Link copied!
Sign in / Sign up
2
Shares

பெண்கள் உடலில் வளரும் தேவையற்ற முடியை அகற்ற

பெண்களுக்கு முடி வேண்டிய ஒன்றாகவும், வேண்டாத ஒன்றாகவும் இருக்கிறது. தலையில் வளரும் முடியை பராமரிக்கவும், உடலில் வளரும் முடிகளை அகற்றவும் செய்கிறார்கள். பெண்களுக்கு உடலில் வளரும் முடிகளை அகற்ற பல வழிகள் இருக்கின்றன. பெண்கள் வேக்ஸிங், ஷேவிங் அல்லது கிரீம் மூலம் முடிகளை அகற்றுகிறார்கள். பெரும்பாலான பெண்கள் தேர்ந்தெடுப்பது வேக்ஸிங் தான்.

இதில் வலி மிகுந்ததாக இருக்க கூடியதும் வேக்ஸிங். ஆனால், மற்றவற்றை விட சிறந்ததும் கூட. எதிலும் சுவை என்பதை எதிர்ப்பார்கள் என்பதை நிரூபிக்க, இதிலும் பல இருக்கின்றன. ஆனால், அழகு நிலையங்களில் செய்யப்படும் வேக்ஸிங் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்துகிறது.

எதிலும் இயற்கை முறையை பின்பற்றுவதே சிறந்தது. முடிகளை அகற்றவும் இயற்கை வழிகளை பின்பற்றினால் சிறந்த பலன் கிடைக்கும். இங்கு இயற்கை முறையில் வேக்ஸிங் செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பேக்கிங் சோடா – 1/2 தேக்கரண்டி

ஜெலாட்டின் பவுடர் – 1 தேக்கரண்டி

வெள்ளரிக்காய் சாறு - 1 தேக்கரண்டி

பச்சை பால் – 1 தேக்கரண்டி

செய்முறை

1 ஒரு பாத்திரத்தில் பேக்கிங் சோடா, ஜெலாட்டின் பவுடர், வெள்ளரிக்காய் சாறு மற்றும் பச்சை பால் ஆகியவற்றை நன்றாக கலந்து கொள்ளவும்.

2 பின் அந்த பாத்திரத்தை 5 நிமிடங்கள் அடுப்பில் வைக்கவும்.

3 பிறகு தயாரித்து வைத்துள்ள கலவையை பிரஷ் கொண்டு, முடி நீக்க வேண்டிய இடத்தில் அடர்த்தியாக தடவவும்.

4 அதை அரைமணி நேரத்திற்கு விட்டுவிடவும்.

5 பின் அதை தோல் போல் உரித்து எடுக்க வேண்டும்.

6 இதை வாரம் இருமுறை செய்ய வேண்டும்.

இந்த வேக்ஸிங் மூலம் சருமத்தில் வளரும் தேவையற்ற முடியின் வளர்ச்சி கட்டுப்படுவதோடு, சருமத்தில் உள்ள கருமையும் நீங்கி, சருமம் நன்கு பொலிவோடும் பிரகாசமாகவும் இருக்கும். இதனால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon