Link copied!
Sign in / Sign up
43
Shares

பெற்றோர்கள் மீதான அன்பை குழந்தைகள் வெளிப்படுத்தும் 10 விதங்கள்


குழந்தைகள் மீதான நம் அன்பை வெளிப்படுத்த நமக்கு பல வழிகள் உள்ளது. ஆனால் குழந்தைகள் அவர்களது அன்பை வெளிப்படுத்தும் போது பெரும்பாலும் நமக்கு அது புரிவதில்லை. ஆனால் அவர்கள் அதை வெளிப்படுத்துவதை எப்போதும் நிறுத்தமாட்டார்கள். நாம் தான் அதை புரிந்துகொள்ள பழகிக்கொள்ள வேண்டும். அவ்வாறு குழந்தைகள் அன்பை வெளிப்படுத்தும்போது எப்படியெல்லாம் வெளிப்படுத்துவார்கள் என்பதை இங்கு பார்ப்போம். 

1 கண்களை உற்றுப்பார்த்தல்

உங்கள் மீதான அன்பையும், ஈர்ப்பையும் குழந்தை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த வழி உங்கள் கண்களை பார்த்து சிரிப்பதுதான். குழந்தை பிறந்த சில வாரங்களிலியே அம்மாவின் கண்களை விடாமல் உற்று பார்த்துக்கொண்டே இருப்பார்கள். அதற்கு அர்த்தம் அவர்கள் உங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதும் அவர்கள் உங்களை அதிகம் புரிந்து கொள்ள முயற்சிப்பதும் ஆகும். அவர்கள் உங்கள் முகத்தை அடையாளப்படுத்த முயற்சிப்பார்கள்.

2 சிரிப்பு

குழந்தை பிறந்த 6 முதல் 8 வாரத்திற்குள் உங்களை பார்த்து அர்த்ததோடு சிரிக்க ஆரம்பிக்கும். இந்த சிரிப்புதான் உங்கள் மனதை மயக்கும் விஷயம் ஆகும். உங்களை பார்ப்பதும் உங்கள் குரலை கேட்பதும் அவர்களை குதூகலப்படுத்தும். அவர்களின் சிரிப்பு என்பது மற்றவர்கள் சுற்றி இருப்பதை காட்டிலும் அவர்கள் உங்களின் இருத்தலையே அதிகம் விரும்புகின்றனர் என்பதின் குறியீடு ஆகும். அவர்களின் தேவைகளை நிறைவேற்ற அவர்கள் உங்களையே அதிகம் நாடுவார்கள். இந்த சிரிப்புதான் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இடையேயான உறவை பலப்படுத்தும் மந்திரமாகும்.

3 அடையாளம் காணுதல்

ஒரு சில வாரங்களுக்குள் குழந்தைகளால், அவர்களின் முதன்மை கவனிப்பாளரை அடையாளம் காண முடியும் என்று உளவியல் ரீதியான ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. இது பெரும்பாலும் மற்றவர்களை காட்டிலும், அவர்களின் தாயாகவே இருக்கிறார்கள். உங்கள் குழந்தையால் உங்கள் முகத்தையும், குரலையும் எந்த ஒரு சூழ்நிலையிலும் பல மக்களுடன் எளிதாக அடையாளம் கண்டுகொள்ள முடியும். உதாரணமாக, உங்கள் குழந்தை மற்றவர்களின் குரலைக் காட்டிலும், உங்கள் குரலை கேட்கும் போது அவர்களின் மகிழ்ச்சி அதிகமாவதை உங்களால் காண முடியும்.

4 இணக்கம்

உங்கள் குழந்தையுடன் ஆரோக்கியமான பந்தத்தை நீங்கள் உருவாக்கியிருந்தால், உங்கள் குழந்தை உங்களுக்கு அதை அவர்களின் செய்கைகள் மூலம் உணர்த்த முயற்சிப்பார்கள். உங்கள் குழந்தையுடனான ஒரு ஆரோக்கியமான இணைப்புக்கான அறிகுறி, நீங்கள் அறையில் நுழையும் போது மகிழ்ச்சியுடன் உங்களைப் பார்த்து சிரிப்பார்கள். அவர்கள் வேறு யாராவது பார்க்கும் போது இருக்கும் செய்கைகளை விட அதிகமாக இருக்கும். நீங்கள் அறைக்குள் இருக்கும் ஒரே ஒரு விளக்கு என்பதை போல் அவர்கள் உங்களைப் பார்ப்பார்கள். இந்த புன்னகை நிச்சயமாக உங்கள் இதயத்தை வென்றுவிடும்!

5 கை நீட்டுதல்

மற்றொரு அறிகுறி உங்களை பார்க்கும் போதெல்லாம் மகிழ்ச்சியில் உங்களை தூக்கச்சொல்லி கை நீட்டுவார்கள். அவர்கள் உங்கள் கைகளுக்குள் இருப்பதையே பாதுகாப்பாய் உணருவார்கள். ஒருவேளை வேறுயாராவது தூக்கி வைத்திருந்தால் அழவோ, அல்லது உங்களிடம் வரவோ முயற்சிப்பார்கள். குழந்தைகள் அவர்கள் நேசிக்கும் நபர் ஒருவருக்கொருவர் அருகாமையில் இருப்பதை அனுபவித்து மகிழ்வர்.

6 மழலை பேச்சு

குழந்தைகள் பெரும்பாலும் வித்தியாசமான சத்தங்களை எழுப்ப முயற்சிப்பார்கள். அவர்களுக்கு பிடித்தவர்கள் சுற்றி இருக்கும்போதும் ,மகிழ்ச்சியான சூழ்நிலையில் இருக்கும்போதும் அவர்கள் அதிக சத்தங்களை எழுப்புவார்கள். உங்கள் குழந்தை உங்களை நோக்கி பேச எத்தனித்தால் அவர்கள் உங்களை மிகவும் விரும்புகிறார்கள் என்று அர்த்தம்.

7 ஏக்கம்

மற்றொரு அறிகுறி அவர்கள் உங்களை விட்டு தூரமாக இருக்கும்போது அவர்களின் கவலை தோய்ந்த முகம் ஆகும். அந்த சூழ்நிலையில் அவர்கள் சோகமாகவோ அல்லது கோபமாகவோ காணப்படுவர். அவர்களை உங்களை தவிர்த்து வேறு யாருடன் இருந்தாலும் அசௌகரியமாக உணருவார்கள்.

8 முத்தம்

கொஞ்சம் பெரிய குழந்தைகள் தங்கள் பாசத்தை வெளிப்படுத்த இந்த முத்தமிடுதல் என்ற கலையை பயன்படுத்துவார்கள். போகப்போக அவர்கள் அதில் நிபுணர் ஆகிவிடுவார்கள்.

9 பிரதிபலித்தல்

குழந்தைகள் யாரையாவது நிறைய நேசிக்கும் போது, அவர்கள் செயல்களையும் வெளிப்பாடுகளையும் அப்படியே பிரதிபலிப்பார்கள். எனவே, நீங்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் மற்றவர்களிடம் பேசும் போதும் செய்யும் செயல்களிலும் கவனத்துடன் இருக்க வேண்டும். நீங்கள் செய்யும் சில தவறான விஷயங்கள் கூட குழந்தைகளின் மனதில் ஆழமாக பதிந்து விடும்.

10 நெருக்கம்

தவழும் வயது வந்தவுடன் உங்கள் மீதான அன்பை அதிகம் வெளிப்படுத்த தொடங்குவார்கள். அவர்கள் நகர தொடங்கிவிடுவதால் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள ஆர்வமாக இருப்பார்கள். நீங்கள் கவனித்து பார்த்தால் அவர்கள் எங்கு தவழ்ந்து சென்றாலும் சிறிது நேரத்தில் உங்களிடமே மீண்டும் வந்துவிடுவார்கள்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
100%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon