Link copied!
Sign in / Sign up
212
Shares

பெண்கள் இடுப்பு வலிமை பெற…!

பெண்களின் உடலமைப்பு ஆணின் உடலமைப்புடன் போது, மிக பலவீனமானது. அதிலும் பெண்கள் பருவத்திற்கு வருகையிலும், பிரசவிக்கையிலும் பெண்ணின் உடல் பல்வேறு மாறுபாடுகளுக்கு உள்ளாகிறது. இச்சமயங்களில் பெண்ணின் இடுப்பெலும்பு பலவீனம் அடையும் வாய்ப்பு அதிகம். பெண்ணின் இடுப்பெலும்பு பலமாக இருந்தால் தான், அவளால் நிற்க, நடக்க, உட்கார முடியும்.. ஆகையால், பெண்களே! உங்களின் ஆதாரமான இடுப்பெலும்பை பலப்படுத்தும் உணவு பற்றி அறிய பதிப்பினை படிப்பீராக…!

தேவையான பொருட்கள்:

இயற்கை கருப்பு உளுந்து - 1 கப்

பொட்டு கடலை - 2 டேபிள் ஸ்பூன்

நாட்டு சர்க்கரை - 3/4 கப்

ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்

பசு நெய் தேவையான அளவு.

சிறு துண்டுகளாக நறுக்கிய முந்திரி பருப்பு சிறிதளவு.

செய்முறை:-

1. முதலில் கருப்பு இயற்கை உளுந்தை கல் நீக்கி சுத்தம் செய்து நன்றாக கழுவி வெயிலில் உலர்த்தி வெறும் வாணலியில் வாசனை வரும் வரை சிவக்க வறுத்தெடுத்து ஆற வைக்கவும்.

2. வறுத்த பருப்பு நன்கு ஆறியதும் அதனுடன் பொட்டுகடலை சேர்த்து நைசாக பொடித்தெடுத்து சலித்து வைத்துக்கொள்ளவும்.

3. சலித்தெடுத்த மாவுடன் பொடித்த வெல்லம், ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.

4. ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவிற்கு நெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும்.

5. சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள முந்திரி பருப்பை போட்டு பொன்னிறமானதும் வெல்லம் கலந்து வைத்துள்ள லட்டு மாவில் நெய் ஊற்றி கரண்டியால் கலந்து விட்டு கை பொறுக்கும் சூடு இருக்கும் போதே விருப்பமான அளவில் லட்டுகளாக பிடித்து வைக்கவும்.

6. சத்துக்கள் பல நிறைந்த சுவையான இந்த கருப்பு உளுந்து லட்டு சாப்பிடுவதற்கும் மிகவும் சுவையாக இருக்கும்.

7. முக்கியமாக வளரும் பெண் குழந்தைகளுக்கு இதை அடிக்கடி செய்து கொடுப்பதினால் இடுப்பு எலும்புகள் நல்ல வலுவாக இருக்கும்.

குறிப்பு:

1. சிறிதளவு பொட்டுகடலை சேர்த்து பொடிப்பதனால் உடையாமல் லட்டு பிடிக்க சுலபமாக இருக்கும்.

2. நெய்யை காய வைத்து மாவில் ஊற்றும் போது நன்கு நுரைத்துக் கொண்டு வர வேண்டும்.

3. நெய் மற்றும் வெல்லத்தின் அளவை அவரவர் ருசிக்கேற்ப கூட்டிக் கொள்ளலாம்.

இயற்கை உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது.

தடுமாறி விழும் போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon