Link copied!
Sign in / Sign up
2
Shares

பிறந்த குழந்தைகளின் அழுகைக்கான 9 காரணங்கள்

குழந்தையின் அழுகையை பார்த்து தாய் மகிழ்ச்சியை அடைந்த முதல் மற்றும் கடைசி தருணம் குழந்தையின் முதல் அழுகையை தான் இருக்கும். குழந்தை பிறந்து அவர்கள் பேசும் வரை அவர்கள் எதற்காக அழுகிறார்கள் என்பது தாய்க்கு பெரிய புதிராகவே இருக்கும். குழந்தைகள் பசிக்கு அழுகிறார்களா அல்லது உடல் நாள் குறைபாடு காரணமாக   அழுகிறார்களா என தாய்மார்கள் பெரிதும் கவலையடைவார்கள். 

குழந்தையின் அழுகையை நீண்ட நேரமாக நிறுத்த முடியவில்லை என கவலை கொள்ளும் தாய்மார்களும் இருக்கிறார்கள். குழந்தைகள் எதற்காக அழுகிறார்கள் என்பதை கண்டறிய வேண்டியது அவசியம். இங்கு குழந்தைகளின் அழுகைக்கான காரணங்களை பார்க்கலாம்.

1 பசி

குழந்தை அழுதாலே பசிக்காகத் தான் அழுகிறார்கள் என சில தாய்மார்கள் பால் புகட்ட துவங்கி விடுவார்கள். ஆனால் குழந்தைகள் வேறு சில காரணங்களுக்காகவும் அழலாம். எனவே குழந்தை பசியினால் தான் அழுகிறதா என்பதை தாய் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். குழந்தையின் தாய் சுத்தமான விரலை குழந்தையின் வையில் வைக்க வேண்டும். குழந்தை விரலை சப்ப துவங்கினால், குழந்தை அழுவது பசிக்காக தான் என்பதை தாய் உணரலாம். அதுவே பால் குடித்த சிறிது நேரத்திற்குள் அழுதால், அது பசிக்கான அழுகை அல்ல.

2 தாகம்

குழந்தைகள் பசியினால் மட்டுமின்றி தாகம் எடுத்தாலும் அழுவார்கள். ஆறு மாதத்திற்கு பின் குழந்தைக்கு திட உணவுகளை அறிமுகப்படுத்தி இருப்போம். தாய்ப்பால் மட்டுமே குடித்து கொண்டிருந்த குழந்தைக்கு சற்று திடமாக உணவு கொடுக்கும் போது, விக்கி கொள்ளும் வாய்ப்புகள் ஏற்படும். இதனாலும் குழந்தைகள் அழலாம்.

3 சிறுநீர்

குழந்தைகள் பால் குடித்தவுடன் அல்லது தூங்கி எழுந்தவுடன் செரித்த உணவினால் சிறுநீர் அல்லது மலம் கழிக்கலாம். இதனால் குழந்தைகளின் படுக்கை ஈரமாகி அசௌகரியத்தை ஏற்படுத்தும். இதனாலும் குழந்தைகள் அழுவார்கள். குழந்தைகள் பெரும்பாலும் இரவில் அழுவதற்கு இதுவே காரணமாகிறது.

4 ஆடை மற்றும் ஆபரணங்கள்

குழந்தைகளுக்கு ஆடை வாங்கும் பெற்றோர் குழந்தைக்கு பொருத்தமானதாக, அழகானதாக பெற்றோர் பார்த்து பார்த்து வாங்குவார்கள். ஆனால், அவை குழந்தைகளுக்கு சௌகர்யமாக இருக்குமா என்பதை பார்க்க மறந்து விடுவார்கள். இதனால் குழந்தையின் ஆடை சற்று அதிக கனம் உடையதாகவோ, இறுக்கமாகவோ அல்லது அழுந்தும் படியான ஆடைகளாலும் குழந்தைகள் அழுவார்கள். குழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் கொலுசு, அரைஞான் கயிறு போன்ற ஆபரணங்களில் பிரச்சனை இருந்தாலும் குழந்தைகள் அழுவார்கள்.

5 டயபர்

குழந்தைகளுக்கு எப்போதும் இடுப்பு பகுதில் மென்மையான துணிகளை மட்டுமே உபயோகிப்பார்கள். அவற்றை துவைத்து காய வைத்து மீண்டும் உபயோகிப்பார்கள். இப்போது எளிமையாக உபயோகித்து தூக்கி எறியும் டயபர்கள் கிடைப்பதால் அவற்றிற்கு மாறி விடுகிறார்கள். இதனால் சில சமயத்தில் மென்மையான குழந்தைகள் சருமத்தில் ஒவ்வாமை ஏற்பட்டு அழற்சி மற்றும் சரும பிரச்சனைகள் ஏற்படும். இதனாலும் குழந்தைகள் அழுவார்கள்.

6 பூச்சி

நீங்கள் என்ன தான் கவனமாக பார்த்து கொண்டாலும், உங்களுக்கும் தெரியாமல் சில பூச்சிகள் குழந்தைகளை கடிக்க வாய்ப்புள்ளது. எறும்புகள் குழந்தைகளின் மீது ஊர்வதை உணரும் போதும் குழந்தைகள் அழுவார்கள். மாலை நேரத்தில் கொசு கடிப்பதன் காரணமாகவும் குழந்தைகள் அழுவார்கள்.

7 உடல்நல குறைபாடு

குழந்தைகளுக்கு வயிற்று வலி, காது வலி, வயிற்று போக்கு, சளி, இருமல், மூக்கடைப்பு, மூச்சுத்திணறல் என உடல்நல குறைபாடுகள் ஏற்படும். இவற்றின் விளைவாகவும் குழந்தைகள் அழலாம்.

8 சோர்வு மற்றும் தூக்கம்

குழந்தைகள் சில நேரத்தில் சோர்வு மற்றும் தூக்கமின்மை காரணமாகவும் அழுவார்கள். அப்போது அவர்களை தூங்க வைக்க வேண்டியது அவசியம்.

9 தனிமை

குழந்தைகள் தங்களை கவனிக்கவோ அல்லது அவர்களுடன் விளையாடவோ யாரும் இல்லாமல் தனிமையில் இருக்கும் போதும் அழுவார்கள். அப்போது பொம்மைகளை விளையாட கொடுத்தாலோ அல்லது அவர்களை கொஞ்சினாலோ அழுகையை நிறுத்திவிடலாம்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon