Link copied!
Sign in / Sign up
6
Shares

பட்டுப்புடவையை பராமரிக்கும் வழிகள்..!!

பெண்களின் விருப்பங்களில் முக்கியமானது ஆடைகள்; அந்த ஆடைகளிலும் மிக முக்கியமான விருப்பமாக பெண்கள் கொண்டிருப்பது பட்டு சேலைகள். இந்த பட்டு சேலைகளை பெண்கள் காட்டுகிறார்களோ இல்லையோ, அவற்றை வித விதமாய் வாங்கி குவிப்பதில் பெண்களுக்கு இருக்கும் ஆசை அளவற்றது. அப்படி இஷ்டப்பட்டு, பார்த்து பார்த்து வாங்கிய பட்டு சேலைகளை நீங்கள் பராமரிக்கிறீர்களா என்றால் இல்லை.. அதை எப்படி பராமரிப்பது என்றே நீங்கள் அறிந்திருப்பதில்லை. ஆகவே, பட்டு சேலைகளை எப்படி பராமரிப்பது என்று இந்த பதிப்பின் வாயிலாக உங்களுக்கு கற்றுத்தருகிறோம்.. படித்து, கற்று பயனடையுங்கள்..!!

பட்டு புடவைகளை, பாலியஸ்டர், கரிஷ்மா, ஆஸாயி போன்ற போலிகள் கலந்தும் தயாரிக்கின்றனர்; ஆகையால், வாங்குகையில் கவனம் அவசியம்..!

விலை உயர்ந்த பட்டு சேலைகளை அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளோம்; அதை சரிவர பராமரித்தால் தான் அதன் பண்பு மாறாது, நீண்ட காலத்திற்கு பயன்படுத்த முடியம்..!

பராமரிப்பு முறைகள்.! 

1. அங்காடியில் இருந்து வாங்கி வந்த புடவைகளை, அதிக நாட்கள் பாலிதீன் கவர் அல்லது பையிலேயே வைத்திருக்கக் கூடாது.

2. 3 மாதத்திற்கு ஒருமுறை பட்டு புடவைகளை காற்றாட உலரவிட்டு, மடிப்புகளை மாற்றி மடித்து வைக்க வேண்டும்.

3. இந்த புடவைகள் மீது அழுத்தமான எப்பொருளும் வைத்தல் கூடாது.

4. பட்டு துணியை தண்ணீரில் நனைக்க நேர்ந்தால், சரிகை உப்பி, துணி சுருங்கிவிடும்; உலர்ந்த பின் துணி சாதாரண நிலைக்கு வந்துவிடும், ஆனால், சரிகை அப்படியே இருந்துவிடும். இது புடவையின் அழகைக் கெடுத்துவிடும்.

5. பட்டு புடவைகளை கட்டாமல், அலமாரியிலேயே வைத்திருந்தால், பட்டின் பசை துணியை நாசமாக்கி விடும்; அதனால், பட்டினை ஒரு காட்டன் துணியால், சுற்றி வைத்தால் கெடாமல் இருக்கும்..!

6.பட்டு புடவையில் அழுக்கு ஏதேனும் இருந்தால், அதனை ட்ரைவாஸ் செய்வது நல்லது.

7. பொலிவிழந்த பட்டினை, தறியில் இட்டு பசை போட்டால், இழந்த பொலிவு மீண்டும் கிடைத்து விடும். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon