Link copied!
Sign in / Sign up
0
Shares

பெற்றோராய் இல்லாத உங்கள் நண்பர்கள் புரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்

பெற்றோராய் மாறிய பின் உங்கள் வாழ்க்கை முன்னர்போல் இருக்காது. தவறான வழியில் செல்லாதீர்கள்; பெற்றோருக்கென்று தனி பொறுப்புகள் உள்ளது. நீங்கள் மகிழ்ச்சியுடன் சில மகிழ்ச்சியான தருணங்களையும் உணருவீர்கள். உங்களுடைய பெற்றோர் ஆகாத நண்பர்களுக்கு ஒரு பெற்றோராக நீங்கள் அடையும் மகிழ்ச்சியை புரிந்துகொள்ள வாய்ப்பில்லை. உங்களுடைய புகைப்பழக்கம், குடிப்பழக்கம் போன்றவற்றை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். உங்களை பற்றி மட்டும் நீங்கள் யோசிக்க இயலாது. ஏனெனில் உங்கள் வீட்டில் உங்களை மட்டுமே நம்பி உள்ள அழகான ஒரு சிறிய உயிர் உள்ளது. அவர்களை பற்றியும் சிந்திக்க வேண்டும்.

துன்பம் கலந்த இன்பமான தருணங்கள்

எதுவாக இருந்தாலும் உங்களின் நண்பர்கள் உங்களை அழைக்காமல் இருக்கமாட்டார்கள். இரவில் தாமதமாக போகும்படி வற்புறுத்துவார்கள், அல்லது திடீரென்று ஏதேனும் திட்டம் போட்டுவிட்டு உங்களை வரும்படி வற்புறுத்துவார்கள். உங்கள் நண்பர்கள் குழுவில் நீங்களே முதலில் குழந்தை பெற்றவராக இருந்தால் இதுதான் பிரச்சினை. நிச்சயமாக உங்களின் நண்பர்களை கைவிட இயலாதுதான். அவர்களே உங்களின் சிறந்த மற்றும் மோசமான தருணங்களில் உங்களுடன் இருந்தவர்கள். ஆனால், அவர்கள் தற்போதைய சூழ்நிலையை சற்று புரிந்துகொண்டால் சிறப்பாய் இருக்கும்.

குழந்தை இல்லாத உங்களின் நண்பர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென நீங்கள் எதிர்பார்ப்பவை:

1. குழந்தைகள் குழப்பமானவர்கள். இது சுலபமாய் புரிந்துகொள்ள கூடியது. வீட்டில் குழந்தை இருக்கும்போது நாம் செய்யவேண்டியவை நிறைய இருக்கும். அவற்றை நண்பர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

2. குழப்பத்தில் வந்து நின்று அதை எளிதில் சமாளிக்க முடியாது. அது எவ்வளவு மோசமானது என்பதை நீங்கள் அறிவீர்கள், நீங்கள் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தப்பட வேண்டிய அவசியமில்லை.

3. திடீரென திட்டம் போட்டு அதை கடைசி நிமிடத்தில் சொல்லி உங்களை வர வற்புறுத்தக்கூடாது. நீங்கள் இளைஞராய் இருக்கும்போது அப்படி இருந்திருக்கலாம். ஆனால், குழந்தை பிறந்தவுடன் அவ்வாறு நினைத்த நேரத்திற்கெல்லாம் வெளியே சுற்ற இயலாது.

4. குழந்தையை பார்த்துக்கொள்ள ஆள் கிடைப்பது மிகவும் சிரமமானது. குழந்தையை பார்த்துக்கொள்ள ஆட்களை தேடும்போது கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. சரியான ஆட்களை மட்டுமே குழந்தைக்காக பணியமர்த்த வேண்டும்.

5. இப்போது கவனித்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது. திட்டமிடாத திடீர் பயணங்கள் எல்லாம் கடந்தகாலத்தில்தான். இப்போது குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்னராவது திட்டமிடுதல் அவசியமாகும்.

6. உங்களுடைய சோர்வு முக்கியமானதல்ல. ஆனால், உங்களின் மோசமான நாள் உங்களின் பொறுமையை இழக்கசெய்யலாம். பெற்றோராய் இருப்பது உங்களை உடல்ரீதியாக மட்டுமில்லாமல், உங்களின் மூளையை கூட சோர்வடைய செய்யும்.

7. சரியாக தூங்கி பல நாட்கள் ஆகியிருக்கும். கடைசியாக உங்கள் மனைவியுடன் எப்போது ஒரு கோப்பை காபியை மகிழ்ச்சியாக குடித்தீர்கள் என்று மறந்திருப்பீர்கள். கடைசியாக எப்போது அமைதியாக உணர்ந்தீர்கள்?. பெற்றோராய் இருப்பது முழு நேர வேலை, நீங்கள் அதில் நுழைந்தாலன்றி, "சோர்வு" என்னவென்று உங்களுக்குத் தெரியாது. உங்கள் நண்பர்கள் அதை புரிந்துகொள்ள முடிந்தால் நன்றாக இருக்கும்.

8. நிச்சயமாக நீங்கள் உங்கள் நண்பர்களை அதிகளவில் சந்திக்க இயலாது. ஆனால், அவர்கள் உங்களின் உண்மையான நண்பர்களாக இருந்தால் உங்களை சந்திக்க அவர்களே முயற்சி மேற்கொள்வார்கள்.

9. உங்களுடைய பெற்றோர் அல்லாத நண்பர்கள் உங்கள் குழந்தைக்கு வழக்கமான பழக்கம் இருப்பதை புரிந்துகொள்ள வேண்டும். மேலும் உங்களால் இதற்கு எதுவும் செய்ய முடியாது என்பதை உணரவேண்டும்.

10. இறுதியாக உங்கள் பெற்றோராய் இல்லாத நண்பர்கள் உங்கள் மீது புகார் சொல்லாமல் இருந்தால் சிறப்பாய் இருக்கும். நீங்கள் வாழ்க்கையில் புதிய பயணத்தை தொடங்கி இருக்கிறீர்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

இவற்றையெல்லாம் புரிந்துகொள்ள கூடிய நண்பர்கள் உங்களுக்கு கிடைத்திருந்தால் நீங்கள் உண்மையாகவே அதிர்ஷ்டசாலிதான். ஒருவேளை இல்லையெனில், உங்களுக்கு எது முக்கியம் என்று முடிவு செய்யவேண்டும். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon