Link copied!
Sign in / Sign up
3
Shares

பெற்றோர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய 6 விதிகள்..!

சுத்தம் என்பது மண்ணில் பிறந்த ஒவ்வொரு ஜீவனும் முக்கிய கடமையாக கொள்ள வேண்டிய முழுமுதற் விஷயம். பிறந்த மற்றும் வளரும் நிலையில் உள்ள குழந்தைகள் எளிதில் நோய்தொற்றுகளுக்கு ஆளாகி விடுவதால், அவர்கள் கட்டாயம் சில சுத்தம் மற்றும் சுகாதார விதிகளை பின்பற்ற வேண்டும்..! அப்படி அனைத்து குழந்தைகளுக்கும் முக்கியமான  சில சுகாதார விதிகள் பற்றி இந்த பதிப்பில் படித்தறியுங்கள் பெற்றோர்களே! 

1. கை கழுவுதல்..!

பிறந்த மற்றும் வளரும் நிலையில் உள்ள குழந்தைகளுக்கு சக்திவாய்ந்த நோய் எதிர்ப்பு மண்டலம் இருக்காது. ஆகையால் அவர்கள் உணவை உண்ணும் முன்னர் கை கழுவ வேண்டும்; உங்கள் கைகளையும் கழுவ வேண்டும். பிறந்த மற்றும் வளரும் குழந்தைக்கு உணவு ஊட்டி விடப்பட்டாலும், அவர்கள் கை தவறுதலாக உணவில் பட்டாலோ அல்லது அவர்கள்உணவை அளைந்து விளையாண்டாலோ நோய்தொற்று உண்டாகலாம். ஆகையால் அவர்கள் கைகளை கட்டாயம் கழுவி விடவேண்டும்..!

2. செல்லப்பிராணிகள்..!

குழந்தைகள் செல்லப்பிராணிகளுடன் கொஞ்சி விளையாட அதிக ஆர்வம் கொள்வர். ஆகையால் செல்லப்பிராணிகள் சுத்தமாக உள்ளனவா? என்பதை கருத்தில் கொள்ளவும். தகுந்த பாதுகாப்பு மற்றும் தடுப்பூசிகளை செல்லப்பிராணிகளுக்கு அளிக்கவும். அவற்றால், குழந்தைகளின் நலம் கெடாமல் பார்த்துக் கொள்ளவும்..!

3. உபகரணங்கள்..!

சமையல் மற்றும் குழந்தைக்கு உணவு ஊட்ட பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தையும் நன்றாக கழுவிய பின்னர் பயன்படுத்தவும். இந்த உபகாரணங்களால் குழந்தைகளின் நலம் கெடாது இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்..!

4. மக்கள்..!

குழந்தைகளை பலர் தூக்கிக் கொஞ்சும் போதோ அல்லது கூட்டம் அதிகம் உள்ள இடத்திற்கு குழந்தையை அழைத்துச் செல்லும் போதோ குழந்தையின் நலம் கெடாது இருக்கும் வண்ணம் முன்னதாகவே, பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்து முடிக்கவும். மற்றவரால், குழந்தைக்கு நோய் உண்டாகாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்..!

5. தொப்புள்..!

பிரசவத்திற்கு பின்னர் குழந்தையின் தொப்புள் கொடி வெட்டி எடுக்கப்பட்ட பின், சிறு பாகம் குழந்தையின் உடலில் இருக்கலாம். அதனை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தை அதில் கை வைத்து விளையாடாமல் மற்றும் அதை இழுக்கத்து இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

6. அறை..!

குழந்தையின் அறை சுத்தமானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தையின் அறையில் முடி மற்றும் தேவையற்ற சிறு தூசிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்..!

குழந்தையின் நலன் மிக முக்கியம்..! அதனை பாதிக்கும் பொருள், செயல் எதுவாயினும் அதை தடுத்திட அல்லது தவிர்த்திட முயலுங்கள்..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon