Link copied!
Sign in / Sign up
11
Shares

பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கான வீடியோ

குழந்தைகள் என்றாலே ஒன்று தானே. அதில் என்ன ஆண், பெண் என பாகுபாடு என பலர் சிந்திக்கலாம். இரு பாலினத்தை சேர்ந்த குழந்தைகளை வளர்க்கும் போது பாதுகாப்பு அவசியம் என்றாலும், பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கை அதிகமாகவே தேவைப்படுகிறது. பெண்களும் சாதனையாளர்களே என வெளிவந்து சாதனை புரியும் இந்த காலத்திலும், அவர்களுக்கு எதிரான கொடுமைகள் அங்கங்கே நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

நமக்கு தெரிந்த ஒருவர் மிகவும் நல்லவர் என நம்பி பெற்றோர் குழந்தைகளை அவர்களின் கண்காணிப்பில் விடுகின்றன. உங்கள் முன் நல்லவராக இருக்கும் அந்த நபர் உங்கள் குழந்தையின் மீது தவறான எண்ணத்தை கொண்டிருந்தால், அது உங்களுக்கு எப்படி தெரியும். குழந்தைகள் உங்களிடம் கூறினால் அவர்களை தண்டிப்பீர்களோ என்று பயந்து தன்னுள் புதைத்து கொண்டு, இது போன்ற மிருகங்களிடம் சிக்கி தவிக்கிறார்கள்.

என்ன தான் பல சட்டங்கள் இயற்றப்பட்டு நடைமுறையில் இருந்தாலும், குழந்தைகள் அதிலும் குறிப்பாக பெண்குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தினமும் நடந்து கொண்டிருக்கின்றன. அக்கம் பக்கத்தினர், உறவினர், பேருந்துகளில், வெளியிடங்களில் மற்றும் ஆசிரியர்கள் என எங்கும் பெண் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

பெற்றோர் இவற்றை தவிர்க்க குழந்தைகளுக்கு இது போன்ற கயவர்களை எப்படி கையாள வேண்டும், எப்படி தற்காத்து கொள்ள வேண்டும் போன்றவற்றை சொல்லி கொடுக்க வேண்டியது அவசியம். பெண் குழந்தைகளை எப்போதும் பெற்றோர் கண்காணிப்பில் வைத்து கொள்ள வேண்டியது அவசியம். முடிந்த வரை அவர்களுக்கு தற்காப்பு கலைகளை கற்று கொடுக்கலாம்.  

 Video Credits : Tamil

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon