக்க இப்யூபுரூஃபன் அல்லது அசெட்டமினோபன் உதவும்.

தடுப்பு முறைகள்

குழந்தையின் சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். உங்கள் குழந்தையை தூக்கும் முன் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.

7 இரைப்பை நோய்

அறிகுறிகள்

வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி.

சிகிச்சை

நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவதை தவிர்க்க குழந்தைக்கு நிறைய திரவங்கள் கொடுக்க வேண்டும்.

தடுப்பு முறைகள்

குழந்தையின் சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

என்ன தான் குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனாலும், உங்கள் அன்பு மற்றும் கவனிப்பால் அது விரைவில் குணமாகி விடும். இந்த மாதிரியான சூழ்நிலைகளுக்கு நம்மை தயார்படுத்திக்கொள்வது மிகவும் நல்லது. 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon