Link copied!
Sign in / Sign up
2
Shares

பெண் குழந்தைகளை பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் என்னென்ன?

கருத்தரிக்கும் முன்னரும், கருத்தரித்த பின்னரும் கர்ப்பிணிகளின் மனதை ஒரு சில கேள்விகள் நச்சரித்துக் கொண்டிருக்கின்றன. அதில் முக்கியமான கேள்வி பிறக்கப் போகும் குழந்தை ஆணா?  பெண்ணா? என்பது தான். இதை தெரிந்து கொள்வது சட்டப்படி குற்றம் என்றாலும், பெண்ணின் மனது சட்டத்தை துறந்து, அதை தெரிந்து கொள்ள  நினைக்கிறது. அப்படி பெண் குழந்தைகள் பெறுவதற்கான கர்ப்பகால சாத்தியக் கூறுகள் என்னென்ன என்று இந்த பதிப்பில் படித்தறியலாமா??

தோற்றத்தின் பளபளப்பு  

கர்ப்பிணிகளின் உடல் மற்றும் முகத்தோற்றம் பிங்க் மற்றும்  இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.

அதேபோல் கர்ப்பிணிகளின் எடையும் சற்று அதிகமாய் இருக்கும். வாந்தி, மயக்கம் கர்ப்பிணிகள் அனைவருக்குமே வாந்தி, மயக்கம் ஏற்படுவது இயல்பானதுதான். ஆனால் கருவில் உள்ளது பெண்குழந்தை என்றால் அவர்கள் அதிர்ஸ்டசாலிகளாம். ஆம் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படுவது குறைவாகவே இருக்குமாம். 

இனிப்பு உணவுகள் 

பொதுவாகவே கர்ப்பிணிகளுக்கு புளிப்புதான் விருப்பமான உணவாக இருக்கும். ஆனால் பெண் குழந்தையை சுமக்கும் கர்பிணிகளுக்கு இனிப்பு உணவு என்றால் மிகவும் பிடிக்குமாம். கர்ப்பத்தில் உள்ள பெண்குழந்தைக்கு இனிப்பு அதிக விருப்பம் என்பதால் தாய்க்கும் அது விருப்பமான உணவாக உள்ளதாக பிரசவம் பார்க்கும் பெண்கள் கூறுகின்றனர். 

இதயத்துடிப்பு அதிகம் 

கருவில் உள்ள குழந்தைக்கு இதயத்துடிப்பு அதிகம் இருக்கும். ஒரு நிமிடத்திற்கு 140 முறை துடிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உங்கள் குழந்தையின் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 140 ஆக உள்ளதாக சந்தேகமே வேண்டாம் அது பெண் குழந்தைதான் என்று அவர்கள் கூறுகின்றனர். 

கர்ப்பிணிகளே உங்கள் உடல் அமைப்பு, உங்களுக்கு ஏற்படும் மாற்றங்களை வைத்து ஆண் குழந்தையா, பெண்குழந்தையா என்பதை தெரிந்து கொள்ளுங்களேன்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon