Link copied!
Sign in / Sign up
9
Shares

பிறந்த மாதம், குழந்தைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறதா? உண்மை உள்ளே..!

பெற்றோர்கள், தங்கள் குழந்தை கருவில் உருவான அந்த நொடி அல்லது பிறந்த பின் என அவர்களின் எதிர்காலத்தைக் குறித்த கனவுகளை தீவிரமாக காண ஆரம்பிப்பர். வாழ்க்கை என்றால் என்ன என்று கூட விளங்காத குழந்தையிடம் சிறு வயது முதலே எதிர்காலத்தை பற்றி பேசி பயமுறுத்துவது அல்லது குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் என ஜோசியர்களிடம் கேட்பது, குழந்தைகளிடம் தன் விருப்பத்தை திணிப்பது என பல வழிகளில், குழந்தைகளின் எதிர்காலம்  தீர்மானிக்கப்பட்டு வருகிறது. 

இதெல்லாம் ஒருபக்கம் இருந்தால், சமீபத்தில் இலண்டனில் நடத்தப்பட்ட ஆய்வில், குழந்தைகள் பிறந்த மாதமும் அவர்கள் வாழ்வில் என்னவாக ஆகப் போகிறார்கள் என தெரிவிக்கிறது - என்று கண்டறியப்பட்டுள்ளது. அப்படி மாதங்கள் கூறும் குழந்தைகளின் எதிர்கால குறிப்பை இந்த பதிப்பில் படித்தறியலாமா பெற்றோர்களே..!

 

ஜனவரி!

முதல் மாதத்தில் பிறந்த குழந்தைகள் வாழ்வில், சமுதாயத்திற்கு நன்மை செய்யும், debt collector அதாவது ஆட்சியர்கள் ஆவார்கள் என கண்டறியப்பட்டுள்ளது..!

பிப்ரவரி..!

இரண்டாம் மாதத்தில் பிறந்த மழலைகளோ, வரலாறு படைக்கும் ஓவியர்களாக மாறுவதாக அறியப்பட்டுள்ளது.

மார்ச்..!

மூன்றாம் மாதத்தில் பிறந்த முழுமதிகள்.., வாழ்வில் வானத்தை அளக்கும் பைலட் அதாவது விமான ஓட்டிகள் ஆவதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஏப்ரல் மற்றும் மே..!

இந்த இரண்டு மாதத்தில் பிறந்தவர்களுக்கு எதிலும் ஜெயமே! அவர்கள் தங்களுக்கு விரும்பிய எந்த துறையையும் தேர்ந்தெடுக்கலாம்; அப்படி தேர்ந்தெடுத்தது எதுவாயினும், அவர்கள் அதில் வெற்றிக் கொடியே நாட்டவர்கள்..!

டிசம்பர்!

இந்த மாதத்தில் பிறந்த குழந்தைகள் எதிர்காலத்தில், மக்களின் வலியை போக்கி, வளமான பல் அளிக்கும், பல் மருத்துவர்கள் ஆவார்கள் என அறியப்பட்டுள்ளது.  

வசந்த கால மாதங்களில் பிறந்த குழந்தைகள் உடல் நலத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்; மேலும் அவர்களின் எதிர்காலத்திலும் நன்கு அக்கறை காட்ட வேண்டும்.

நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் படி, மேற்கூறிய விஷயங்கள் பெரும்பாலும் நடப்பதாகவும், அனைத்தும் ஆராய்ச்சியில் தெரிந்து விடுவதில்லை. மற்ற மாதங்களில் பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது பற்றிய சரியான முடிவு கிட்டவில்லை; ஒருசில விஷயங்கள் குழந்தைகளின் தலைவிதிப்படியே நடக்கின்றன எனவும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் நமக்கு அப்பாற்ப்பட்ட சக்தியால் தான் ஒவ்வொரு நிகழ்வும் நடக்கின்றன. அது கடவுளா அல்லது அறிவியலா என்பது இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon