Link copied!
Sign in / Sign up
8
Shares

பசியை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க உதவும் 5 பொருட்கள்

பிடித்தமான உணவை சாப்பிட்டுக் கொண்டே உடல் எடையை குறைக்க முயற்சிப்பவரா நீங்கள்? உடல் எடை குறைப்பு என்பது மிகவும் கடினமான ஒன்று. பிடித்த உணவை சாப்பிட வேண்டும் என்கின்ற தூண்டுதல் ஒரு பக்கம் இருந்தாலும், கண்டிப்பான உணவு முறை காரணமாக அதை சாப்பிடாமல் கட்டுக்கோப்புடன் இருப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. உணவு வேளைகளுக்கு இடையே நீங்கள் கண்ட நொறுக்கு தீனிகளை சாப்பிடாமல் இருந்தாலே, உடல் எடை அதிகரிக்காது. இங்கே, பசியை கட்டுப்படுத்தும் சில உணவுகளை பட்டியலிட்டுள்ளோம். இதனால் உங்களுக்கு இடை இடையே பசிக்காது. அதனால், நீங்கள் உணவை தவிர  வேறு எதுவும் சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்படாது.

1 ஆப்பிள்

ஆப்பிள் மிகவும் ஆரோக்கியமான உணவு பொருள். உங்கள் உடல் நலத்தை காப்பதோடு, உங்கள் உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படும். மற்ற உணவுகளுடன் ஒப்பிடுகையில், ஆப்பிள் வயிற்றை நிறைப்பதால் நீண்ட நேரம் பசி எடுக்காது. காலையில் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது, உணவு வேளைகளுக்கு நடுவே பசி ஏற்படுவதை தடுக்கும். ஆப்பிளுடன் இலவங்கம் சேர்த்து சாப்பிட்டால் பசியை கட்டுக்குள் வைத்திருக்கும் என ஆய்வின் முடிவுகள் நிரூபித்துள்ளன.

2 கிரீன் டீ மற்றும் காபி

கிரீன் டீ மற்றும் காபி ஆகியவை பசியுணர்வை கட்டுப்படுத்தும். கிரீன் டீயுடன் சிறிது தேன் கலந்து குடித்தால், மிகவும் சுவையாக இருக்கும். மேலும், உங்கள் இரத்தத்தில் உள்ள சக்கரை மற்றும் குளூக்கோஸின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். அத்துடன், இன்சுலின் சுரப்பை சமநிலையில் வைத்திருக்க உதவும். காபியை எடுத்துக்கொண்டால், அது உடலின் வளர்ச்சிதை வளர்ச்சியை அதிகரித்து, பசியை கட்டுக்குள் வைத்திருக்கும். இந்த இரண்டு பானங்களையும் குறைந்த அளவில் எடுத்துக்கொள்வது சிறந்தது. அதுமட்டுமில்லாமல், அதிகளவு சக்கரை மற்றும் கிரீம் சேர்த்துக்கொள்வதை தவிர்க்கவும்.

3 நார்ச்சத்து

நார்ச்சத்து நிறைந்த உணவுகள் பசியை கட்டுக்குள் வைத்திருக்கும். கொண்டைக்கடலை, முழு கோதுமை ஆகியவை உங்கள் பசியுணர்வை கட்டுப்படுத்தும்.

4 அவகேடோ (அல்லது) வெண்ணெய்ப்பழம்

இந்த பழத்தில் பல நன்மைகள் அடங்கியுள்ளது. குறிப்பாக இதை உணவாக எடுத்துக்கொள்ளும் பொழுது. ஒரு நாளைக்கு ஒரு பழம் சாப்பிட்டால் அது உங்கள் உடல் நலத்தை காப்பதோடு, உங்கள் பசியையும் கட்டுப்படுத்தும். இது சுவை மிகுந்ததாக மட்டுமில்லாமல் உங்களை நாள் முழுவதும் மிகுந்த ஆற்றலுடன் வைத்திருக்கும். உடல் எடையை குறைக்க இது ஒரு சிறந்த வழி.

5 நட்ஸ்

உங்கள் உணவில் எந்த வகையான நட்ஸ்கள் சேர்த்துக்கொண்டாலும், அது உங்களின் உடல் எடையை குறைக்க உதவும். நொறுக்கு தீனிகள் உண்பதற்கு பதிலாக இவற்றை சாப்பிடலாம். இது உங்களுக்கு பல ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon