Link copied!
Sign in / Sign up
5
Shares

பெண்களின் பாலுறவு உணர்வைத் தூண்ட உதவும் உணவுகள்..!

பெண்களுக்கு உடலுறவு உணர்வுகள் ஆண்களுடன் ஒப்பிடும் போது அதிகமாகவே உள்ளது; ஆனால், பெண்கள் அந்த உணர்வுளை, ஆண்களைப்போல் அதிகம் பயன்படுத்துவதில்லை. பெண்களை உடலுறவில் முழுமையாக ஈடுபடுத்த வேண்டுமெனில், முதலில் அவர்களின் உடலுறவு உணர்வுகளை தூண்ட வேண்டும். இவ்வாறு பெண்களின் உணர்வை தூண்ட பல வழிமுறைகள் இருந்தாலும், சிறந்த வழியாக இருப்பது உணவு. சில உணவுகளை உட்கொண்டால், அவ்வுணவுகள் பெண்களின் உடலுறவு உணர்வினை நன்கு தூண்டுவதாக கண்டறியப்பட்டுள்ளது; அந்த உணவுகள் என்னென்ன என்று இப்பதிப்பில் படித்தறியலாம்..!!

உடலுறவு ஹார்மோன்கள்

உடலுறவு ஹார்மோன்கள், ஆண் பெண் இருவருக்குமே சரியான உச்ச நிலையில் இருந்தால் மட்டுமே, அவர்தம் இல்லற வாழ்க்கை சுகமாக அமையும்; குறிப்பாக, பெண்கள் சரியான அளவு உடலுறவு ஹார்மோன்களை கொண்டிருத்தல் அவசியம். அவ்வாறு கொண்டிருந்தால் மட்டுமே தானும் திருப்தியடைந்து, கணவரையும் திருப்திப்படுத்த இயலும்.

இவ்வகையில், இந்த உடலுறவு ஹார்மோன்களை துண்டை சில வகை உணவுகள் உதவுகின்றன; அந்த உணவுகள் என்னென்ன என்று இப்பொழுது பார்க்கலாம்.

உடலுறவு உணர்வைத் தூண்ட, பெண்கள் உண்ண வேண்டிய உணவுகள்..!

கடல்பாசி

கடல்பாசியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் காம உணர்வைத் தூண்டக்கூடிய ஆற்றல் கொண்டுள்ளன; கர்ப்பப்பை வளமாக இருப்பதற்கும், பெண்களுக்கு மலட்டுத்தன்மை உண்டாகாமல் இருப்பதற்கும், சிறுநீரகம், கல்லீரல், கணையம், பெருங்குடல் போன்றவற்றை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் இது உதவும்.  

மீன்

சால்மன் மீனில், அதிக அளவில் உள்ள ஒமேகா-3கொழுப்பு அமிலங்கள், மறு உற்பத்தி உறுப்புகளுக்கு அதிக அளவு இரத்த ஓட்டத்தைத் தந்து, பாலுறுப்புகளை நல்ல முறையில் இயக்குகிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது. 

அத்திப்பழம்

அத்திப்பழம் உடலுறவு ஆர்வத்தை அதிக அளவில் தூண்டுகிறது என அறிவியல் பூர்வமாக, ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது; அத்திப்பழத்தில் அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதால், அது கர்ப்பப்பையையும், கருமுட்டையையும் பலப்படுத்துகிறது.

பெர்ரீ பழங்கள்..!

பிளாக்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி என அனைத்து வகை பெர்ரி பழங்களும் கருமுட்டைகளை பலப்படுத்தும் ஆற்றல் அதிகம் கொண்டவையாக இருக்கின்றன. 

பீன்ஸ் வகைகள்

பீன்ஸில் புரதமும், இரும்புச்சத்தும் அதிகளவு நிறைந்திருக்கிறது; இது உடலுறவு ஹார்மோன்களைத் தூண்டக்கூடிய ஆற்றல் அதிகம் கொண்டது; மேலும் கருமுட்டைகளை பலப்படுத்தவும் உதவுகிறது.

இலைவடிவ காய்கறிகள்

ரோமைனி, ஸ்பின்னாக், ப்ரக்கோலி போன்ற அடர் நிறத்தில் இருக்கும், இலைவடிவ காய்கறிகளில் அதிக அளவு ஃபோலேட் நிரம்பியிருக்கிறது; இதிலுள்ள அதிக அளவிலான விட்டமின் பி கர்ப்பப்பையை வலிமையாக்குகிறது. 

அமுக்கிரா கிழங்கு

இனிப்புச்சுவையுடைய இந்த கிழங்கு, மலச்சிக்கலை தீர்த்து, தூக்கமின்மையைப் போக்கும். மேலும் இது உடலை வலுவூட்டி, பெண்களின் பாலுறுப்புகளை வலுவூட்டி அவர்தம் காம உணர்வை அதிகரிக்கச் செய்ய உதவுகிறது. இதில் அதிக ஊட்டச்சத்துக்களும், அயோடின் மற்றும் இரும்புச்சத்துக்களும் நிரம்பி உள்ளன.

கிழங்கு வகைகள்

சர்க்கரை வள்ளிக்கிழங்கு, முள்ளங்கி போன்றவை கர்ப்பப்பையை வலுவாக்கி, கருமுட்டையைத் தங்க வைக்க பெரிதும் உதவுகிறது. 

காய்கறிகள் மற்றும் பழங்கள்

ஒரு நாளைக்கு 3 வேளை உணவிலும், கண்டிப்பாக காய்கறிகள் மற்றும் பழங்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்; இது விரைவில் கருத்தரிக்க உதவும்.

மேற்கூறிய உணவுகள் அனைத்தையும் பெண்கள் உண்டு வந்தால், உடலுறவில் உச்சத்தை அடைந்து, இன்ப வானில் மிதக்கலாம்; மேலும் ஆரோக்கியமாகவும், குழந்தைப் பேற்றையும் எளிதில் பெறலாம்..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon