Link copied!
Sign in / Sign up
0
Shares

பெரியவர்கள் வண்ணம் தீட்டும் புத்தகங்கள் பயன்படுத்த வேண்டியது அவசியமா?

நாம் பெரியவர்கள் ஆகிவிட்டபின், அதாவது வயதால் வளர்ந்தபின் நம்முடைய சிறுவயது பழக்கங்களை முற்றிலும் மறந்து விடுகிறோம்.! நம் வேலைப்பளுவினால், நாம் பலவித உணர்ச்சிகளுக்கும், அழுத்தங்களுக்கும் ஆளாகிறோம். இதனால், பலர் விரைவிலேயே வெவ்வேறு நோய்த் தொற்றுகளுக்கும் ஆளாகின்றனர். வளர்ந்த குழந்தைகளான நம்மை இவ்வித பிரச்சனைகளில் இருந்து காக்கும் மேஜிக் பற்றி இந்த பதிப்பில் படித்தறியலாம்..

1. ஓய்வு..

நமக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில், ஓவியங்கள் வரைந்து அதில் வண்ணம் தீட்டி மகிழலாம். இது உங்கள் யோசிக்கும் மற்றும் சிந்தனைத் திறனை மேம்படுத்த உதவுகிறது. பலவித எண்ணங்களால், குழம்பியிருக்கும் உங்கள் எண்ணங்கள் தற்சமயம் எப்படி செயல்படுகின்றன என்பதை நீங்கள் வரையும் ஓவியங்கள், நீர் அளிக்கும் வண்ணங்கள் உங்களுக்கு எடுத்துக் காட்டும்..

2. மனஅழுத்தம்..

நீங்கள் மனஅழுத்தம் அடைந்திருந்தால், உங்களை எளிதில் அதிலிருந்து விடுவிக்கும் காரணியாக ஓவியம் மற்றும் வண்ணம் தீட்டுதல் பயிற்சி அமைகிறது. உங்கள் மன நிலைக்கு ஒரு மாற்றாக அமைகிறது.

3. ஒருமுகம்..

பலவித எண்ணங்களில் சிதறியிருக்கும் உங்கள் மனநிலையை ஒருமுகப்படுத்த இந்த வண்ணம் தீட்டுதல் பயிற்சியும், ஓவியம் வரைதலும் உதவுகின்றன. இந்த பயிற்சிகளில் ஈடுபடுகையில் உங்கள் மனநிலை கட்டாயம் ஒருமுகப்பட்டே தீரும்..

4. குழந்தை பருவம்..

இந்த பயிற்சிகளில் ஈடுபடுகையில், அது உங்களுக்கு உம் குழந்தைப்பருவ நிகழ்வுகள், கற்றல்கள், கிறுக்கல்கள் இவற்றை நினைவுபடுத்தும். அச்சமயங்களில் உங்களுக்குள் ஏற்படும் உணர்வை விவரிக்க வார்த்தைகளே இல்லை..

5. மனநிறைவு..

இந்த பயிற்சிகள் உங்களுக்கு ஒருவித மனநிறைவை அளித்து, உங்கள் திறனை மேம்படுத்துகிறது. இதனால், இப்பயிற்சிகளில் நீங்கள் வல்லவராக மாறுவதுடன், உங்கள் நேரத்தையும் உபயோகமாக செலவழிக்கலாம். அன்றாட வாழ்விலிருந்து இது ஒரு மாறுதலாக அமையும்..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon