Link copied!
Sign in / Sign up
7
Shares

பெண்களே! உங்கள் எலும்புகளைக் காக்கும் வழி அறிவீரா??

பெண்களே! நீங்கள் எந்த வயதினராயினும் உங்களுக்கு பலமான இடுப்பெலும்பு எப்பொழுதும் தேவை. நீங்கள் குழந்தையை பிறந்து தவழ்ந்து நடக்கையில், பூப்படைகையில், திருமணமாகி கருத்தரிக்கையில், குழந்தைக்கு தாயாகையில், முதுமையில் முதுகு வளையாதிருக்க என எல்லா காலகட்டங்களிலும், உங்கள் உடலின் இருப்பெலும்பு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டியது மிக அவசியம். 

பூப்பெய்திய பெண் வலிமையான சரீரத்துடனும், கர்ப்பமடைந்த பெண் வலிமையான இடுப்பெலும்புகளுடனும், தாய்மையடைந்த பெண் ஆரோக்கியமான உடலுடனும், வயது முதிர்ந்த பெண்கள் வலிமையான முதுகு மற்றும் இடுப்பு எலும்புகளுடனும் இருக்க வேண்டியது அவசியம்; அப்படி இருந்தால் மட்டுமே யாருடைய உதவியும் இன்றி எக்காலத்திலும் பெண்களால் ஆரோக்கியமாக வாழ இயலும்..!

ஆகவே, உங்கள் இடுப்பெலும்பை பலமாக்கி, முதுகு வலியை தூரம் விரட்டும் ஒரு சிறந்த உணவுப் பொருளை பற்றி இப்பதிப்பில் படித்தறியலாமா நண்பர்களே??

தேவையானவை..!

பனை வெல்லம் 3 கப், வெந்தயப் பொடி 1 கப், நல்லெண்ணெய் 1 கப்

செய்வது எப்படி?

1. வெந்தயத்தை முளை கட்டி, உலரவைத்து, பொடியாக்கிக் கொள்ளவும்  

2. பனை வெல்லத்தைத் தூளாக்கி, சிறிது தண்ணீர் சேர்த்து லேசாக கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளவும் 

3. வெந்தயப்பொடியில் 1/4 கப் நீர் சேர்த்து கட்டியில்லாது நன்றாகக் கரைத்துக்கொள்ளவும் 

4. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, பின் பனை வெல்லம், வெந்தயக்கரைசல், நல்லெண்ணெய் சேர்த்து நன்றாகக் கிளறவும்  

5. வாணலியில் ஒட்டாமல் இருக்கும் பதம் வரும்வரை கிளறி, இறக்கவும் (வெந்தயத்தை முளை கட்ட முடியாதவர்கள் அதை ஊற வைத்து நீர் விடாமல் அரைத்துக்கொள்ளலாம்.)

வெந்தயம் உடலுக்கு பல நன்மைகளை அளித்துக் காக்கும்; மேலும் பனை வெல்லம் மற்றும் நல்லெண்ணெய் இரும்புச்சத்து, சூட்டினை வெளியேற்றுதல்என பல நன்மைகளை பெண்களுக்கு அளிக்கின்றன. இந்த உணவு ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்நாளில் தவிர்க்காது உண்ண வேண்டிய ஒரு உணவாகும்..!

இந்த வெந்தயக்களி, நார்ச்சத்து நிறைந்தது; மலச்சிக்கலைத் தவிர்க்கும்; மேலும் எலும்புகள், மூட்டுகளுக்கு வலிமை அளிக்கும்..!! 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon