Link copied!
Sign in / Sign up
3
Shares

பிறக்கப்போகும் குழந்தையை கொழுகொழுவென ஆக்கும் 5 உணவுகள்..!

கர்ப்பகாலம் தொடங்கினாலே, பெண்கள் தங்களுக்கு மட்டுமின்றி, தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கும் சேர்த்து நன்கு ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும்; அதாவது சத்துள்ள சரிவிகித உணவுகளை உட்கொள்ளல் வேண்டும். சரிவிகித உணவு என்றாலே அதில் அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள், அதாவது புரதங்கள், கார்போஹைட்ரேட், கொழுப்புகள், விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவற்றை கொண்டிருக்க வேண்டும்.

இந்த ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடல் நலனுக்கும், உங்கள் குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கும் அதிக நன்மை பயப்பதோடு, கர்ப்ப காலத்தை எவ்வித பிரச்சனைகளும் இல்லாத சந்தோஷம் நிறைந்த தருணமாக்க உதவுகிறது. அப்படிப்பட்ட கர்ப்பகாலத்தை இனிமையாக்கும், பிறக்கப்போகும் குழந்தையை கொழுகொழுவென்றாக்க உதவும் கர்ப்பகால உணவுகள் பற்றி இப்பதிப்பில் படித்தறியுங்கள்..!

1. புரதங்கள்!

 

உங்களது கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு புரதம் மிக முக்கியம்; குழந்தையின் எலும்பு, உறுப்புகள், இரத்தம், தசைகள், திசுக்கள் போன்றவை நன்கு வளர புரதம் அவசியம். ஆனால், இதை அளவாகவே உட்கொள்ளல் வேண்டும்; தினசரி உணவின் முதல் பகுதியில் 0.5 கிராம், 2 ஆம் பகுதியில் 6.9 கிராம், 3வது  பகுதியில் 22.7 கிராம் என்ற அளவில் புரதத்தை எடுத்து கொள்ள வேண்டும். ஒரு நாளின் இறுதியில் 78 கிராம் புரதம் என நீங்கள் உட்கொள்ள வேண்டும்.

2. போலிக் அமிலம் 

குழந்தையின் மூளை, நரம்பு, தண்டுவட வளர்ச்சிக்கு போலிக் அமிலம் என்பது மிகவும் முக்கியமானது; கருவின் எடை அதிகரிக்கவும், கருவிற்கு ஹூமோகுளோபின் பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பதற்கும், குழந்தையின் குறை மாத பிரசவ பிரச்சனைகளை தடுப்பதற்கும் போலிக் அமிலம் உதவுகிறது. கர்ப்பிணிகள், ஒரு நாளைக்கு 500 மைக்ரோ கிராம் என்ற அளவில் எடுத்து கொள்ள வேண்டும்.

3. இரும்புச்சத்து 

கருவில் குழந்தை வளருகையில், தாய்க்கும் சேய்க்கும் போதிய அளவு இரும்புச்சத்து இருக்க வேண்டும்; இல்லையெனில் பிறக்கப் போகும் குழந்தைக்கு அனீமியா அதாவது இரத்தசோகை, குறை பிரசவம், எடை குறைதல் போன்றவை பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. இரும்புசத்து தான் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின்கள் ஆக்சிஜனை கடத்த உதவும். எனவே, கர்ப்பிணிகள் ஒரு நாளைக்கு 35 மில்லி கிராம் என்ற அளவில் இரும்புச்சத்தினை எடுத்துக் கொள்ள வேண்டும். அசைவ உணவுகளில் அதிக அளவு இரும்புச்சத்தும், விட்டமின் சி அடங்கிய உணவு பொருட்களான நெல்லிக்காய், லெமன், தக்காளி போன்ற சைவ உணவுகளையும் எடுத்துக் கொள்ளுங்கள்.

4. கால்சியம் 

கால்சியம், கருவில் வளரும் குழந்தையின் எலும்பு மற்றும் பற்களின் வலிமைக்கு பெரிதும் உதவுகிறது; கர்ப்பிணிகளுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் என்ற நோய் ஏற்படாமல் தடுத்து, தாய்ப்பால் சுரப்பையும் அதிகரிக்கிறது. ஆகவே, கர்ப்பிணிகள் ஒரு நாளைக்கு 1200 மில்லி கிராம் அளவு கால்சியத்தை எடுத்துக் கொள்ளல் வேண்டும்.

5. விட்டமின் ஏ 

இது குழந்தையின் பார்வை சக்திக்கும், நோயெதிர்ப்பு சக்தி, கருவின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. குறிப்பாக கர்ப்ப காலத்தின் 3வது பகுதியில் குழந்தையின் விரைவான வளர்ச்சியால், கர்ப்பிணியின் உடலில் விட்டமின் ஏ பற்றாக்குறை ஏற்படும். அதனால், விட்டமின் ஏ அடங்கிய உணவு பொருட்களான பால், வெண்ணெய், முட்டை, கேரட், மீன் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்; கர்ப்பிணிகள் ஒரு நாளைக்கு 800 மைக்ரோ கிராம் என்ற அளவில் விட்டமின் ஏ-வினை உட்கொள்ளல் வேண்டும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
100%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon