Link copied!
Sign in / Sign up
3
Shares

பிறந்த குழந்தையின் உடல் எடை - விவரம்..!

பிள்ளையைப் பெற்ற பெற்றோர்களுக்கு பெரும் கவலையாய் இருப்பது தங்கள் குழந்தையின் எடை. என்னதான் ஆரோக்கியமான உணவை பார்த்து பார்த்துக் கொடுத்தாலும், குழந்தையின் எடை சரியாகதான் உள்ளதா? இல்லையா? என்ற சந்தேகம் பெற்றோர் மனதைக் குடைந்தெடுக்கிறது. அந்த சந்தேக குடைச்சலுக்கு தீர்வு தரும் வகையில் இந்த பதிப்பினை வழங்குகிறோம்; படித்து பயனடையவும்...

பெரும்பாலான குழந்தைகள் பிறந்த புதிதில் (38-40 வார கருவறை வாசத்திற்கு பின்) 5-10 lbs அதாவது, (2.26 to 5.43 kgs) எடையினை கொண்டிருப்பர். குழந்தைகள் இந்த காலகட்டத்தில், இந்த எடையில் பிறந்தால், கவலை கொள்ள தேவையில்லை. குழந்தைகள் நல்ல உடல் நலத்துடன், சிறிது எடை கூடுதலாகவோ, குறைவாகவோ இருந்தால், கவலை வேண்டாம்.

குழந்தையின் எடை 2.5kg (5.5 lbs)-க்கு குறைவாக இருந்தால், அது குறைந்த எடையில் பிறந்த குழந்தை. இவ்வித பிறப்பு இரட்டையர்களில் நடைபெறுகிறது; 50% இரட்டையர்கள் 37 வாரத்திலேயே 2.5 kg-க்கு குறைவான எடையுடனேயே பிறக்கின்றனர்.

குழந்தைகள் 4kg (8.8lbs)-க்கு அதிகமான எடையுடன் பிறந்தால், அவர்கள் macrosomia என்று அழைக்கப்படுகின்றனர்; தாய்க்கு கர்ப்பகாலத்தில், சர்க்கரை நோய் இருந்தால், இவ்வகை குழந்தைகள் பிறக்கின்றனர்.

கர்ப்பகாலத்தில் தாய்க்கு ஏற்படும் உடல் கோளாறுகள், குழந்தைக்கு ஏற்படும் கோளாறுகள், குழந்தையின் பிறப்பு வரிசை (அடுத்தடுத்து பிறக்கும் குழந்தைகளை விட, முதல் குழந்தை சிறிதாகவே இருக்கும்), குழந்தையின் பாலினம் (பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளை விட சிறியதாக இருப்பர்), அதிக குழந்தைகளை பிரசவித்தல், கர்ப்பகால உணவு முறை இது போன்ற காரணிகள் குழந்தையின் உடல் எடையை தீர்மானிக்கின்றன.

குழந்தை பிறந்த முதல் 5-7 நாட்களில், புட்டிப்பால் குடித்த குழந்தைகளில் 5% உடல் எடை குறைவும், தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளில் 7% உடல் எடை குறைவும் ஏற்படுகிறது. ஆனால், கவலை வேண்டாம் தாய்மார்களே! இந்த உடல் எடை குறைவு தற்காலிகமானதே. குழந்தைகள் இழந்த உடல் எடையை சில நாட்களில் மீண்டும் பெறுவர்.

பிறந்த 6 மாதத்தில், பிரசவத்தின் போது இருந்ததை விட இருமடங்கு உடல் எடை பெறுவர்; பின் உடல் எடை கூடுவதும் குறைவதுமாக இருக்கும். இது உணவு மற்றும் ஊட்ட முறையில் உள்ள மாறுபாடலும், குழந்தையின் உடற்செயலியல் மாற்றத்தாலும் ஏற்படும்.

உங்கள் குழந்தையின் உடல் எடையை தொடர்ந்து கண்காணித்து, குழந்தையை அரவணைப்போடு பேணிக் காப்பாற்றுங்கள்..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon