Link copied!
Sign in / Sign up
1
Shares

பெண்களின் தாம்பத்ய வாழ்வு சிறப்படைய சில உணவுகள்..!

இயற்கையாகவே, பெண்களுக்கு தாம்பத்யத்தில் அதிகம் ஈடுபாடு இல்லாமல் இருக்கிறது; இந்த ஈடுபாடு குறைவினால், அவர்களுக்கு பாலுணர்வு சார்ந்த விஷயத்தில் நாட்டம் குறைகிறது. பெண்களின் பாலுணர்வு நிலையை லிபிடோ என்பர்; பெண்களின் லிபிடோ சக்தியை அதிகரிக்க அவர்கள் சில உணவுகளை உட்கொண்டால், அவர்தம் இல்லற வாழ்வு மேம்படும். எனவே, பெண்கள் உடலுறவு உணர்வை மேம்படுத்த, உண்ண வேண்டிய உணவுகள் குறித்து இங்கே படித்தறிவோம்..!

அவகேடோ 

அவகேடோ எனும் வெண்ணெய் பழம் உயர்தர பி6 விட்டமின்கள் உள்ளன; இது டெஸ்டோஸ்ட்டிரான் ஹார்மோன் உற்பத்தியை அதிகரித்து, பாலுணர்வை தூண்ட உதவும்.. மேலும் இதிலுள்ள பொட்டாசியம், தைராய்டு சுரப்பியின் ஹார்மோன் நிலையை சம நிலையில் வைத்திருக்க உதவுகிறது; இந்த வெண்ணெய் பழம் பெண்களின் பாலுணர்வு உணர்ச்சியை, சக்தியை மிகவும் உற்சாகமாக வைத்திருக்கவும் உதவுகிறது. 

வாழைப்பழம் 

மகளிரின் பாலுணர்வு உற்சாகத்திற்கு அதிகம் பலன் தரக்கூடிய ஒரு பழமாகும்; இப்பழத்தில் உள்ள ரிபோஃப்ளோவின், பி விட்டமின்கள், பொட்டாசியம் போன்றவை பெண்களின் டெஸ்ட்ரோஸ்ட்ரோன் ஹார்மோன்களின் உற்பத்தியை நன்கு தூண்டுகிறது. மேலும் வாழைப்பழத்தின் வடிவமே, மகளிரின் பாலுணர்வு உற்சாகத்தை தூண்டுவதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

துளசி இலைகள்..

இவற்றில் உள்ள அதிக மருத்துவ குணம், மகளிரின் பாலுணர்வு குறைபாட்டினை நீக்க உதவுகிறது என கண்டறியப்பட்டுள்ளது; துளசி இலைகள் மன அழுத்தத்தை முற்றிலும் நீக்கும் மருந்தாக இருந்து, பெண்களின் தலைவலியை போக்கவும் மிகவும் உதவுகிறது.

பெண்களின் மாதவிடாய் சுழற்சியில் உள்ள குறைபாட்டையும் இவ்விலைகள் நீக்கி, அவர்களுக்கு பாலுணர்வு குறித்த புத்துணர்ச்சியை, உற்சாகத்தை வழங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது. 

பாதாம் பருப்பு..

இதில் உள்ள சத்துக்கள், குழந்தையை பிரசவிப்பதில் உள்ள குறைபாட்டினை நீக்க உதவுகிறது; இதைத்தவிர மகளிரின் லிபிடோ சக்தியை ஊக்குவித்து உற்சாகப்படுத்துகிறது.

சோயா பீன்ஸ்

இதில் உள்ள சத்துக்கள், மகளிரின் ஈஸ்ட்ரோஜன் சுரப்பை அதிகரிமாக்குகிறதுல்; இதில் உயர் தர புரதம் அடங்கி உள்ளது. பெண்களின் மெனோபாஸ் காலத்தில் அவர்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம் போன்றவற்றை போக்கி, பெண்களின் பாலுணர்வு குறையாமல் நன்கு செயல்படச் செய்கிறது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon