Link copied!
Sign in / Sign up
13
Shares

பருப்பு இல்லாமல் சாம்பார் வைக்க முடியுமா? - செய்முறை வீடியோ

நாம் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான ஒன்று தான் உணவு என்றாலும், அது சுவையாய் இருந்தால் மட்டுமே நமக்கு பிடிக்கும். குறிப்பாக இட்லி, தோசை மற்றும் பணியாரம் போன்ற உணவுகளை சாப்பிடும் போது சட்னி இருந்தாலும், பலரின் எதிர்பார்ப்பு என்னவோ சாம்பார் தான். காலையில் வேலைக்கு செல்லும் அவசரத்தில் காலை உணவு மற்றும் மதிய உணவை தயாரிக்கும் போது சாம்பார் செய்வது சற்று கடினமான ஒன்றாக இருக்கும். பருப்பு இல்லாமல் சாம்பார் செய்ய முடிந்தால் எவ்வளவு எளிதாக இருக்கும் என்பது பல பெண்களின் எண்ணமாக இருக்கும். இங்கு பருப்பு இல்லாமல் சாம்பார் வைக்கும் செய்முறை வீடியோவை பார்க்கலாம்.

Video Credits : Papa’s Kitchen

தேவையான பொருட்கள்

1 பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி

2 சோம்பு - 1 தேக்கரண்டி

3 வெங்காயம் - 2

4 தக்காளி - 2

5 பச்சை மிளகாய் - 2

6 வரமிளகாய் - 2

7 மஞ்சள் தூள் - சிறிதளவு

8 மிளகாய் தூள் - தேவையான அளவு

9 உப்பு - தேவையான அளவு

10 எண்ணெய் - தேவையான அளவு

11 கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை

1 சோம்பு மற்றும் பொட்டுகடலையை மிக்ஸில் போட்டு பொடியாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

2 அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து பொறியவிடவும்.

3 அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து வதங்கிய பின், வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

4 நன்கு வதங்கியதும், மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் சேர்த்து வதக்கி, அதனுடன் அரைத்து வைத்தவற்றை சேர்க்கவும்.

5 இப்போது தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

சுவையான பருப்பு இல்லாத சாம்பார் தயார்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon