Link copied!
Sign in / Sign up
44
Shares

பாத வலி ஏற்படுவதற்கான காரணங்களும், அதை சரி செய்யும் முறைகளும்

பாதம் என்பது மனித உடலின் மிகவும் சிக்கலான கட்டமைப்புகளில் ஒன்றாகும். 24 எலும்புகள், பல தசைநாண்கள் மற்றும் தசைநார்கள் கொண்டவை. பாத வலி என்பது அனைவரும் எப்போதும் அல்லது குறிப்பிட்ட நேரத்தில் பாதிக்கப்படும் ஒன்று. தொடக்கத்தில், பாத வலி ஒரு சிறிய அறிகுறி போல தோன்றுகிறது. ஆனால் அதை அலட்சியம் செய்ய வேண்டாம் என பரிந்துரைக்கப்படுகிறது. பாத வலி என்பது மிக எளிய வழிகளால் தவிர்க்கவும், சரி செய்யவும் முடியும். அவை ஏற்படுவதற்கான காரணங்களையும், சரி செய்யும் முறையையும் காண்போம். 

பாத வலி ஏற்படுவதற்கான காரணங்கள்

1 காலில் அணிபவற்றை கவனியுங்கள்

பெரும்பாலும் பாத வலி சரியான காலணிகள் அணியாததால் ஏற்படுகின்றன. குழந்தைகளுக்கு அணிவிக்கும் காலணிகள் சரியான அளவில் உள்ளனவா அல்லது சிறியதாக காலில் அழுந்துபவையாக இருக்கின்றனவா என்பதை கவனியுங்கள்.

2 காயங்கள் மற்றும் தோரணைகள்

தவறான கால் தோரணைகள், கால் காயங்கள், கணுக்கால் திமிரும்புகள், தசைப்பிடிப்பு, சுளுக்குகள், விகாரங்கள் போன்றவை கால் வலிக்கு முக்கிய காரணங்களாகும். தவறான உத்தியை கையாளும் போது நடனவீரர்கள், தடகள வீரர்கள் மற்றும் உடற்பயிற்சி செய்பவர்களும் பெரும்பாலும் பாத வலிக்குள்ளாகிறார்கள்.

3 சில நோய்கள்

பாதங்களில் அனைத்து நரம்புகளும் ஒருங்கிணைவதால், சில நோயின் அறிகுறிகளை அதன் வலிகள் மூலம் அறிய முடியும். தலை வலி நீரிழிவு, தொற்று, கால்விரல் நகங்கள் உள்நோக்கி வளர்வது, மருக்கள், கீழ்வாதம் மற்றும் பிற நோய்கள் கால் வலிக்கு காரணமாகும்.

4 உடல் எடை

நாம் உடல் எடை அதிகமாக இருந்தாலும் பாத வலி ஏற்படும். நாம் உடலில் எடையை கால்களால் தாங்க முடியாத போது இவை ஏற்படுகின்றன. இதற்கு உடல் எடையை சரியாக பராமரிப்பது அவசியமாகும்.

பாத வலிக்கான அறிகுறிகள்

பாத வலிகள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

1 பாத வளைவு வலி

2 மேல் பாத வலி

3 கீழ் பாத வலி

4 குதிகால் வலி

5 பாத மேடுகளில் ஏற்படும் வலி

பாத வழியை சரி செய்யும் முறைகள்

1 பாத நிலைகள்

கால் பாதங்களை சரியான நிலைகளில் வைப்பது என்பது எளிமையாக சரி செய்ய கூடிய முறையாகும். பெரும்பாலும், நாம் தவறான நிலைப்பாடுகளில் கால்களை வைக்க கூடாது. நீங்கள் உட்காரும்போது, உங்கள் கால்கள் தரையில் படுகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

2 முழங்கால் கோணம்

உட்கார்ந்திருக்கும் போது, முழங்கால் கோணத்தைக் கருத்தில் கொண்டு, உங்கள் முழங்கால் கோணம் 90 டிகிரி அளவில் இருக்குமாறு அமர்வது சிறந்தது.

3 கால் மிதி

ஆயுர்வேத படி, குளிர்காலத்தில், சாதாரண தரையில் நடப்பதை விட கால் மிதிகளின் மீது நடப்பது சிறந்தது. எனவே குளிரினால் காலின் பாதமும், நரம்புகளும் பாதிக்காமல் இருக்கும்.

4 பாத உடற்பயிற்சிகள்

கால்களுக்கு கீழே ஒரு சுற்று குச்சியை வைத்து, அதை மென்மையாக உருட்டுவது பாத வலிக்கு சிறந்த நிவாரணியாகும்.

5 உங்கள் காலணிகளை (shoes) நீக்கவும்

நீங்கள் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது அல்லது நீண்ட காலமாக ஒரு இடத்தில் நிற்கும்போது, உங்கள் காலணிகளை கழட்டி வைத்து கொள்வது சிறந்தது. கால் சாதாரண நிலையில் சமமாக இருக்கும். உங்கள் காலணிகள் கால்களை வளைத்து வைக்கின்றன. எனவே, கொடுக்கப்பட்ட வாய்ப்பில் காலணிகள் தவிர்க்கப்படுவது உண்மையில் உதவுகிறது.

6 நோய் சிகிச்சை

உங்கள் மருத்துவர் கீல்வாதம் அல்லது நீரிழிவு போன்ற ஒரு குறிப்பிட்ட நோயை பாத வலி மூலமாக கண்டுபிடித்தால், அந்த நோய்க்கு சிகிச்சையளிப்பது பாத வலி நிவாரணத்திற்கு உதவுகிறது.

7 கால் க்ரீப் கட்டு

சில சந்தர்ப்பங்களில், தூக்கத்தின் போது க்ரீப் கட்டு சில பிரச்சனைகளை கட்டுப்படுத்தி சிக்கலை தீர்க்க உதவுகிறது. ஆனால் இதை சரியாக கட்டுவது மிகவும் அவசியமான ஒன்று. இது பாத வளைவு வலிக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.

8 தூய்மை

அடிக்கடி நகங்களை வெட்டுவது, கால்களை உலர்த்தி வைத்திருப்பது, சுத்தமாகவும் மற்றும் தூய்மையாகவும் வைப்பதின் மூலம் நோய் தொற்று மற்றும் வலியை தடுக்கிறது.

9 ஐஸ் பேக்

கடுமையான பாத வலி ஏற்படும் போது, ஐஸ் பேக் பாத வலிக்கு சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது.

10 பாத மசாஜ்

ஆயுர்வேத எண்ணெய்களுடன் பாதங்களுக்கு மசாஜ் செய்தால் பாத வலியிலிருந்து நிவாரணம் பெற முடியும். உங்கள் கால் பாதங்களில் நீங்கள் மசாஜ் செய்வதை காட்டிலும், வேறு ஒருவர் செய்தால் சிறந்த பலனை பெற முடியும்.

11 சரியான ஜோடி செருப்புகள் அல்லது காலணிகள் (shoes)

ஷூஸ் மற்றும் கால் அணிகள் வாங்கும் போது மிகவும் குறைவான குதிகால் உயரம் கொண்டது, கடினத்தன்மை அற்றது, ஊசி போல் குத்தும் தன்மையற்றவைகளாக வாங்குவது மிகவும் சிறந்தது.

இவை அனைத்தையும் செய்தும் பலனளிக்கவில்லை என்றால், நீங்கள் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். ஏனெனில் கால் பாதங்களில் ஏற்படும் வலி, வேறு ஏதேனும் நோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம் என்பதால்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon