Link copied!
Sign in / Sign up
5
Shares

பிள்ளைகளிடம் பெற்றோர்கள் கூறிய நகைச்சுவையான சில விஷயங்கள்!

உங்கள் குழந்தைகளிடம் சில விஷயங்களை கூற நீங்கள் தயாராக இருப்பீர்கள். அவற்றை என்றாவது ஒரு நாள் நீங்கள் குழந்தைகளிடம் கூறி தான் ஆக வேண்டும். ஆனால் அதே சமயம், சில விஷயங்களை அவர்களிடம் கூறுவோம் என்று நீங்கள் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.

இங்கே பிள்ளைகளிடம் பெற்றோர்கள் கூறிய நகைச்சுவையான சில விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

1) அத்தை மற்றும் மாமாவை பயமுறுத்தாதே! (அவள் விசித்திரமான விஷயங்களை ரகசியமாக சொல்லிவிட்டு ஓடினாள்.)

2) மழைபெய்யும் பொழுது தொலைக்காட்சி வேலை செய்யாது. (இல்லையென்றால் அவன் ஹாலை விட்டு நகர மாட்டான்)

3) பப்ளியை கொஞ்சுவதை நிறுத்து. (அது ஒரு அசுத்தமான ஒரு பூனை)

4) உன் சகோதரனை அலமாரியில் இருந்து வெளியே எடு. (அவனுக்கு ஓய்வு எடுக்க நேரம் தேவை போல)

5) நீ புருனோவின் உணவை சாப்பிட்டால், அவர் மிகவும் பசியாக இருப்பார், அதனால் உன்னை சாப்பிட்டு விடலாம். (புருனோ அவர்களின் நாய்)

6) சைனிக்கு அம்மாவை போல மேக்கப் போட பிடிக்காது. (சைனி என்பது அவர்களின் பூனை. அவர்களின் குழந்தைக்கு மேக்கப் போட மிகவும் பிடிக்கும்)

7) ஒரு பேய் உங்கள் சகோதரியுடன் சண்டையிடவில்லை. (அவள் கைகளில் நக காயங்கள் இருந்தன)

8) அடுத்த முறை நீ ஏதாவது உலர்த்த வேண்டும் என்றால் அதை என்னிடமோ அல்லது அப்பாவிடமோ கொடு. அதை மைக்ரோவேவ் ஓவனில் போட கூடாது. (மைக்ரோவேவ் ஓவன் மற்றும் டிரையர் இருப்பது யாருக்கு தெரியும்)

9) நீ ஒரு வாரத்திற்கு 2000 வார்த்தைகள் மட்டுமே பேச வேண்டும். நீ அதை பேசி முடித்து விட்டால், அடுத்த வாரம் வரை பேசாமல் காத்திருக்க வேண்டும். (அவன் அதிகம் வாய்பேசுவான். இது அவனுடைய நல்லதுக்கே)

10) நீ படிக்கவில்லை என்றால் உன்னால் வாய்பேச முடியாது. (இது நன்றாக வேலை செய்தது)

11) நீ அப்பாவின் தொப்பியை அணிந்து கொள்ளலாம், அதற்கு முன் டையப்பரை கீழே போடு. (அவள் வண்டி ஓட்டுபவரை போல் இருக்க வேண்டும் என்பதற்காக டையப்பரை தலைக்கவசமாக பயன்படுத்திக்கொண்டாள்)

12) ஒவ்வொரு நபருக்கும் தனியாக டிவி சேனல் உள்ளது. அதனால் நீ என்ன செய்கிறாய் என்பதை என்னால் கண்காணிக்க முடியும். (அவன் நல்ல பிள்ளையாக ஒழுக்கமான பிள்ளையாக வளர வேண்டும் என்பதற்காக)

13) அழாதே! பெடிக்ரீயும் ஜாமும் ஒன்றாக சாப்பிட முடியாது. (என் வீட்டு சமையல் வல்லுனர் அதை பரிசோதித்து கொண்டிருந்தான்)

14) நீ அதை தொட்டால், அதாகவே மாறிவிடுவாய்; அது உன் இடத்திற்கு வந்துவிடும். (என் சமையல் பாத்திரங்களில் கை வைக்க கூடாது என்பதற்காக. குழந்தைகளுக்கு எந்த பொருளை பார்த்தாலும் கையில் எடுக்க தோன்றும்)

15) உன் அம்மாவிடம் நான் உனக்கு மதிய உணவு கொடுக்கவில்லை என கூறுவதை நிறுத்து. (அதிக உணவை பெற ஒரு புத்திசாலி பெண்ணின் தந்திரம்)

16) அழாதே! நீ பூமிக்குள் புதைய மாட்டாய். (அவன் நிழலை பார்த்து பயந்த பொழுது)

17) கடவுள் அனைத்து குழந்தைகளின் விளக்கையும் இரவு 9 மணிக்கு அணைத்து விடுவார். அதற்கு மேல் விழித்திருக்கும் குழந்தைகளை பூச்சாண்டியை விட்டு அழைத்து சென்று விடுவார். (ஒரு வருடம் வரை 8.30 மணிக்கு எல்லாம் படுத்து விடுவார்கள். ஆனால் ஒரு வருடத்திற்கு முன்பு முழித்திருந்து அது உண்மையா என சோதித்து பார்த்த பொழுது மாட்டிக்கொண்டேன்)

18) போலீஸ் இன்டர்நெட் தொடர்பை மாலை 6 மணிக்கெல்லாம் அணைத்து விடுவார்கள். அதையும் மீறி நீங்கள் பயன்படுத்தினால் உங்களை விடுவார்கள். (இன்டர்நெட் குழந்தைகளுக்கு ஒரு போதை போல)

19) நீ அதற்கு தண்ணீர் ஊற்றி நன்கு பராமரித்து வந்தால், அது ஒரு பூனைக்குட்டியாக மாறும். (பூனை பிடிக்காத ஒரு குழந்தையிடம் அவள் கல் வைத்து விளையாடிய பொழுது அவள் தந்தை கூறியது)

20) உன் பாட்டியின் அலமாரியில் எந்த ஒரு ரகசிய சகோதரியும் ஒளிந்திருக்கவில்லை. (இது எங்கிருந்து அவளுக்கு தோன்றியது என்று தெரியவில்லை)

21) நீ உன் பல்லை விளக்கவில்லை என்றால், பல் தேவதை உன் பற்களை அழுக வைத்து, உன் அடுத்த பிறந்தநாளைக்குள் பற்கள் விழுந்துவிடும். (ஒரு மிகைப்படுத்தல் தான்)

பொய்கள் சில நேரங்களில் கண்டிப்பாக தேவை. நம் பிள்ளைகள் வளர்ந்து நாம் ஏன் ஒரு விஷயத்தை செய்ய சொல்கிறோம் ஏன் செய்ய வேண்டாம் என்று சொல்கிறோம் என்று புரிந்துகொள்ளும் வரையிலாவது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon