Link copied!
Sign in / Sign up
10
Shares

பிறந்த குழந்தையின் கண்களுக்கு நீங்கள் எவ்வாறு தெரிவீர்??

பத்து மாத கருவறை வாசத்திற்கு பின், அன்னையின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு, அழுகையொலியுடன் பூமியைக் காண பிரவேசிக்கும் குழந்தையை கண்டவுடன் பெற்றோர்கள் அடையும் ஆனந்தத்திற்கு அளவே இருக்க முடியாது. அழகான முகத்துடனும், மிருதுவான சருமத்துடனும், குட்டி குட்டி கை, கால்களுடனும், மிரண்ட பார்வையுடனும் பிறந்த குழந்தை உங்களை, உங்கள் முகத்தை பார்ப்பதாய் நீங்கள் நினைத்தால், அது தவறு நண்பர்களே!

குழந்தை பிறந்த முதல் நாளே அதன் கண்கள் முழுவளர்ச்சி பெற்றிருக்காது; குழந்தை பிறந்தது முதல் 1 வயது வரை குழந்தையின் கண்கள், அதாவது பார்க்கும் திறன் முழுமையான வளர்ச்சியை பெற்றிருக்காது. குழந்தைகள் 12வது மாத கால வயதை அடையும் போது தான், அவர்கள் பார்வை முழு வளர்ச்சி நிலையை அடையும்.

பிறந்த குழந்தைக்கு எதுவும் தெரியாமல், அனைத்து பொருட்களும் மனிதர்களும் மங்கலாய் தெரியும்; 4 மாத காலத்தில் அன்னையின் முகம் மட்டும் குழந்தைக்கு புலப்படும்; பின்னர் 7 மாதத்தில் அன்னையுடன் தந்தை மற்றும் சில உறவுகளின் முகங்கள் புலப்பட தொடங்கும். 12 வது மாதம் அதாவது ஒரு வயது பூர்த்தி அடைகையில் குழந்தையால் அனைத்தையும் மிகத்தெளிவாக பார்க்க முடியும்..!

இந்த விஷயத்தை நீங்கள் இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த காணொளியை பதிப்புடன் இணைக்கிறோம்; படித்து பார்த்து அறிந்து கொள்ளவும்..!!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon