Link copied!
Sign in / Sign up
2
Shares

பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு கட்டாயம் சொல்லிக்கொடுக்க வேண்டியவை..!

happy family

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் குழந்தைப்பருவத்தில் தொடங்கி, பால்ய பருவம் மற்றும் குழந்தை இளம் வயதை அடைந்து அதற்கு முதுமை தொடனாகும் வரையிலும், தன்னால் இயன்றவரை நற்கருத்துக்களை போதிக்க வேண்டும். பெற்றோர் மட்டுமே கற்றுக்கொடுக்க முடிந்த சில விஷயங்கள் உள்ளன. அவற்றைக்குறித்தே இந்த பதிப்பில் படித்தறியப்போகிறோம்..! படிக்க நீங்கள் தயாரா தோழியரே!

1. குழந்தைகள் பெண்ணாயிருப்பின், அவர்களை யாருடைய மடியிலும் உட்காரக்கூடாது என சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும்.

2. குழந்தை 2 அல்லது 3 வயதுக்கு மேல், அடுத்தவர்கள் முன்னிலையில் உடை மாற்றல் கூடாது என சொல்ல வேண்டியது பெற்றோர் கடமை..! 

mom with kid

3. குழந்தைப்பருவத்திலேயே இவன் தான் உன்னுடைய கணவன் என்றோ, இவள் தான் மனைவியென்றோ கொல்லிக்கொடுப்பது அல்லது குறிப்பிடுவது தவறு; இது குழந்தைகளை தவறான மனப்பாங்குடன் வளரச் செய்துவிடும் அல்லது பின்னல் ஏமாற்றம் ஏற்பட்டால், அது குழந்தையின் வாழ்வை சீர்குலைத்துவிடும்.

4. குழந்தை விளையாடுகையில் கூட, உங்கள் கவனம் அவர்கள் மீது இருந்து கொண்டே இருக்க வேண்டும்; மேலும் குழந்தைகள் என்ன விளையாடுகிறார்கள், யாருடன் விளையாடுகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொண்டே இருப்பது நல்லது. இது குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை ஏதும் ஏற்படாமலிருக்க மற்றும் அவர்கள் நல்ல நண்பர்களுடன் தான் பழகுகிறார்களா என்பதை உங்களால் அறிந்து கொள்ள முடியும்.

5. உங்கள் குழந்தைகளுக்கு தொல்லை தரும் நபரை, அவர்கள் சந்திப்பதை தவிர்க்க முயலுங்கள்.

father with baby girl

6. குழந்தைகள் தன் இயல்பிலிருந்து மாறி, மிக சோகமாகவோ அல்லது சந்தோஷமாகவோ இருந்தால், கண்டிப்பாக காரணம் கேட்டறிந்து அவர்கள் சந்தோஷத்தில் பங்கு கொள்ளுங்கள் மற்றும் அவர்கள் சோகத்தை போக்க முயலுங்கள்.

7. குழந்தைகள் வளரும் பருவத்திலேயே உடலுறவு குறித்தும்,  அதன் நன்மதிப்பீடுகள் குறித்தும் நன்கு பக்குவமாக கற்பியுங்கள்; இல்லையெனில் சமுதாயத்தால் அவர்கள் தவறாக புரிந்து கொண்டு வளர வாய்ப்புண்டு.

8. குழந்தைகள் கேட்கும் பொருட்கள் அவசியமானதாய் இருந்தால் வாங்கிக்கொடுங்கள்; அவர்களுக்கு வறுமை, பசி, ஏமாற்றம் போன்ற உணர்வுகளும் அளித்து நல்ல ஒரு குழந்தையாக வளர்த்தெடுங்கள்.

9. குழந்தைகள் பார்க்கக்கூடாத இணையதளங்கள் மற்றும் செயலிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ரிமோட் கொண்டு மியூட் அல்லது அவை வராதபடி செய்யவும்.

parents with kid

10. குழந்தை 3 வயதை எட்டியவுடன் அந்தரங்க பகுதிகளை சுத்தம் செய்வது எப்படி மற்றும் அவர்களை யாரும் அங்கு தீண்டக்கூடாது என்பது போன்றவற்றை கற்பியுங்கள்..!

11. குழந்தையை, அதன் மனநிலையை பாதிக்கும் செயல்கள், சம்பவங்கள், படங்கள், நிகழ்ச்சிகள் போன்றவற்றை பெற்றோர்கள் தவிர்ப்பது நல்லது.

12. உங்கள் குழந்தையிடம் உள்ள தனித்திறன் என்பதை நன்கு ஆராய்ந்து கண்டறியுங்கள்; அதில் உங்கள் குழந்தையின் செயல்பாடுகளை ஊக்குவியுங்கள்.

13. குழந்தைகள் பொய் சொல்வது, மற்றவர்கள் மீது குறை கூறுவது, அவர்கள் தவறு செய்யத்துணிவது போன்ற செயல்கள் குழந்தைகளிடம் காணப்பட்டால், தண்டிக்காமல், அன்பாக கண்டித்து திருத்த வேண்டும். இது பெற்றோர்களின் தலையாய கடமை..!

whole family
Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon