Link copied!
Sign in / Sign up
6
Shares

பிறந்த 3 மாதங்களுக்கு குழந்தையின் தலை நிற்காதது ஏன்?

குழந்தைகள் தாயின் கர்ப்பத்தில் இருந்து பிறந்தவுடனே, சக்தியானவர்களாக இருக்க மாட்டார்கள்; அவர்கள் மிகவும் மிருதுவான தேகம் கொண்ட, அனைத்து உடல் பாகங்களும் வளர்வதற்கான சரியான ஆற்றலை எதிர்பார்த்து, நோய் எதிப்பு சக்தி ஆரம்ப கட்டத்தில் இருக்கும். இப்படிப்பட்ட நிலையில் பிறந்த பச்சிளம் குழந்தையை மிகவும் கவனமாக கையாளல் வேண்டும். இந்த பதிப்பில், பிறந்த பச்சிளம் குழந்தையை எப்படி கவனமாக கையாள்வது என்று படித்தறியலாம்..!

தலை நிற்காதது ஏன்?

பிறந்த குழந்தைகளின் சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும் இருக்கும்; அதனால் பச்சிளம் குழந்தை பராமரிப்புக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். முக்கியமாக, குழந்தையின் முதுகெலும்பு பகுதி அத்தனை வலுவாக இருக்காது; இதன் காரணமாகவே, தலையின் பாரத்தை சுமக்கும் வலிமையை குழந்தையின் முதுகு கொண்டிருக்காது. அதனாலேயே 3 மாதம் வரை குழந்தையின் தலையை கவனமாக பிடித்துக் கொள்ள வேண்டும்.

தொட்டிலிலிருந்து குழந்தையை தூக்கும்போது மிகவும் கவனமாகக் கையாள வேண்டும்; மற்றவர்கள் குழந்தையை கொஞ்சுவதற்கு தூக்குகையிலும் குழந்தையின் தலையை நன்றாக தாங்கி பிடிக்கும் வண்ணம் கைகளை வைத்திருக்கிறார்களா? என்று கவனத்துக் கொள்ள வேண்டும்.

அழுகையின் காரணம்..!

பிறந்த குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்தால், அதன் அழுகைக்கு பசி மட்டுமே காரணமாக இருக்காது; குழந்தைக்கு சோர்வாகவோ, அசௌகரியமாகவோ இருந்தாலும், குழந்தை அழுகையின் மூலமே வெளிப்படுத்தும். அதனை தாயார் புரிந்து கொண்டு செயல்படல் வேண்டும். 

தூங்கும் நேரம்

குழந்தையின் தூங்கும் நேரம் நன்கு அதிகமாக இருப்பதே, அதன் உடல் ஆரோக்கியத்திற்கு மிக்க நலம் சேர்க்கும்; ஆதலால், பிறந்த பச்சிளம் குழந்தையின் தூக்கத்திற்கு இடையூறாக உள்ள விஷயங்களை கவனத்தில் கொண்டு, அவற்றை களைய வேண்டியது அவசியம்.

தாய்ப்பால்..!

குழந்தைக்கு ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளியில், தாய்ப்பால் கொடுப்பதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்; அந்நேர வரைமுறையில் இடைவெளி விழுந்து விடக்கூடாது. குழந்தைக்கு நேரம் தவறாமல், அதன் பசியை போக்கும் வண்ணம் பால் அளிக்க வேண்டும்; இது அதன் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். மேலும் குழந்தையின் உடல் எடை அதிகரிப்புக்கும், வளர்ச்சிக்கும் தாய்ப்பால் துணை புரியும்.

தூக்குதல்..

குழந்தையை கொஞ்சுகையில் குலுக்கவோ, தூக்கிப்பிடித்தோ கூடாது; அது குழந்தைக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். 

குளிப்பாட்டல்..

குழந்தையை குளிப்பாட்டும்போதும் மிகவும் கவனமாக கையாள வேண்டும்; வெது வெதுப்பான நீரில்தான் குழந்தையை குளிக்க வைக்க வேண்டும். ஆரம்ப நாட்களில் பஞ்சு எனும் ஸ்பாஞ்சுகளை பயன்படுத்துவது சிறந்தது. குழந்தைக்கு மிருதுவான சருமமாக இருக்கும் என்பதால், அதற்கேற்ற மென்மையான சோப்பு மற்றும் நல்ல எண்ணெய்யை உபயோகிக்க வேண்டும்.

குழந்தையை குளிப்பாட்டுகையில், அதன் காதுகளிலோ, மூக்கிலோ தண்ணீர் உட்புகாத படி  மிகக் கவனமாக குளிக்க வைக்க வேண்டும். குழந்தையின் ஆழ்ந்த தூக்கத்திற்கு குளியல் மிக அவசியம் என்பதால், அவ்வழக்கத்தை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். குழந்தைக்கு ஏதேனும் நோய் தொற்று ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் மட்டுமே குழந்தையின் குளியல் விஷயத்தில் டாக்டரிடம் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும்.

நகங்கள்..!

குழந்தையின் கைவிரல் நகங்கள் மிகவும் மென்மையாகவும், மெல்லியதாகவும் இருக்கும்; அவை மிக வேகமாக வளர்ந்து கொண்டே இருக்கும். வாரத்தில் 2 முறையாவது குழந்தைக்கு கட்டாயம் நகம் வெட்ட வேண்டியிருக்கும். குழந்தையின் நகங்களை வெட்ட, நகவெட்டியை உபயோகிக்கும்போது மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்; குளிர்காலத்தில் குழந்தையை பனியில் இருந்து காக்க, பனி தாக்கங்களை கட்டுப்படுத்தும் ஆடைகளை அணிவிக்க வேண்டும்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon