Link copied!
Sign in / Sign up
1
Shares

பிறக்கப்போகும் குழந்தையை பற்றி, உங்கள் மனதில் வந்து போகும் 5 விஷயங்கள்..!

பொதுவாக பெண்களின் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒருவித பெரிய மாற்றம் நிகழ்கிறது; உதாரணத்திற்கு குழந்தையாய் பிறந்த பெண் சிறுமியாகும் போது அவளின் மனதில், நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் உண்டாகின்றன; அதே சிறுமி பூப்படைந்து குமரியாய் இருக்கையில் வேறுவித உணர்வுகளும், பின்னர் ஒரு ஆணுக்கு மனைவியாய் இருக்கையில் சில மாற்றங்களும் தோன்றுகின்றன; வாழ்வின் உச்சகட்டமாக தாய்மை அடைகையில், பெண்ணின் மனதில் ஏற்படும் மாற்றங்கள், பெண்ணின் வாழ்வின் முடிவு வரை தொடர்கின்றன.

இவ்வகையில், ஒரு பெண் தான் கர்ப்பமுற்றிருப்பதை அறிந்தவுடன், அவள் மனதில் தன் குழந்தையை பற்றி வந்து போகும் சில விஷயங்களையே நாம் இந்த பதிப்பில் காண உள்ளோம்!

1. குழந்தையின் உடல்..

குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன், எவ்வித உடல் குறைபாடுகளும் இன்றி பிறக்க வேண்டும்; பிறக்க போகும் குழந்தை ஆணா? பெண்ணா? மேலும் குழந்தையின் முகம் எப்படி இருக்கும் என்று குழந்தையை பற்றி பல வண்ணக் கனவுகள் அந்த பெண்ணின் மனதில் வட்டமிட தொடங்குகின்றன.

2. யாரைப்போல் இருக்கும்?

தனக்கு பிறக்கப்போகும் குழந்தை யாரைப்போல் இருக்கும்? தன்னைப் போன்றா? அல்லது கணவரைப் போன்றா? இல்லை தன் பெற்றோர்/கணவரின் பெற்றோர் போன்றா என்று குழந்தையை குறித்து எண்ணமிட்டுக் கொண்டிருக்கும், கர்ப்பிணிகளின் பேதை உள்ளம்.

3. குழந்தையின் குணாதிசியங்கள்..

குழந்தையின் குணம் யாரைப்போல் இருக்கும்? அல்லது அதற்கென தனி பழக்கங்கள் இருக்குமா? எப்படி நடந்து கொள்ளும்? என்று பலவித எண்ணங்கள் கர்ப்பிணிகளின் மனதில் இடம் பெறுகின்றன.

4. குழந்தையின் எதிர்காலம்..

தனக்கு பிறக்கப்போகும் குழந்தை சரித்திரக் குழந்தையாய் இருக்குமா? இல்லை சாதாரண மனிதராய் இருக்குமா? அது பின்னாளில் என்னவாக ஆகப்போகிறது? குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் - இருக்கும் என்று நடக்கப்போகும் நிகழ்வுகளை குறித்து அடிக்கடி எண்ணிக்கொள்வாள் கர்ப்பிணி.

5. பிரசவம்!

கர்ப்பிணிக்கு தோன்றும் சிந்தனைகளின் உச்சகட்டமாக, தனக்கு நிகழப்போகும் பிரசவம் எப்படி இருக்கும்? மிகவும் வலி ஏற்படுமா? தான் பிழைக்க நேரிடுமா அல்லது வேறு ஏதேனும் நிகழுமா? என்று பலவித குழப்பச் சுழல்களில் சிக்கித்தவிக்கிறது கர்ப்பிணியின் மனது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon