Link copied!
Sign in / Sign up
0
Shares

பெண்களின் பிறப்புறுப்பிலிருந்து வரும் துர்நாற்றம் போக வேண்டுமா?

பெண்களுக்கு இருக்கும் பலவித பிரச்சனைகளுள் ஒன்று தான் இந்த பிறப்புறுப்பிலிருந்து வரும் ஒருவித துர்நாற்றம் ஆகும். இந்த பிறப்புறுப்பு துர்நாற்றம் என்பது பெண்களை நிலைதடுமாற செய்ய, பொது இடத்திற்கு செல்லும் பெண்கள் ஒருசில பிரச்சனையையும் சந்திக்கின்றனர். உங்கள் வாய், சருமம், மற்றும் உடம்பின் பிற உறுப்பிலிருந்து வரும் துர்நாற்றம் போலவே தான் இந்த பிறப்புறுப்பிலிருந்து வெளிப்படும் துர்நாற்றமும்...

அதை பற்றிய அறியா சில தகவலை நாம் இப்போது பார்க்கலாமே...

எத்தகைய துர்நாற்றம் வீசும்?

இந்த பிறப்புறுப்பிலிருந்து வரும் துர்நாற்றமானது பெண்களின் மனதில் எதிர்வினை கொண்ட எண்ணத்தை எழுப்ப முயல்கிறது. இந்த துர்நாற்றமானது கர்ப்பிணிகளுக்கு வேறு மாதிரியாகவும் வீசக்கூடும். அதேபோல், மாதவிடாயின் போதும் வேறு மணம் வீசுகிறது. 

பிறப்புறுப்பிலிருந்து வரும் துர்நாற்றத்தின் வகைகள்:

1. மீன் போன்ற துர்நாற்றம்

2. பீர் துர்நாற்றம்

பரிசுத்தம் தேவை:

நீங்கள் குளிக்கும்போது முறையான பரிசுத்த குளியலால் பிறப்புறுப்பிலிருந்து வரும் துர்நாற்றத்தை போக்க முடியும்.

1. முன் பகுதி முதல் பின் பகுதி வரை பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்

2. உடலுறவு கொண்ட உடனே சிறுநீர் கழிப்பது அவசியம்

3. பெண் கருவாய்க்கு மட்டும் நறுமணம் வீசும் சோப் பயன்படுத்தலாம். சோப்பை பயன்படுத்தும் முன் மருத்துவர் பரிசோதனை மிகவும் முக்கியம். 

4. நீங்கள் அணியும் உள்ளாடைகளை தினமும் மாற்ற வேண்டும். இல்லையேல், உங்கள் உள்ளாடை ஈரத்திற்கு ஏற்ப மாற்ற கவனம் செலுத்துங்கள்.

5. உங்கள் உள்ளாடையை வாசனையற்ற பொருள் கொண்டு கழுவ வேண்டும்

மாதவிடாய் பொருள் தேர்வில் கவனம்:

ஒரு சில பெண்கள், இந்த துர்நாற்றத்தை மாதவிடாயின்போது தான் பெரிதும் உணர்வார்கள்.

1. அதனால் உங்கள் பிறப்புறுப்பை பாதுகாப்பதில் மிகவும் கவனம் என்பது தேவை. நீங்கள் ஈரமான அட்டையை உபயோகப்படுத்துவதால் தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது. 

2. அடிக்கடி மாதவிடாயின் போது பயன்படுத்தும் பொருளை மாற்ற வேண்டும்

 
உடலுறவினால் பிறப்புறுப்பின் வாசனை எப்படி இருக்கும்?

ஒரு சிலர் உடலுறவு கொண்ட உடனே மீன் துர்நாற்றம் மேலிருந்து வருவதை கண்டிருக்கக்கூடும். ஒருசில சமயத்தில், உங்கள் பிறப்புறுப்பிலிருந்து வெளியாகும் யோனி நீரால் கூட இந்த துர்நாற்றம் என்பது வீசலாம். இந்த துர்நாற்றத்தை தவிர்க்க,

1. பிறப்புறுப்பிலிருந்து வெளியேறும் நீரை தவிர்க்க ஆணுறை பயன்படுத்தலாம். நீங்கள் பயன்படுத்தும் ஆணுறையில் மிகவும் கவனம் தேவை.

2. உங்கள் பிறப்புறுப்பையும், கருவாயையும் சம நிலை நீர்க்கொண்டு உடலுறவுக்கு பின்னர் துடைத்திடலாம்.

நண்பர்களே!

உங்கள் வீட்டு தரை அழுக்காய் இருக்கிறதா? கவலை வேண்டாம்... இயற்கையாக சுத்தப்படுத்த இதோ நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம் டைனி ஸ்டெப் ப்ளோர் கிளீனரை. இந்த கிளீனரில் எந்த வித வேதி பொருளும் இல்லை. நச்சு தன்மையும் இல்லை. குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பானது. ஒருமுறை பயன்படுத்தினால், மீண்டும் வேறு எதையும் வாங்க உங்கள் மனம் முன்வராது. இப்போதே இதை நீங்கள் பெற முந்துங்கள். ஆர்டர் செய்ய இந்த பொத்தானை அழுத்தவும். கிளிக் செய்க...

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon