Link copied!
Sign in / Sign up
4
Shares

பெண்களே! உங்களின் உடலுறவு பிரச்சனைகளை நீர் அறிவீரோ?

இயற்கையில் பெண்கள் ஆண்களை விட  உடலுறவு கொள்கையில் பரவச நிலையை எட்டுவதிலும், உச்சம் அடைவதிலும் பின்தங்கியே இருப்பார்கள்; ஆகையால், ஆண்கள்தான், அவர்களின் துணை உச்சமடைய உதவ வேண்டும். இயற்கையாகவே, உடலுறவு கொள்கையில் பெண்கள், தாம் உச்சமடைவதும், அவ்வுணர்வும் தவறானது என எண்ணுகின்றனர்; இந்நிலையை பெண்களே! நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும், இல்லையேல் உடலுறவு கொள்வதில் பிரச்சனைகள் எழலாம். உச்சமடையாமல் உடலுறவு கொள்கையில், இருபாலரும் முழுமையான இன்பத்தை அடைய இயலாது. இப்பதிப்பில் பெண்கள் உச்சமடையாமல் இருக்க என்ன காரணம் என படித்தறியலாம்..!!

தயக்கம்

பெரும்பாலான பெண்களில் உடலுறவு வைத்துக்கொள்ள விரும்பினாலும், அது குறித்து, அறிந்து கொள்வது பெரும் தவறு என எண்ணுகின்றனர். மேலும், உடலுறவு குறித்து கற்றுக்கொள்ளவும் தயக்கம் கொள்கின்றனர். இத்தயக்கமே பெண்கள் உடலுறவினில் உச்சமடையத் தடையாக இருக்கின்றது.

 
பேய்கள்..!

பெண்கள், உடலுறவு கொள்கையில், உச்சமடைந்தால் தாங்கள் பெண்களே அல்ல, காமப்பேய்கள், பிசாசுகள் என்று ஒரு பிம்பத்தை தம் மனதினுள் வரையறுத்து வைத்துள்ளனர்.

வேண்டாம்..

சில பெண்கள் உச்சம் அடைவது வேண்டாத விஷயம் என நினைக்கின்றனர். மற்றும் அவர்களது துணையே அவர்களுக்கு விரும்பியவாறு தங்களை அனுபவிக்கட்டும் என்று சிலர் அசால்ட்டாக விட்டுவிடுகின்றனர்.

 

 வேலை…

உடலுறவில் உச்சமடைவது என்பது ஆணும், பெண்ணும் கட்டித் தழுவியவுடன் நிகழும் விஷயமல்ல; அள்ளி நகையாடுதல், கொஞ்சிக் குலாவுதல் போன்ற விஷயங்களில் ஈடுபடல் வேண்டும். பெண்களோ இவ்வேலைகளில் ஈடுபட விரும்புவதில்லை.

தூண்டுதல்

பெண்கள் தங்களது பெண்ணுறுப்பு வாயிலாக உச்சமடைய தூண்டப்படுவதை மிகவும் தவறான விஷயமாக எண்ணுகின்றனர்; அவ்வாறு செய்கையில், ஆண்களின் மீதும் தவறான கண்ணோட்டம் ஏற்படுகிறது. 

நேரம்

உடலுறவு என்பது நூடுல்ஸ் போன்ற ரெடிமேட் உணவு அல்ல, 2 நிமிடத்தில் சமைத்து முடிப்பதற்கு..,  அது அறுசுவை உணவைப்போன்றது; அதன் முழு சுவையை ரசிக்க, ருசிக்க சில மணிகளாகும். ஆனால், உடலுறவில் பெண்கள் அதிக நேரம் செலவிட விரும்புவதே இல்லை.

மனநிலை

உச்சமடைய நேரமாகும் என்பதை பெண்கள் உணர்வதில்லை; தங்களுக்கு ஏதோ குறையுள்ளதைப் போல நினைத்து மனதினுள் புலம்புகின்றனர். இவவெண்ணங்கள்  அவர்களை உடலுறவில் உச்சமடைய விடாமல் தடுக்கிறது.

அதிர்ச்சி

பெண்கள் மென்மையானவர்கள், வலியைத் தாங்க இயலாதவர்கள்; முதன் முறையாக உடலுறவில் ஈடுபடுகையில், கட்டாயம் வலி ஏற்படும்; அவ்வலியின் அதிர்ச்சியிலிருந்து அவர்கள் மீள்வதில்லை. மீண்டும் உடலுறவு கொள்கையில் கூட, முன்பு ஏற்பட்ட வலியை நினைத்து பயம் கொள்கின்றனர்.

அச்சம்

பெண்கள் தங்களின் முகம் உடலுறவின் போது எவ்வாறு இருக்குமோ, மற்ற உடல் பாகங்கள் எப்படி தெரியுமோ என தமது உடல் தோற்றம் குறித்த அச்சம் காரணமாக சிலருக்கு உச்சமடையாமல் இருக்கும் நிலை ஏற்படலாம்...!

கவலை 

பெண்களில் சிலர், தாங்கள் உடலுறவு கொள்கையில், உச்சம் அடைவோமா? மாட்டோமா? எனும் கவலையில் மூழ்கி விடுகின்றனர். உடலுறவில் ஈடுபடுகையில் பெண்கள் உச்சமடையாமல் போக இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon