Link copied!
Sign in / Sign up
15
Shares

பெண்களின் மார்பகங்கள் பெரிதாக இருந்தால் தான் உடலுறவில் அதிக இன்பம் கிடைக்குமா?

பெண்களுக்கு விந்து வெளிவருகிறது என்பதை இன்னமும் பலர் ஏற்றுக்கொள்வதில்லை என்றாலும், தற்போது அது உண்மை என்று பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டு வருகிறது. பெண்ணின் சிறுநீர் வடிகுழாய் பகுதியில் உள்ள சுரப்பியில் இருந்து விந்தணு சுரக்கப்படுகிறது. இதில் குளுக்கோஸ் மற்றும் புரோஸ்டடிக் ஆசிட் போன்றவை கலந்திருப்பதுடன் அப்படியே ஆண்களின் விந்தணுவில் இருக்கும் உயிரணுவைத் தவிர அத்தனை பொருள்களும் காணப்படுகின்றன.

ஆண்களைப்போலவே பெண்களும் உச்சகட்ட இன்பம் அடையும் நேரத்தில் விந்தணுவை வெளிப்படுத்துகிறார்கள். பெண்களுக்குக் குழாய்போன்ற அமைப்பு இல்லாத காரணத்தால், விந்து வெளியே சீறிக்கொண்டு பாயாமல் பிறப்புறுப்பு சுவர்களில் வடிந்து வெளியேறுகிறது. பிறப்புறுப்பு வழியாக விரல்களை நுழைத்து, பெண்ணின் கிளைட்டோரிஸ் இருக்கும் பகுதிக்கு மேலாகத் தொடும்போது பெண்களுக்கு விந்து சுரக்கும் பகுதியைக் கண்டறிய முடியும்.

இது, பெண்களுக்கு முக்கியமான ‘ஜி ஸ்பாட்’ ஆகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதில் விரல் விட்டு இன்பம் தரும்போது, பெண்கள் உச்சகட்டத்தை நோக்கித் தள்ளப்படுகிறார்கள்.

மார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா?

பெண்களிடம் ஆண்களைக் கவரும் முதல் உறுப்பாக இருப்பது மார்பகங்கள் என்பதில் மாறுபட்ட கருத்து கிடையாது. மார்பகம் பெரிதாக இருந்தால், ஆண்கள் எளிதில் தூண்டுதல் அடைகிறார்கள். உடலுறவு ஆசையை எதிராளிக்குத் தூண்டிவிடும் பணியைத் தவிர, வேறு எந்த வேலையையும் பெரிய மார்பகங்கள் செய்வதில்லை.

மார்பகங்கள் சிறிதாக இருக்கும் சில பெண்கள் அதை ஒரு குறையாக நினைத்து, உடலுறவில் தம்மால் ஆண்களை முழுமையாகத் திருப்திபடுத்த முடியாது என்று கவலைகொண்டு ஒருவித தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

உடலுறுப்பு பற்றிய எண்ணம்..!

அதாவது, நம்முடைய உடல் பற்றி நமக்கு இருக்கும் எண்ணங்கள் மற்றும் நம் உடல் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றிய நம் கற்பனை இரண்டும் சேர்ந்து இந்த எண்ணத்தை ஏற்படுத்துகிறது. முக்கியமாக, உடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது.

உண்மையில், பெண்ணின் மார்பகங்களுக்கும், அது சிறிதாக அல்லது பெரிதாக இருப்பதற்கும், உடலுறவு அல்லது குழந்தைக்குப் பாலூட்டுவதற்கோ எவ்வித சம்பந்தமும் இல்லை. ஓர் ஆண், பெண்ணின் மீது எவ்வளவு ஆசையுடன், காதலுடன் நெருங்குகிறான் என்பதுதான் முக்கியம்.

பொதுவாக, இதுபோன்ற பயங்களும் தாழ்வு மனப்பான்மையும் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, அவர்களுக்கே அவர்கள் மீது நம்பிக்கை இல்லாத நிலையில்தான் ஏற்படுகிறது.

அதனால், தன் உடல் இன்பமயமானது என்றும், இதை வைத்து ஆண்களுக்குத் தேவையான இன்பம் தரவும், பெற்றுக்கொள்ளவும் முடியும் என்பதில் பெண்கள் உறுதியோடு இருக்க வேண்டியது அவசியமாகும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon