Link copied!
Sign in / Sign up
61
Shares

பெண் குழந்தைகளுக்கான அழகிய 10 பெயர்கள்

குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவது என்பது எளிதான ஒன்றல்ல. அங்கு இங்கும் தேடி குறித்து அதை கலந்தாலோசித்து குழந்தைகளின் பெயருக்கான அர்த்தத்தை அறிந்து பெயர் சூட்ட முனைவார்கள். குழந்தைகளுக்கு சூட்டும் பெயர் நவீனமானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்பதே பெற்றோரின் குறிக்கோளாக இருக்கிறது. அதிலும் சில பெற்றோர் அதிக நபர்கள் அந்த பெயரை கொண்டிருக்க கூடாது என தேடி தேடி பெயர் வைப்பார்கள். இங்கு குழந்தைகளுக்கான அழகிய 10 பெயர்களை பார்க்கலாம். 

 1 ஆஷிகா

ஆஷிகா என்பது அனைவராலும் விரும்பக் கூடிய, ஆசிர்வதிக்கப்பட்ட என பொருள் படும். இது இந்து குழந்தைகளுக்கான இனிமையான பெயர். உங்கள் ஆசிர்வாதத்தை பெற்ற குட்டிக்கான பெயர்.

2 அபயோமி

அபயோமி என்றால் மகிழ்ச்சியை கொண்டுவர வந்தவள் என்று அர்த்தம். இது முஸ்லீம் குழந்தைகளுக்கான அழகிய பெயர். உங்களுக்கு மகிழ்ச்சியை அள்ளி கொடுத்திருக்கும் அழகிற்கான பெயர்.

3 அஸ்ரா

துளையிடப்படாத பவளம் என்பது அஸ்ரா என்பதன் பொருளாகிறது. இதும் முஸ்லீம் குழந்தைகளுக்கான அற்புதமான பெயர். உங்கள் வீட்டு குட்டி பவளத்திற்கு ஏற்ற பெயர்.

4 ப்ரனிஷ்கா

ப்ரனிஷ்கா என்றால் வாழ்க்கை, உயிர் என்று பொருள். இது இந்து குழந்தைகளுக்கான பெயர். உங்கள் வாழ்வில் உயிராக தோன்றி இருக்கும் செல்லத்திற்கான பெயர்.

5 கிவா

கிவா என்றால் உயர்ந்த மலை என்று அர்த்தம். இது இந்து குழந்தைகளுக்கான பெயர். ஓங்கி உயர்ந்து புகழ் பெறப் போகும் உங்கள் அன்பிற்கு ஏற்ற பெயர்.

6 ஜிதிகா

அழகிய சிறிய பாடல் என்பது ஜிதிகா என்பதன் பொருளாகும். இது இந்து குழந்தைகளுக்கு ஏற்ற பெயர். உங்கள் வாழ்வின் சங்கீதமாய் தோன்றி இருக்கும் செல்லத்திற்கான பெயர்.

7 ஷாம்ரா

ஷாம்ரா என்றால் தூய்மையான, உண்மையான மற்றும் பழங்கள் என்றும் பொருள்படும். இது முஸ்லீம் குழந்தைகளுக்கு ஏற்ற பெயர். உங்கள் வாழ்வில் தித்திப்பை கொண்டு வந்த குழந்தைக்கான பெயர்.

8 ஹன்னா

ஹன்னா என்றால் சாதகமான, கருணையுள்ள என்று பொருள். இது கிறிஸ்துவ குழந்தைகளுக்கு ஏற்ற பெயராக இருக்கும். கடவுளின் கருணையாக கிடைத்த உங்கள் குழந்தைக்கு ஏற்ற பெயர்.

9 பெர்னிஸ்

பெர்னிஸ் என்றால் வெற்றியை தாங்குபவள் அல்லது மகிழ்ச்சி என்று அர்த்தம். இதுவும் கிறிஸ்துவ குழந்தைகளுக்கு ஏற்ற பெயர். உங்கள் மனதை வெற்றி கொண்ட செல்லத்திற்கான பெயர்.

10 நைமா

நைமா என்றால் அமைதியான, கருணையுள்ள மற்றும் சொந்தமான என்று பொருள். இது இந்து குழந்தைகளுக்கு ஏற்ற பெயர். உங்களுக்கே சொந்தமான குழந்தைக்கு ஏற்ற பெயர்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon