Link copied!
Sign in / Sign up
8
Shares

பிறந்த குழந்தையின் இயல்பான மற்றும் இயல்பற்ற மாற்றங்கள்..!

பெண்களே! புதிய தாய்மார்களே! 10 மாதங்கள் குழந்தையை கருவறைக்குள் வைத்து பூஜித்து, குழந்தையைப் பற்றி மட்டுமே எண்ணி, வாழ்ந்து வந்திருப்பீர். அப்படி தவ வாழ்வு வாழ்ந்த நீங்கள், உங்கள் அருமைக் குழந்தைச் செல்வத்தை பெற்றெடுத்த பின்னர், குழந்தையின் என்னென்ன செய்யும், அதன் செய்கைகளில் எது ஆரோக்கியமானது, எது ஆரோக்கியமற்றது என்பது பற்றியெல்லாம் அறிந்திருக்க வேண்டும்; அவ்வாறு அறிந்திருந்தால் மட்டுமே குழந்தைக்குத் தேவையானவற்றை சரியாக செய்து சிறந்த அன்னையாக விளங்க முடியும்..!

அப்படி பிறந்த குழந்தையின் இயல்பான மற்றும் இயல்பற்ற மாற்றங்கள் குறித்து இப்பதிப்பில் படித்தறிவோம்..!

இயல்பான மாற்றங்கள்

1. குழந்தை பிறந்த 4-6 மணிக்குள் கரும்பச்சை நிறத்தில், 3 அல்லது 4 முறை மலம் கழிக்கும்

2. பின்னர், இரண்டாவது மற்றும் மூன்றாவது நாள்களில் பசுமை கலந்த மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில், 8-10 முறை மலம் கழிக்கும்

3. பிறந்த குழந்தைக்கு கட்டாயம் தாய்பால்(சீம்பால்) அளிக்க வேண்டும்; தாய்பால் அருந்திய குழந்தை முதல் 2 வாரங்கள் வரை, பால் குடிக்கும் ஒவ்வொரு முறையும் மலம் கழிக்கும்; சில குழந்தைகளோ 2 அல்லது 3 நாள்களுக்கு ஒரு முறை மலம் கழிக்கும் 

4. குழந்தைகள் பிறக்கும் தருணமே சிறிநீர் கழித்து விடுவதால், குழந்தைகளுக்கு முதல் 2 நாட்களுக்கு மிகக்குறைவான அளவே சிறுநீர் வெளியேறும் 

5. குழந்தை மலம், சிறுநீரினை ஒவ்வொரு முறை கழிக்கையிலும், அவர்கள் அழுவதும் அல்லது உடலை முறுக்கி அழுவதும் சாதரணமாக நிகழக்கூடிய மாற்றங்களே!

6. குழந்தைகள் தூங்குகையில் சில சமயம் வேகமாக மூச்சு எடுக்கலாம். சில குழந்தைகள் பால் குடிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் தூங்கிகொண்டிருக்கும்

7. குழந்தைகள் அடிக்கடி அழுவதும் சாதாரணமான மாற்றமே!

இயல்புக்கு மாறான மாற்றங்கள்

1. குழந்தையின் கால்கள், உள்ளங்கை நீலம் அல்லது வெளிறிய நிறமாதல் 

2. குழந்தையின் உடல், கை, கால்கள் அதிக சூடு அல்லது அதிக குளிர்ச்சியாக இருத்தல்

3. வயிறு உப்புத்தன்மை மற்றும் மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் தொடர்ந்து வாந்தி எடுத்தல் 

4. குழந்தையின் முகம், உடல், கண்கள் மஞ்சள் நிறமாக இருத்தல்

5. குழந்தை பால் குடிக்காமல், சோர்வாய் இருத்தல்

6. தொடர்ந்த வேகமான மூச்சினை சிரமத்துடன் விடுதல், மூச்சு திணறல் 

இந்த இயல்பற்ற அறிகுறிகள் குழந்தையிடம் தென்பட்டால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon