Link copied!
Sign in / Sign up
2
Shares

பெண்கள் கருத்தரிக்க உதவும் உடற்பயிற்சி

திருமணமான தம்பதிகள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தாலும், சுற்றி இருக்கும் உறவினர்கள் நண்பர்களின் கேள்வி அவர்களை கவலையடைய செய்து விடும். ஏதாவது விசேஷம் இருக்க எனும் அந்த கேள்வி அவர்களுள் கவலையை புகுத்திவிடும். குழந்தை பெற்றுக்கொள்வதைப் பற்றி தம்பதியர் தங்களுக்குள் திட்டம் வைத்திருந்தாலும், சரியான உடல் நலமும் தாய்மைப் பேற்றினை ஏற்றுக்கொள்ளும் மன பலமும்தான் பெண் கருத்தரிக்க ஏற்றது. அமைதியற்ற சூழலில் உண்டாகும் கரு பாதிப்பிற்குள்ளாகும் வாய்ப்புள்ளது. பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தமும் கருத்தரிப்பை  பாதிக்கும் காரணியாக உள்ளது. இங்கு பெண்கள் எளிதில் கருத்தரிக்க உதவும் உடற்பயிற்சிகளை பார்க்கலாம்.

மாதவிடாய் சுழற்சி

பெண்களின் உடலில் மாதமொருமுறை ஏற்படும் மாதவிலக்கு சுழற்சி சரியாக அமைய வேண்டும். அப்பொழுது தான் கருமுட்டை வெளியாவது சரியானபடி அமையும். 27 நாள் முதல் 32 நாட்களுக்குள் சரியானபடி மாதவிலக்கு சுழற்சி ஏற்படும் பெண்கள் ஆரோக்கியமான உடல் அமைப்பு கொண்டவர்களாக இருப்பார்கள். எனவே அந்த நேரத்தில் சரியாக திட்டமிட்டால் எளிதில் கருத்தரிக்கலாம்.

கரு உருவாக சரியான உடல் பயிற்சி மற்றும் மனப் பயிற்சி அவசியம். பெண்களுக்கு தாய்மை என்பது வரம் என்றே சொல்லலாம். முதலில் தாய்மை அடைவதை விரும்ப வேண்டும். பெற்றோர்களுக்காகவும், சொந்த பந்தங்களுக்காகவும் வேண்டா வெறுப்பாக தாய்மை அடைய நினைக்கக் கூடாது. அது கருவில் உருவாகும் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே ஆர்வத்தோடும், அக்கறையோடும், தாய்மையை வரவேற்க தயாராக வேண்டும்.

உடற்பயிற்சி

எளிய உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். குதித்தல், ஓடுதல் உள்ளிட்ட சிரமமான உடற்பயிற்சிகளை செய்ய முடியவில்லை என்றால், காற்றாட நடக்கலாம், உங்களுக்கு நடனமாட பிடித்தால் நடனமாடுங்கள். இதனால் உடலும், மனமும் புத்துணர்ச்ச்சியடையும். சின்ன சின்ன உடற்பயிற்சியினால் மாதவிலக்கு சுழற்றி சரியாக நிகழும். இதனால் மூலம் கருத்தரித்தல் எளிதாகும். இந்த உடற்பயிற்சியை கரு உண்டான பிறகும் தொடரலாம்.

சைக்கிள் ஓட்டுதல்

சைக்கிள் ஓட்டுவது மிகச்சிறந்த உடற்பயிற்சியாகும். இது கால்கள், தொடைகளின், தசைகளை வலுவாக்குவதோடு, இரத்த ஓட்டத்தை சீராக்கும். உடல் எடை குறைவதோடு, மாதவிலக்கு சுழற்சியும் சரியான இடைவெளியில் ஏற்படும். அருகில் இருக்க கூடிய இடங்களுக்கு பேருந்தை தவிர்த்து, நடந்ததோ அல்லது சைக்கிளிலோ செல்லாம்.

மன அமைதி

மன அமைதி கருத்தரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மன அமைதியின்றி இருக்கும் போது சுரக்கும் ஹார்மோன் மாதவிடாய் சுழற்சியில் மாற்றத்தை ஏற்படுத்தும். இது கருத்தரிக்கும் வாய்ப்பை குறைகிறது.

யோகா, தியானம் மன அமைதி தரும். தாய்மை அடைவதை விரும்பும் பெண்கள் மன அமைதியோடு திகழ்வது அவசியம். தேவையற்ற மன அழுத்தம், கவலை போன்றவை தாய்மைப் பேற்றினை தடுக்கும் எதிரிகளாகும். எனவே யோகா, தியானங்களில் மனதை ஈடுபடுத்துவதன் மூலம் மனம் அமைதியடையும். இதனால் உடலில் ஹார்மோன்களின் சுரப்பு சரியான முறையில் நிகழும். இரத்த ஓட்டம் சீராக அனைத்து உறுப்புகளுக்கும் சென்றடையும்.

நீச்சல்

நீச்சலானது கர்ப்பம் தரிப்பதற்கு ஏற்ற எளிதான உடற்பயிற்சியாகும். இந்த உடற்பயிற்சியை கர்ப்பம் தரித்த பின்னர் மருத்துவர்களின் ஆலோசனையோடு தொடரலாம்.

உணவு கட்டுப்பாடு

உணவு கட்டுப்பாடு என்பது அவசியமான ஒன்று என்றாலும், சில பெண்கள் உணவு கட்டுப்பாடு எனும் பெயரில் பல உணவுகளை முற்றிலுமாக தவிர்ப்பார்கள். இதனால் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படும். எந்த உணவையும் அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon