Link copied!
Sign in / Sign up
2
Shares

பெண்கள் எதற்காக ஆபரணங்கள் அணிகிறார்கள்?? காரணமென்ன?

பெண்கள் இருக்கும் அனைத்து உடல் உறுப்புகளிலும் ஏதேனும் ஆபரணங்கள் அணிந்து கொள்வதை முந்தைய காலத்திலிருந்தே ஒரு வழக்கமாக கொண்டு வந்துள்ளனர்; அப்படி பெண்கள் அணியும் அனைத்து ஆபரணங்களும் எந்த காரணத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்டன.., ஆபரணங்கள் அணிவதன் உண்மையான அர்த்தம் என்ன என்பது பற்றியெல்லாம் இந்த பகுதியில் படித்தறிந்து கொள்வோம்.., வாரீர் தோழியரே! 

தோடு..!

வீட்டில் நடக்கும் மற்றும் உன் காதால் அறிந்த இரகசியங்களை வெளியில் யாருக்கும் சொல்லாமல், காதோடு வைத்துக்கொள் என்பதே தோடு, அளிக்கும் அர்த்தமாகும்.

மூக்குத்தி 

முதன் முதலில் சமையலை, சமையலின் வாசனையை அறியும் உத்தியான சக்தி, மூக்குக்கு உண்டென்பதால், மூக்கில் அணியும் ஆபரணம் மூக்குத்தி என்று அழைக்கப்பட்டு, காலங்காலமாக அணியப்பட்டு வருகிறது.

வளையல் 

மனைவியை, கணவர் வளைய வளைய சுற்றி வர வேண்டும் என்பதற்காக, அறிமுகப்படுத்தப்பட்டதே வளையல்.

ஒட்டியாணம் 

தம்பதியர் இருவரும், ஈருடல் ஓருயிராய் ஒன்றாய் ஆனோம் என்பதற்காக தான் ஒட்டியாணம்.

மோதிரம் 

எதிலும் பெண்ணின் கைத்திறன் காண்பிக்க, ஓங்கியிருக்க என்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டதே மோதிரம்...! 

இந்த 6 நகைகளையும் ஒரு பெண் அணிந்தால் தான், அவள் மற்றும் அவளின் அலங்காரம் முழுமை பெற்றதாக பொருள்; இப்பலன்களை, அறிந்து பெண்களாகிய நாம் நமக்குள்ள வசதி போல், நமக்கேற்றார் போல் அணிந்து, வாழ்வில் முழுமை பெற்று வாழ வேண்டியது தான்..!! நாகரீகம்  எவ்வளவு தான் மாறினாலும், நம் கலாச்சாரம் சிதைந்து போகாமல், முன்னோர் நமக்கு அளித்த அர்த்தமுள்ள பாரம்பரியத்தை நம் பரம்பரைக்கும் அளித்துச் செல்வோமாக...!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon