Link copied!
Sign in / Sign up
0
Shares

பிறந்த குழந்தைக்கு பருவ நிலைக்கு ஏற்ற ஆடைகள்

பொதுவாகவே குழந்தை பிறந்த உடன் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நண்பர்கள், உறவினர்கள் என குழந்தைக்கு தேவையான ஆடைகள், விளையாட்டு பொருட்கள் என அனைத்தையும் வாங்கி கொடுப்பார்கள். அவை குழந்தைக்கு ஏற்றது தான பார்த்து குழந்தைக்கு அணிவிக்கலாம்.

புதிதாய் பிறந்த குழந்தைகளுக்கு ஆடை அணிவிப்பது சற்று கவனமாக கையாள வேண்டிய விசயமாகும். நாம் அணிவிக்கும் ஆடைகள் குழந்தைகளுக்கு உறுத்தாத வகையில் இருக்க வேண்டும். குழந்தையின் உடல் தட்ப வெப்பத்திற்கு ஏற்ப சரியான உடைகளை தேர்ந்தெடுத்து அணிவிக்க வேண்டும்.

கோடை கால ஆடைகள்

பிறந்த குழந்தை அடிக்கடி சிறுநீர் கழிக்கும். எனவே எளிதாக கழற்றி மாட்டக்கூடிய ஆடைகளை அணிவிக்க வேண்டும். கோடை காலத்தில் பருத்தி துணிகளினால் ஆன ஆடைகள் என்றால் குழந்தைகளின் சருமத்திற்கு ஏற்றது. வியர்வையினால் நனைந்து குழந்தைக்கு சளி பிடிக்காமல் இருக்கும்.

கோடையில் சிந்தெடிக் மெட்டீரியல் துணிக்களை அணிவித்தால் அது குழந்தைகளின் சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் குழந்தைகளுக்கு அணிவிக்கும் ஆடைகள் அதிக எடை இல்லாமல், மெல்லிதானதாகவும், மென்மையானதாகவும் இருக்க வேண்டும்.

குளிர்கால ஆடைகள்

அதே சமயம் குளிர்காலம் என்றால் மென்மையான கம்பளிகளினால் ஆன ஆடைகளை குளிர் தாக்காதவாறு இரவு நேரங்களில் அணிவிக்கலாம். பாதங்களை காக்க குழந்தைகளுக்கு காலுறை அணிவியுங்கள். அது குளிருக்கு இதமாய் இருக்கும். 

ஆரோக்கியமான ஆடைகள்

பொதுவாக குழ‌ந்தைக‌ளி‌ன் ஆடைக‌ள் ‌மிகவு‌ம் சு‌த்தமாக இரு‌க்க வே‌ண்டு‌ம். அ‌திலு‌ம் கை‌க் குழ‌ந்தை‌யி‌ன் ஆடைகளு‌க்கு அ‌திக கவன‌ம் தேவை. அ‌வ்வ‌ப்போது ஆடைகளை மா‌ற்‌றி‌க் கொ‌ண்டே இரு‌ப்பது ந‌ல்லது. ஒரு நாளு‌க்கு 3 முத‌ல் 5 உடைகளையாவது மா‌ற்ற வே‌ண்டு‌ம்.

பொதுவாக குழ‌ந்தைக‌ளி‌ன் ஆடைக‌ள் மெ‌ல்‌லிய பரு‌த்‌தி து‌ணிகளா‌ல் தை‌க்க‌ப்ப‌ட்டதாகவு‌ம், ப‌ட்ட‌ன், ஊ‌க்கு‌ப் போ‌ன்றவை இ‌ல்லாததாகவு‌ம் இரு‌ப்பது ந‌ல்லது. கையில்லாத காட்டன் சட்டை காற்றோட்டமுள்ள துணிகளை அணிவிக்கலாம். முடிபோடு‌ம்படியான நாடா‌க்க‌ளை கொ‌ண்டதாக ஆடைக‌ள் இரு‌க்கலா‌ம். இறு‌க்கமான ஜ‌ட்டிக‌ளை தயவு செ‌ய்து பய‌ன்படு‌த்த வே‌ண்டா‌ம்.

குழந்தைகளின் உடைகளை சுத்தமாக துவைத்து, கிருமி நாசினி தன்மை கொண்ட திரவங்களால் நன்கு அலசி வெயிலில் நன்கு உலர விட வேண்டும். இதன் மூலம் குழந்தைகளுக்கு ஆடைகளின் மூலம் ஏற்படும் நோய் தொற்றை தவிர்க்கலாம்.

 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon