Link copied!
Sign in / Sign up
10
Shares

பெண் போற்றும் பெருமை...

இந்த உலகத்திலே கடினமான வேலை எது தெரியுமா? வீட்டு வேலை தான். வீட்டை கட்டிப்பார்,கல்யாணம் பண்ணிப்பார் என்பது பழமொழி. வீட்டை கட்டிப்பார், கட்டிய வீட்டை காத்துப்பார் என்பது புதுமொழி. ஒரு பெண் அள்ள, அள்ள குறையாத செல்வம் எது தெரியுமா? அவள் சுத்தமாக கழுவி வைத்த பாத்திரமே. தமிழில் ஒரு திரைப்படம் உண்டு. அதன் பெயர் 'மதனமஞ்சரி'. அதில் இப்படித்தான், ஒருவன் பிணத்தை தூக்கி வீசிவிட்டு வீட்டுக்கு வர அதேபோல் ஒரு உருவம் மீண்டும் வீட்டில் இருக்கும். அதுபோல், வீட்டில் உள்ளவர்கள் குடித்த தேநீர் குவளையை சுத்தம் செய்துவிட்டு பெண்ணவள் திரும்ப, மீண்டும் ஒரு பாத்திரம் அவள் கண்களுக்கு தென்படும்.

இது தான் வீட்டு வேலை செய்பவள் என நாம் சொல்லும் பெண்ணின் வாழ்வு. இருப்பினும், இதே வேலைகளை தினமும் செய்தபோதும் அவள் மனம் அமைதியுடன் இருப்பதற்கு என்ன காரணம் தெரியுமா? அவள் மனதில் அன்றிரவு குடிக்கொள்ளும் அந்த சந்தோசம் தான். 

அது என்ன சந்தோசம்? தன் பணிக்கு தானே ராணி என்ற சந்தோசம். அப்பணியை அவளால் அழகுற இனிதே முடித்த ஒரு சந்தோசம். இந்த சந்தோசம் ஐடி யில் பணிபுரிபவர்களுக்கு கூட கிடைக்காத ஒன்று என்பது மறுக்க முடியாத உண்மை. அப்படிப்பட்ட பெண் போற்றும் சந்தோசம் பற்றிய ஒரு சில வார்த்தைகள்.

படுக்கையறை அழகு:

காலை முதல் மாலை வரை மற்றவர்களுக்காக வாழும் பெண்ணவள் அதன்பின்னர் தனக்காக வாழ தொடங்குகிறாள். ஆம், இரவு நேரம் வந்துவிட்டால் போதும்... குழந்தைக்கு அழகிய படுக்கையை அமைத்து தருவது, கணவனுக்கு ஏற்ற தலையணையை தயார் செய்வது, என அந்த அறையை அழகுப்படுத்த ஆரம்பிக்க, அந்த அறை அழகை காண... வெளி வெளிச்சமும் உள் புக முயற்சிக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். உடனே, ஓடி சென்று அந்த விளக்கை மறைத்து தன் மகன்/மகள் மீது அந்த வெளிச்சம் படாதவாறு தடுப்பாள் தாயவள்.

அது போல், காலையில் குழந்தைகளை எழுப்பிவிட்டு அழகாக மடிப்பு கலையாமல் அந்த படுக்கைகளை மடித்து வைத்து அறை விட்டு வெளி சென்ற பின்பே தன் கூந்தல் கலைந்திருப்பதை அவள் உணர்வாள்.

ஆடையில் அக்கறை:

தூய்மையின் மறு உருவம், தாய்மையின் வெளி அடையாளம் என்பதை அறிந்த போதும் அலட்டி கொள்ளாதவள் தாய். ஆம், குழந்தை மற்றும் கணவன் துணிகளை துவைத்து, இஸ்திரி போட்டு சுருக்கம் இல்லாமல் மடித்து வைத்து பெருமூச்சு விடுவாள். ஆனால், அவள் துணி கலைந்திருப்பதை கணமும் நினைத்து பார்க்கமாட்டாள்.

இன்று பாதி ஆண்கள், வெளி உலகத்தில் கவுரவத்துடன் வாழ, வீட்டில் இருக்கும் பெண்கள் தான் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை.

கழிவறை அழகு:

நாம் அனைவரும் மூக்கை பொத்திக்கொண்டு புகும் ஓர் இடத்தில் தான், பெண் என்பவள் அதனை எப்படி அழகாக்க முடியும் என பார்க்க போகிறாள். கழிவறையில் அதிகம் அழுக்கு சேர, அப்போது தான் நமக்கு அதன் வாடை, மூக்கை வாட்டி வதைக்கிறது. ஆனால், வீட்டில் இருக்கும் பெண்ணிற்கு, கழிவறையில் லேசாக கறை படிந்தாலே போதும்... உடனே, சுத்தம் செய்துவிட்டு தான் வெளியில் வருவாள்.

சமையலறை:

சம்சாரம் அது மின்சாரம் என்பார்கள். அதனை நீங்கள் பார்க்க வேண்டுமா? அப்படி என்றால், சமையலறைக்கு சென்று பாருங்கள். காய்கறிகளை அள்ளிப்போட்டுக்கொண்டு அமர்ந்திருப்பவள், முந்தானையால் தன் முகத்தை துடைத்துக்கொண்டு காய்கறிகளை நறுக்குவாள். அவள் வெட்டும் வெங்காயத்தின் வேகம் சொல்லும், அவளுடைய ஆளுமை அனுபவத்தை...

வீட்டின் நுழைவாயில்:

அரசவையில் இராணி என்பவள் கட்டளைப்பிறப்பிக்க அதை மற்றவர் கேட்க வேண்டும். ஆனால், இல்லத்தரசி என்பவள் இராணியாக வாழும் போதும், இதுவரை யாருக்கும் கட்டளை பிறப்பிக்க நினைப்பதில்லை. குறிப்பாக, வீட்டு வாசலை எப்படியெல்லாம் அழகாக்க முடியும்? என்பதையே அவள் யோசிப்பாள். வருபவர்கள் முகம் சற்று  வாடினாலும், அவள் மனதளவில் ஆடிப் போவாள்.

ஏ.டி.எம் கூட நம் கட்டளைக்கு இணங்க 24 மணி நேரம் வேலை செய்யும். ஆனால், பெண் என்பவள் விருப்பத்துடன் 24 மணி நேரமும் மற்றவர்களின் நலனுக்காகவே வாழ்பவள். அவள் விருப்பு வெறுப்புக்களை மற்றவர்கள் போற்றவில்லை என்றாலும், அவளாகவே போற்றிக்கொண்டு போராடி வருகிறாள். தன் திறமையை எப்போது இந்த உலகம் பார்க்கும் எனும் நம்பிக்கையில்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon