Link copied!
Sign in / Sign up
20
Shares

பாசிப்பருப்பு இட்லி

பாசிப்பருப்பு இட்லி சத்தானது, எளிதில் செரிக்கும் தன்மை கொண்டது. சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது. அனைத்து வகை வயதினரும் உண்ணத் தகுந்த உணவு. இத்தனை சிறப்பு வாய்ந்த பாசிப்பருப்பு இட்லி எப்படி செய்வது அனா அறியலாமா..???

தேவையானப் பொருட்கள்:

பாசிப்பருப்பு - 2 கப், தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டிகள், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கியது), பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி, தயிர் - 1 கப், கடுகு - 2 தேக்கரண்டிகள், எண்ணெய், உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை:

  • முதலில் பாசிப்பருப்பைத் தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு, தண்ணீரை வடித்துவிட்டு மின்னம்மியில் (mixie) சேர்த்து கொஞ்சம் வற வறவென்று இருக்குமாறு அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சுடானதும், கடுகு, பெருங்காயத்தூள், நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து தாளித்து அரைத்த பாசிப்பருப்புடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
  • பிறகு இதனுடன் சமையல் சோடா, தயிர், தேங்காய்த் துருவல், சிறிதளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து மாவை 1 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.
  • பின் இட்லி தட்டில் சிறிதளவு எண்ணெய் தடவி, அதில் இட்லி மாவை ஊற்றி, வேகவைத்து எடுத்தால், சத்து நிறைந்த தானிய பாசிப்பருப்பு இட்லி தயார்!
Click here for the best in baby advice
What do you think?
50%
Wow!
50%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon