Link copied!
Sign in / Sign up
1
Shares

பயணத்தில் தாய்ப்பால் கொடுக்க சிரமமா? தீர்வு இதோ...

தாய்ப்பால் தருவது என்பது தாய்மார்களுக்கு முக்கியமானது என்றாலும், வீட்டில் இருக்கும்போது மட்டுமே இதற்கான சவுகரிய நிலை என்பது அவர்களுக்கு அமைகிறது. பயணம் என வந்துவிட்டால் தாய்ப்பால் தர சங்கடம் கொண்டு பாட்டில் பாலை கொடுக்கும் எத்தனையோ பெற்றோரை இன்றைய நாளில் பார்க்க முடிகிறது. தாய்ப்பால் தரும் நீங்கள் முடிந்த அளவுக்கு அதை தொடர்வது தான் நல்லது. எப்படி பயணத்தில் தாய்ப்பால் கொடுப்பது எனும் கவலை ஒரு சிலருக்கு இருக்கலாம். இதோ உங்களுக்காக தான் இந்த எட்டு எளிய வழிமுறைகள். பார்க்கலாமா?

1. தாய்ப்பால் தருவதை நிறுத்தாதீர்:

தாய்ப்பால் என்பது சரியான முறையில் தரப்படுவதற்கு ஆதாரம், நீங்கள் தரும் தாய்ப்பால் என்பது தங்குதடையின்றி உங்கள் குழந்தைக்கு கிடைப்பதே ஆகும். ஒரு நாளைக்கு 10 முதல் 12 முறை தாய்ப்பால் கொடுக்க உங்கள் பால் சுரப்பு என்பது பயணத்தின் போதும் தடையின்றி சுரக்கிறது.

2. மறைத்து தாய்ப்பால் தருவது:

நீங்கள் பயணத்தின்போது தாய்ப்பால் தர ஏதுவான முறையை வீட்டிலேயே பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். அதாவது உங்கள் துப்பட்டா அல்லது சேலை கொண்டு எப்படி மறைத்து தாய்ப்பால் தருவது என்பதை வீட்டிலே பழக்கப்படுத்தி கொள்ளுங்கள். இதனால் நீங்கள் தாய்ப்பால் தருவது மற்றவர்களுக்கு தெரியாது. உங்களுக்கும் அசவுகரிய நிலையை ஏற்படுத்தாது.

3. பொது இடத்தில் கொடுக்க தயக்கமா:

நீங்கள் பொதுஇடத்தில் தாய்ப்பால் கொடுக்க தயங்கினால், தவறு இல்லை. உங்கள் நிலைக்கு ஏற்ற இடம் அமையும் வரை பொறுமையுடன் இருந்து உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் தந்திடலாம். இடம் அமையாத விரக்தியை உங்களிடமோ, உங்கள் குழந்தையிடமோ காட்ட வேண்டாம்.

4. உங்கள் பாதுகாப்பு தேவை:

சாலையில் செல்லும் தாய்மார்கள் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். தாய்ப்பால் தருவதென்பது சற்று கடினமாக இருக்க, உங்கள் ஆற்றலையும் நீங்கள் இழக்கக்கூடும். தினமும் சாப்பிடும் உணவில் மிகவும் கவனம் இருக்க, ஒரு நாளைக்கு 13 கிளாஸ்  தண்ணீர் குடிக்க வேண்டும்.

5. மன அழுத்தம் வேண்டாம்:

அனைத்து நேரத்திலும் அணைக்க துடிக்கும் மன அழுத்தத்தை ஓரம் கட்டி வைத்திடுங்கள். தாய்ப்பால் தரும் தாய்மார்களுக்கு ஓய்வு என்பது மிகவும் அவசியம். நீங்கள் சுகவீனமாக உங்கள் உடல் இருப்பதை உணர்ந்தால்... வேலை செய்வதை குறைத்துக்கொள்ளுங்கள்.

6. ஐஸ் அவசியம்:

உறைந்த பால் என்பது ஏழு நாட்களுக்கு இருக்கும். ஐஸ் என்பது இருபத்து நான்கு மணி நேரம் இருக்கும். நீங்கள் பாலை சேமித்து வைக்க விரும்பினால், ஐஸ் என்பது உங்களுக்கு அவசியமாகிறது.

7. கலோரி எண்ணிக்கை:

உங்கள் குழந்தைக்கு தேவையான கலோரி கிடைத்தல் வேண்டும். அவர்கள் முழு பயணத்தில் தூங்க விரும்பினால்... அவர்களை எழுப்பி தாய்ப்பால் தர தயக்கம் வேண்டாம். ஏனெனில் நீங்கள் தரும் தாய்ப்பால் தான் அவர்களின் உணவு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

8. கூச்சம் வேண்டாம்:

நம் நாட்டில் நாளுக்கு நாள் குழந்தைகள் பிறந்துவரும் வேளையில், கண்டிப்பாக அனைத்து தாய்மார்களுக்கு தாய்ப்பால் தருவது என்பது மிகவும் அவசியமாகிறது. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என கவலைப்படாமல், உங்கள் குழந்தை என்ன நினைக்கிறது? அவன்/அவளுக்கு பசிக்கிறது போல என நினைத்தால் கண்டிப்பாக உங்கள் மனதில் எழும் தயக்கம் தளர்ந்து தைரியத்துடன் வெளி உலகத்திலும் தாய்ப்பால் தர முடியும். நீங்கள் இரண்டு பேருக்கு முன்னோடியாகவும் இருக்கக்கூடும்.

என்ன தாய்மார்களே! தயக்கம் கொண்டது போதும். புறப்படுங்கள்... தாய்ப்பால் என்பது தவிர்க்க வேண்டிய ஒன்றல்ல. உங்கள் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்தை தருவதோடு, தாய் - பிள்ளையின் பந்த பிணைப்பாகவும் தாய்ப்பால் என்றுமே இருக்கிறது. 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon