Link copied!
Sign in / Sign up
4
Shares

பெண்கள் தனியாக இருக்கும் போது மட்டும் செய்பவை

பெரும்பாலும் அனைவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் இருக்கும். அவற்றுள் சில தனிமையில் செயல்படுத்தி பார்க்க கூடியதாக இருக்கும். ஆசை இல்லாத பெண்கள் இந்த உலகில் இல்லை என்றே சொல்லலாம். ஒவ்வொரு பெண்ணிற்கும் ஆடை, ஆபரணம் மற்றும் அனைத்தின் மீதும் ஆசை இருக்கும். ஒரு பெண்ணின் செயல்கள் தவறாக இருக்கிறது என கருத்துக்கள் கூறினாலும், மற்றவர்களுக்கு அதை செய்து பார்க்க ஆர்வம் இருக்கும். பெண்களை தனிமையில் விடும் போது, அவர்களுக்குள் சிலவற்றை செய்து பார்க்க வேண்டும் என தோன்ற ஆரம்பிக்கும். இங்கு பெண்கள் தனியாக இருக்கும் போது மட்டும் செய்யும் சில செயல்களை பார்க்கலாம்.

1 உடல் அமைப்பு

பெண்களுக்கு எப்போதும் ‘சிக்’ என்று கட்சிதமாக இருப்பது பிடிக்கும். மற்றவர்கள் முன்னிலையில் அவர்களின் உடல் அமைப்புகளை சரிபார்க்க முடியாது. ஆனால், அதுவே யாரும் இல்லாத தனிமையில் உடல் அமைப்பு முழுவதையும் பரிசோதித்துவிடுவார்கள்.

2 கண்ணாடி

கண்ணாடி முன் நின்று அழகை சரிபார்ப்பது, எவ்வாறு அவர்களின் அழகு இருக்கிறது என்பதை பற்றி எல்லாம் முணுமுணுத்து கொண்டிருப்பார்கள். தனிமையில் கண்ணாடி அவர்களின் உற்ற தோழியாக மாறி இருக்கும். அவர்களின் உடல் அசைவுகளை கண்ணாடியில் பார்த்து மாற்றி கொள்வார்கலாம்.

3 பொழுதுபோக்கு

பெண்களுக்கு நடனமாடுவது, பாட்டு பாடுவது மற்றும் அன்றைய நாளை பற்றி குறிப்பேடுகளில் குறிப்பிடுவது போன்றவை சிறந்த பொழுதுபோக்காக இருக்கும். மற்றவர்கள் முன்னிலை இது போன்ற செயல்களை செய்ய சங்கடப்படுவார்கள். தனிமை கிடைக்கும் போது இவற்றை எல்லாம் செய்து மகிழ்வார்கள். 

4 குளிப்பது

இதில் பெண்களை இரண்டு வகை எனலாம். ஒன்று, நாள் முழுவதும் குளிக்காமல் நேரத்தை செலவிடுவது. இரண்டாவது வகை, விரும்பும் போல் நேரம் எடுத்து நல்ல குளியல் போடுவது. இது ஒவ்வொரு பெண்ணிற்கும் மாறுபடக்கூடிய ஒன்று. 

5 கண்ணீர்

சில பெண்களுக்கு தனிமை மகிழ்ச்சியை தந்தால், சில பெண்களுக்கு சோகத்தை பரிசளிக்கிறது. தனிமையில் பெண்கள் அவர்கள் செய்த சில தவற விஷயங்கள் அல்லது கசப்பான நிகழ்வுகளில் மூழ்கி கண்ணீர் விட துவங்கி விடுவார்கள்.

6 புன்னகை

அவர்கள் வாழ்வில் நிகழ்த்த மகிழ்ச்சியான மற்றும் அற்புதமான நிகழ்வுகளின் நினைவுகளில் மூழ்கி தனியாக புன்னகைப்பது மற்றும் சிரிப்பது போன்றவற்றை செய்வார்கள்.

7 அலங்காரம்

அவர்கள் விரும்பியபடி எல்லாம் அலகாரம் செய்து மகிழ்வது, புகைப்படம் எடுத்து கொள்வது போன்ற குழந்தைத்தனமான செயல்களை செய்வார்கள்.

8 ஆடை

சில ஆடைகளை மற்றவர்கள் முன்னிலையில் அணிவது சங்கடத்தை ஏற்படுத்தலாம். வீட்டில் இருப்பவர்களுக்கு பிடிக்காது என்பதற்காக அணியாமல் இருக்கலாம். ஆனால், அவற்றை தனியாக இருக்கும் போது அணிவார்கள்.

9 உணவு

அவர்களுக்கு விருப்பமான ஒரு உணவை கடைகளில் இருந்து வாங்கியோ அல்லது சமைத்து நன்கு சாப்பிடுவார்கள். 

10 அரட்டை

தனிமை சற்று வெறுமையை ஏற்படுத்தினால் நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு அலைபேசியில் அழைத்து நெடு நேரம் பேசிக்கொண்டிருப்பார்கள்.

11 தூக்கம்

பெண்களுக்கு தூங்குவது என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. அதிலும் யாரும் இல்லை என்றால் நாள் முழுவதையும் தூங்கியே கழிப்பார்கள்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon