Link copied!
Sign in / Sign up
6
Shares

பெண்கள், பூக்களை தலையில் எப்படிச் சூட வேண்டும்?

different types of wearing flower in hair

இந்த உலகம் முழுதும் 38000 கோடிக்கு மேலான பூ வகைகள் உள்ளன; ஆனால் 1000 கோடிப்பூக்கள் மட்டும் தான் தற்போதைய நடைமுறை பயன்பாட்டில் உள்ளன. அதனிலும் 500 கோடி பூக்கள் மட்டுமே மருத்துவத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன. பூக்களில் பெரும்பாலானவை மணமூட்டிகள், வாசனைப்பொருட்கள் மற்றும் பொருட்களுக்கு வாசனை சேர்க்க பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் பெண்கள் தலையில் சூடும் பூக்களாக விளங்குபவை சில பூக்களே! இந்தப் பூக்களை பெண்கள் தலையில் சூடுவதால் என்னென்ன பயன்கள் ஏற்படுகின்றன என்று முந்தைய பதிப்பில் படித்தறிந்தோம்.

இப்பதிப்பில் பூக்களை எப்படி சூட வேண்டும்? எப்பொழுது எந்த பூவை சூட வேண்டும்? என்பது பற்றி படித்தறியுங்கள்..!

பூச்சூட வேண்டிய சரியான முறை..!
right method of wearing flower in hair

1. எப்பொழுதும் பூக்களைக் காதின் மேல் மற்றும் கீழ் நுனியின் இடைவெளியில் சூடிக்கொள்ள வேண்டும்; பூக்களை உச்சந்தலையிலோ, கழுத்துப்பகுதியிலோ தொங்கும்படியாக சூடுதல் கூடாது.

2. மணமுள்ள பூக்களை, வாசனையில்லாப் பூக்களுடன் சேர்த்து சூடிக்கொள்ள கூடாது; இச்செயல் கூந்தல் வளர்ச்சியைக் குறைக்கும்.

3. ஜாதி மல்லி, செண்பகப்பூ, செவ்வந்திப்பூ, மகிழம்பூ, சந்தனப்பூ, பாதிரிப்பூ, குடசப்பாலைப்பூ, ரோஜாப்பூ போன்ற பூக்களைக் கனகாம்பரத்துடன் சேர்த்து சூடுவது  மிகவும் நல்லது.

4. தாமரை, மந்தாரை, செவ்வரளி, கருங்குவளைப்பூ போன்றவற்றை கற்பூரத்துடன் சேர்த்துச்சூடினால், மனம் நல்ல அமைதியை பெறும்.

5. மல்லிகைப்பூவை குளிப்பதற்கு முன்னரும், முல்லை மற்றும் வில்வ பூவினை குளித்த பின்பும் சூட வேண்டும்.

6. உடலில் எண்ணெய் தேய்க்கையில், தாழம்பூவினை சூடிக்கொள்வது நல்லது.

kind of styles in wearing flowers in hair
பூச்சூடுவதால் ஏற்படும் நன்மைகள்..

1. பூக்களிலுள்ள பிராண ஆற்றல், மூளைச்செல்களால் ஈர்க்கப்பட்டு, நாளமுள்ள, நாளமில்லாச் சுரப்பிகளின் சீரான இயக்கத்திற்கு உதவுகிறது; இப்பிராண ஆற்றலானது மன அழுத்தத்தைக் குறைத்து, மன அமைதிக்கு உதவுகிறது.

2. தலையில் பூ வைத்துக்கொள்வது, நல்லதொரு மன மாற்றத்திற்கு உதவும்; மேலும் இது மூளைக்கு ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் இருந்து, பார்க்கும் தன்மையைக் கொடுக்கும்.

3. பூச்சூடிக்கொள்வது மன அழுத்தத்தால் உண்டாகும் செல் இழப்பைத் தடுக்கிறது.

4. பூக்களின் மணமானது உடற்செல்களுக்குப் புத்துணர்வை அளித்து; மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon