Link copied!
Sign in / Sign up
10
Shares

பருப்பு இல்லாமல் வடை செய்யும் எளிய முறை - வீடியோ

பொதுவாகவே வடை என்றால் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவர்க்கும் பிரியம் தான். ஆனால், பருப்பை ஊற வைத்து சரியான அளவில் தண்ணீர் சேர்த்து அரைத்து வடை தயாரிப்பதற்கும் போதும் போதும் என்றாகி விடும். சிறிது தண்ணீர் அதிகமாக போனாலும் வடை செய்வது கடினமாகி விடும். இதனால் பெரும்பாலும் கடையிலேயே வாங்கி சாப்பிடுகிறோம். அவை ஆரோக்கியமானதா? சுகாதாரமான? என்ற கேள்விகள் நமக்கு எழும் போது நாம் அவற்றை தவிர்த்து விடுகிறோம். இங்கு பருப்பு இல்லாமல் வடை செய்யும் முறையை பார்க்கலாம்.

Video Credits : Papa's Kitchen

தேவையான பொருட்கள்

1 ப்ரெட் - 8 துண்டுகள்

2 அரிசி மாவு - அரை கப்

3 சீரகம் - ஒரு தேக்கரண்டி

4 வெங்காயம் - பொடியாக நறுக்கியது ஒன்று

5 கேரட் - துருவியது ஒன்று

6 இஞ்சி - சிறிதளவு

7 கருவேப்பிலை - சிறிதளவு

8 கொத்தமல்லி - சிறிதளவு

9 பச்சை மிளகாய் - தேவைக்கேற்ப

செய்முறை

1 பிரெட்டின் ஓரத்தை நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீர் சேர்க்காமல் மிக்சியில் அரைத்து துகள்களாக்கி கொள்ளவும்.

2 அதனுடன் அரிசிமாவு, சீரகம், வெங்காயம், கேரட், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி, நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்க்கவும்.

3 சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து நன்கு வடைமாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

4 வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மாவை வடை போல் தட்டி எண்ணையில் வேக வைத்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

குழந்தைகளுக்கான மாலை நேரங்களில் கொடுக்கலாம். இதை செய்வதும் எளிது, குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon