Link copied!
Sign in / Sign up
35
Shares

பெண்கள் வெறுக்கும் ஆண்களின் குணங்கள்

இந்த உலகில் வித்தியாசமான குணங்கள் அனைவரிடமும் இருக்கும். ஒவ்வொருவரிடமும் நல்ல மற்றும் கெட்ட குணங்களும் இருக்கும். இது இயற்கையான ஒன்று தான். ஆனால் ஒருசில விஷயங்களில் ஒருவருக்கு நல்லதாக தோன்றுவது, மற்றவர்களுக்கு கெட்டதாகத் தான் தோன்றும். ஏனெனில் அனைவரின் மனநிலையும் ஒரே மாதிரியாக இருக்காது.

ஆண்களுக்கு திமிர் அதிகம் உள்ள பெண்களைப் பிடிக்காது. அதேப் போன்று பெண்களுக்கும் சில குணங்கள் உள்ள ஆண்களை பிடிக்காது. பெண்களுக்கு ஆண்கள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வருவதற்கும், வெறுப்பு வருவதற்கும் காரணம் ஆண்களது ஒருசில குணங்கள் தான். இங்கு எந்த மாதிரியான குணங்களைக் கொண்ட ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது என்று பார்க்கலாம்.

1 அநாகரிமாக பேசுபவர்கள்

பெண்களால் இந்த குணம் உள்ள ஆண்களிடம் பழக விரும்பமாட்டார்கள். ஏனெனில் இந்த குணம் இருந்தால், எந்த ஒரு சிறு விஷயத்திற்கு திட்டும் போதும், கெட்ட வார்த்தையை பயன்படுத்துவார்கள். எனவே இத்தகைய கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தும் ஆண்களுடன் உறவுமுறையைத் தொடர்வதைத் தவிர்ப்பார்கள்.

2 தவறான தொடர்புகள்

இந்த மாதிரியான குணமுள்ள ஆண்களுடன் நட்பு கொள்வதையும் வெறுப்பார்கள். ஏனெனில் இந்த குணமுள்ள ஆண்கள் வெறும் தேவையை பூர்த்தி செய்வதற்காகத் தான் பழகுகிறார்கள் என்ற கருத்து பெண்களின் மனதில் இருப்பதாலேயே.

3 ஆணென்னும் கர்வம்

இத்தகைய குணமுள்ள ஆண்களால் பெண்களை கவர முடியாது. மேலும் இந்த குணமுள்ள ஆண்களிடம் பழகுவதை அறவே தவிர்ப்பார்கள்.

4 குடிகாரர்கள்

பெண்களுக்கு குடிகாரர்களை பிடிக்காது. அதற்காக சுத்தமாக பிடிக்காது என்று சொல்ல முடியாது. ஆனால் தினமும் குடித்தால், அத்தகையவர்களுடன் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழ முடியாது என்பதால் தான்.

5 தனிமை விரும்பிகள்

தனிமையில் இருப்பது, இருவரும் நன்கு மனம் விட்டு பேச நன்றாக இருக்கும் தான். அதற்காக எப்போதுமே இருவர் மட்டும் தான் எங்கும் செல்ல வேண்டும், இருக்க வேண்டும் என்று நினைத்தால், அது மிகவும் கொடுமையாக இருக்கும். எனவே இத்தகைய குணமுள்ள ஆண்களையும் பிடிக்காது. ஆகவே சில இடங்களுக்கு செல்லும் போது நண்பர்களுடனும் செல்ல வேண்டும்.

6 சைகோ

சைகோ குணமுள்ள ஆண்களுடன் இருக்கவே வெறுப்பார்கள். ஏனெனில் இத்தகைய குணமுள்ள ஆண்களிடம் எவ்வளவு பாசம் இருக்கிறதோ, அதே அளவு ஆபத்தும் இருக்கும்.

7 சுயநலவாதி

ஆண்களுள் எவர் மிகவும் சுயநலத்துடன் இருக்கிறார்களோ, அத்தகயைவர்களுக்கு காதல் நிலைக்காது. ஏனெனில் இத்தகையவர்கள் எப்போதும் தன்னைப் பற்றியே நினைத்தால், எந்த பெண்ணுக்கு தான் பிடிக்கும்?

8 சந்தேகம்

உறவுமுறை நீண்ட நாட்கள் நிலைக்க வேண்டுமெனில் சந்தேகம் இருக்கவே கூடாது. அது உறவுமுறையை அழிப்பதோடு, வெறுப்பை சம்பாதிக்கும். எனவே இந்த குணமுள்ள ஆண்களையும் பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது.

9 வேலையே முக்கியம்

வாழ்க்கையை சிறப்பாக நடத்த வேலைக்கு செல்ல வேண்டியது தான். ஆனால் அதற்காக எப்போதுமே வேலையைப் பற்றி எண்ணிக் கொண்டு, துணையுடன் சந்தோஷமாக சிறிது நேரம் கூட செலவழிக்காமல் இருந்தால், அத்தகைய ஆண்களையும் பெண்கள் வெறுப்பார்கள்.

10 ரொமான்ஸ் இல்லாதவர்கள்

பெண்களுக்கு ரொமான்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் காதல் செய்யும் ஆணிடம் ரொமான்ஸ் இல்லாவிட்டால், பின் அதுவே இருவருக்கிடையே சண்டைகளை ஏற்படுத்தி, பிரிவுகளை ஏற்படுத்திவிடும்.

 
11 கவனக்குறைவு

ஆண்களுக்கு கவனக்குறைவு மற்றும் பொறுப்புணர்வு குறைவு தான். ஆண்களுள் சிலருக்கு நல்ல பொறுப்பு உள்ளது. ஆனால் பெரும்பாலானோருக்கு கவனக்குறைவு மற்றும் பொறுப்புணர்வு மிகவும் குறைவாக இருப்பதால், அத்தகையவர்களுடன் வாழ்ந்தால் எதையுமே வற்புறுத்தி தான் வரவழைக்க வேண்டும் என்று எண்ணி, இத்தகையவர்களையும் பெண்களுக்கு பிடிக்காமல் போய்விட்டது.

12 சோம்பேறித்தனம்

ஆண்களுள் எவர் மிகவும் சோம்பேறித்தனத்துடனும், எதிலும் ஒரு ஆர்வமின்றியும் இருக்கின்றார்களோ, அத்தகையவர்களால் பெண்களை சுத்தமாக ஈர்க்க முடியாது.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon