Link copied!
Sign in / Sign up
28
Shares

பெற்றோர் பராமரிப்பு: எல்லா அன்னையர்களும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய 11 உண்மைகள்…

குழந்தைகளை எவ்வாறு வேண்டி விரும்பி பெற்றுக் கொண்டோமோ, அவர்களை நற்செல்வங்களாய் வளர்க்க அதே அளவு முக்கியத்துவத்தை தர வேண்டும். குழந்தை வளர்ப்பு என்பது சாதாரண விஷயமல்ல; குழந்தைகளை நீங்கள் எப்படி வளர்க்கின்றீர் என்பதை பொறுத்தே அவர்களின் எதிர்காலம் அமையும். ஆகையால், குழந்தைக்கு நல்லதொரு எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க, அன்னையர்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய 11 உண்மைகளைப் பற்றி இப்பதிப்பில் காணலாம். 

1. தாய்ப்பால் புகட்டுதல்..

குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவது என்பது எளிதான காரியமே, ஆனால் எளிதானதல்ல. குழப்பமாகவுள்ளதோ? சில சமயங்களில் குழந்தைகள் பால் குடிக்காது ாலும், அல்லது ஏதேனும் உடல் உபாதைகள் குழந்தைக்கு ஏற்பட்டு பால் குடிக்க மறுக்கும். அச்சமயங்களில் தாய்க்கு பொறுமை மிகவும் அவசியம்; பொறுமை கொள்ளாது புட்டி பால் புகட்டுதலுக்கு மாறிவிடக்கூடாது. தாய்ப்பால் என்பது குழந்தையின் வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒன்று.

2. தாய்மை..

குழந்தை பிறந்த அந்த கணம் முதல், தன குழந்தைக்கு அனைத்தையும் தானே செய்ய வேண்டும் என தாய்க்குத் தோன்றலாம். அச்சமயங்களில் நீங்கள் எண்ணுவதை மட்டுமே செய்யாமல், உறவினரின் அறிவுரையைக் கேட்டு நடப்பது நல்லது.

3. இராணுவ ஆட்சி செல்லாது..

குழந்தை இந்த நேரத்தில் எழ வேண்டும்; இப்பொழுது தான் உணவு உண்ண வேண்டும், இது குளிக்கும் நேரம் என இராணுவ ஆட்சியை குழந்தையின் மீது செலுத்தக் கூடாது. அது குழந்தை அதனை, அதன் போக்கில் வளர விடவேண்டும்.

4. பிரவத்தின் மன அழுத்தம்..

பிரசவத்திற்குப் பின் பெரும்பாலான பெண்களுக்கு மனநிலையில் மாற்றங்கள் ஏற்படலாம். அம்மனநிலையில் உங்கள் கணவரையே கொள்ள வேண்டும், ாலும் குழந்தையை அறைய வேண்டும் எனது தோன்றலாம்; ஆனால் அச்சமயம் உங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, நீங்கள் ஒரு தாய் என்பதை உணர வேண்டும்.

5. உங்களின் மீதும் கவனம் தேவை..

குழந்தையை நன்றாக கவனிக்க வேண்டுமெனில், அதற்கு நீங்கள் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். ஆகையால் நீங்கள் சத்தான உணவுகள், பழங்களை உட்கொள்ள வேண்டும் மற்றும் ஆசனங்கள், உடற்பயிற்சி ஆகியவற்றையும் மேற்கொண்டால் நல்லது.

6. ஒப்பிடாதீர்கள்..

உங்கள் குழந்தையின் வளர்ச்சியை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடாதீர்கள். ஏனெனில், ஒவ்வொரு குழந்தையும் அதற்கேற்ற தனித்தன்மை பெற்றிருக்கும், அதனால் மற்ற குழந்தைகளோடு உங்கள் குழந்தையை ஒப்பிட்டு , குழந்தையின் மதிப்பை நீங்களே குறைக்காதீர்கள். உங்களுக்கு குழந்தை வளர்ப்பில் ஏதேனும் சந்தேகம் தோன்றினால், மருத்துவரிடம் வினவுங்கள், மற்றவரிடம் அல்ல.

7. பொம்மைகள்..

குழந்தைகளுக்கு பொம்மைகள் என்றால் மிகவும் இஷ்டம். அவர்களுக்கு போதுமான அளவு பொம்மைகளை வாங்கிக் கொடுத்துவிடுங்கள்; இல்லையேல் உங்கள் வீட்டில் உள்ள பொருட்கள் உடைவதற்கு உங்கள் குழந்தை பொறுப்பல்ல..

8. சண்டித்தனம்..

குழந்தைகள் துறு துறுவென்று எதேனும் சேஷ்டைகள் செய்து கொண்டே இருப்பர். பயணங்கள் மேற்கொள்ளும் போதும், வீட்டில் இருக்கும் போதும் சரி அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதைத்தான், குழந்தைகள் செய்வார்கள். ஆகையால், மற்றவர்கள் குழந்தையை பற்றி என்ன நினைப்பரோ ஏது நினைப்பரோ என்று எண்ணி குழந்தையை அதட்டாதீர்கள்; குழந்தை பருவத்தில், குறும்பு செய்தால் தான், அது குழந்தை.

9. உடல் எடை…

பிரசவத்தால், உங்கள் உடல் எடை கூடியிருக்கலாம், அதனால், எடையை குறைக்க போகிறேன் என்று உங்கள் உடல் நலத்தை கெடுத்துவிடாதீர்கள். குழந்தை நல்ல முறையில் வளர நீங்கள் ஆரோக்கியாமாக இருக்க வேண்டியது அவசியம். குழந்தை வளர்ந்த பின் உங்கள் உடல் எடையை குறைத்துக் கொள்ளலாம்.

10. குழந்தையுடன்..

குழந்தை வளர்கையில் முடிந்த வரை அதனுடன் நேரத்தை செலவிடுங்கள்; ஏனெனில் குழந்தைகள் வளர்ந்துவிட்டால், பள்ளி, கல்லூரி என சென்றுவிடுவர். அவர்கள் உங்களோடு மட்டும் இருக்கும் காலம் இந்த குழந்தையின் வளர்ச்சிக்காலம் தான். ஆகையால் முடிந்தவரை குழந்தையோடு நேரத்தை செலவிடுங்கள்.

11. குழந்தையின் வளர்ச்சி…

குழந்தைகள் இப்பொழுது தான் பிறந்த மாதிரி இருப்பார்கள், ஆனால், வெகு விரைவில் வளர்ந்து உங்கள் முன் காட்சியளிப்பர். ஆகையால், குழந்தையை நல்ல முறையில் பேணிக் காப்பாற்றுங்கள். குழந்தைக்கு இதை செய்ய மறந்துவிட்டோமே என்ற எண்ணி, வருத்தம் கொள்ளாத வகையில் குழந்தையை நன்முறையில் வளர்த்து ஆளாக்குங்கள்..

குழந்தையின் வளர்ச்சியை பெரும்பாலான பெற்றோர்கள், காணொளியாக பதிவு செய்து வைத்துக்கொள்வார்கள். அதே போல், நீங்கள் பதிவு செய்யும் காணொளியைக் கண்டு, உங்கள் வளர்ப்பினைக் கண்டு உங்கள் குழந்தை பிற்காலத்தில், உள்ளம் பூரிப்படையுமாறு, உங்கள் குழந்தையை வளரச் செய்யுங்கள் பெற்றோர்களே!!

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon