Link copied!
Sign in / Sign up
75
Shares

பெண்கள் தலையில் பூச்சூடுவதால் என்ன நன்மைகள் ஏற்படுகின்றன?

Girls wore flower in hair

இந்த உலகம் முழுதும் 38000 கோடிக்கு மேலான பூ வகைகள் உள்ளன; ஆனால் 1000 கோடிப்பூக்கள் மட்டும் தான் தற்போதைய நடைமுறை பயன்பாட்டில் உள்ளன. அதனிலும் 500 கோடி பூக்கள் மட்டுமே மருத்துவத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன. பூக்களில் பெரும்பாலானவை மணமூட்டிகள், வாசனைப்பொருட்கள் மற்றும் பொருட்களுக்கு வாசனை சேர்க்க பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் பெண்கள் தலையில் சூடும் பூக்களாக விளங்குபவை சில பூக்களே! இந்தப் பூக்களை பெண்கள் தலையில் சூடுவதால் என்னென்ன பயன்கள் ஏற்படுகின்றன என்று இந்த பதிப்பில் படித்தறிந்து, மற்றவர் அறிய பகிர்வோமாக..!! 

எவ்வளவு காலம் வரை சூடலாம்?

flower varieties

ரோஜாப்பூ - 2 நாள்கள் வரை

முல்லைப்பூ - 18 மணிநேரம் வரை 

மல்லிகைப்பூ - 1/2 நாள் வரை

அல்லிப்பூ - 3 நாள்கள் வரை

தாழம்பூ - 5 நாள்கள் வரை

செண்பகப்பூ - 15 நாள்கள் வரை

சந்தனப்பூ - 1 நாள் மட்டுமே

மகிழம்பூ - சாப்பிடுகையில் மட்டும் சூடலாம் 

குருக்கத்திப் பூ - சாப்பிடுகையில் மட்டும் சூடிக்கொள்ளலாம்

மந்தாரைப்பூ, மாசிப்பூ, பாதிரிப்பூ, - இப்பூக்களின் வாசம் இருக்கும் வரை மட்டும் சூடலாம் 

பூக்களின் பயன்கள்..!

ரோஜாப்பூ 
rose flower

ரோஜாவினை தலையில் சூடுவதால், தலைச்சுற்றல், கண்நோய் போன்ற நோய்கள் குணமாகும்; ரோஜாவிற்கு அத்தகை மருத்துவ குணங்கள் உள்ளன. 

மல்லிகைப்பூ 
jasmine flower

இது மனஅமைதிக்கு உதவும்; இப்பூவினை தலையில் சூடுவதால், கண்களுக்குக் குளிர்ச்சி கிடைக்கும். 

செண்பகப்பூ 
senbaga poo

செண்பகப்பூ உடலின் வாதத்தைக் குணப்படுத்தும்; மேலும் இது பார்வைத்திறனை மேம்படுத்த உதவும்.

பாதிரிப்பூ 
பாதிரிப்பூ

இந்தப்பூ காது சம்பந்தப்பட்ட அனைத்து கோளாறுகளையும் குணப்படுத்தும்; மேலும் செரிமான சக்தியை மேம்படுத்த உதவும். இது காய்ச்சல், கண்ணெரிச்சல் போன்றவற்றையும் சரிசெய்யும். 

செம்பருத்திப்பூ 
hybiscus flower
இது நாம் அனைவரும் அறிந்த பூவே! இது தலைமுடி தொடர்பான, அத்துணை பிரச்சனைகளையும் சரிசெய்ய வல்லது; மேலும் இது உடல் உஷ்ணத்தைக் குறைத்து, குளிர்ச்சியை அளிக்கும்.
மகிழம்பூ 
மகிழம் பூ

மகிழம்பூ தலை சம்பந்தப்பட்ட அத்துணை பிரச்சனைகளையும் தீர்க்கும்; இது பல்வலி, பல் சொத்தை போன்ற பல் குறைபாடுகளை முற்றிலுமாக நீக்க உதவும்.

 

வில்வப்பூ 
vilvapoo - வில்வப்பூ

சிவனுக்கு உகந்த வில்வப்பூ சுவாசத்தை சீராக்கும்; இதனால், காசநோயைக் கூட குணப்படுத்த இயலும். 

சித்தகத்திப்பூ 
சித்தகத்திப்பூ

இந்தப்பூ தலைவலியைக் குறைக்கும்; மேலும் இது மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்க உதவும். 

தாழம்பூ  
தாழம்பூ

தாழம்பூ நல்ல நறுமணம் வீசுவதோடு, சரியான மற்றும் சீரான தூக்கத்துக்கு உதவுகிறது; இது உடல் சோர்வை முற்றிலுமாக நீக்கும். 

தாமரைப்பூ  
lotus - தாமரைப்பூ

தாமரை தலையில் உண்டாகும் எரிச்சல், தலைசுற்றல் போன்றவற்றை சரி செய்யும்; இது மன உளைச்சலை நீக்கி, மனஅமைதிக்கான வழி வகுக்கும். தாமரை தூக்கமின்மையை முற்றிலும் நீக்கி, சீரான தூக்கத்தை வழங்கும். 

கனகாம்பரம்பூ 
கனகாம்பர பூ

கனகாம்பரத்தை சூடுவதால், தலை வலி, தலைபாரத்தைச் சரி செய்ய இயலும்.

மேற்கூறிய பூக்களில், மகிழம்பூ, தாழம்பூ, ரோஜாப்பூ, சந்தனப்பூ, செண்பகப்பூ போன்ற பூக்கள் உடலின் வாதம், கபத்தை முற்றிலுமாக குறைக்கக்கூடியவை. இதனாலேயே பெண்கள் பூச்சூடுவதை நம் முன்னோர் அறிமுகப்படுத்தி, ஆதரித்து வந்தனர்; இதனால் தான் பெண்கள் "பூவை" என்றும் போற்றப்பட்டனர். இந்த உண்மையை மற்ற பெண்டிரும் அறிய பதிப்பினை பரப்புவீராக..!!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon