Link copied!
Sign in / Sign up
9
Shares

பனிக்குடமும் குழந்தையின் நிலையும்..!!

கர்ப்பத்தின் போது கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தைக்கும் கர்ப்பப்பைக்கும் இடையே ஒரு நீர்ப்படலம் இருக்கும். குழந்தையைச் சுற்றியிருக்கும் இந்த நீரை Amnotic fluid என்கிறோம். இது குழந்தையின் இயல்பான சுவாசத்துக்கும் பாதுகாப்புக்கும் உதவும். ஊட்டச்சத்துகள் நிறைந்த அந்த நீரானது சிலருக்கு குறைவாகவும் சிலருக்கு அதிகமாகவும் இருக்கும். இதுவே பனிக்குட நீர் என அழைக்கப்படுகிறது. இதனைப் பற்றி இந்த பதிப்பில் படித்து அறியலாம்.. 

பனிக்குடத்தில், குழந்தையின் நிலை எவ்வாறு இருக்கிறது? இவற்றைப் பொறுத்தே அந்த கர்ப்பத்தைநீட்டிப்பதா வேண்டாமா என ஆலோசனை செய்யப்படும். குழந்தை மோசமான நிலையை தாண்டிவிடும் பட்சத்தில் ஆறாம் மாதத்தில் குழந்தையின் அனாடமியை பரிசோதித்துப் பார்க்க வேண்டும். தண்ணீரின் அளவு எவ்வளவு இருக்கிறது? நஞ்சுக்கொடியில் ரத்த ஓட்டம் சீராக இருக்கிறதா? குழந்தையின் மூளைக்குத் தேவையான அளவு ஆக்சிஜன் கிடைக்கிறதா? இவற்றையெல்லாம் கடைசி 3 மாதங்களில் பரிசோதிப்பார்கள் (Doppler study). தண்ணீர் குறைவாக இருக்குமானால் கர்ப்பிணி நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். நிறைய ஓய்வு எடுக்க வேண்டும்.

புரதச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். கால் வீங்கி இருந்தால், கீழே தொங்கப்போடாமல் நீட்டி வைத்துக்கொள்ளலாம். தாய்க்கு ரத்த அழுத்தம் இருந்தால் அதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தையின் நுரையீரல் முறையான வளர்ச்சி அடைந்து விட்டது என்றால் சுகப்பிரசவத்திற்கு ஏற்பாடு செய்யலாம். ஒருவேளை பிரசவத் தேதி தாண்டி போனாலோ, டாப்ளர் ஸ்டடியில் பிரச்சனை இருந்தாலோ, இவ்வளவு கவனிப்புக்குப் பின்னும் பனிக்குட நீர் குறைந்து கொண்டே போனாலோ குழந்தையின் இதயத் துடிப்பு சரியில்லை என்றாலோ உடனடியாக சிசேரியன் செய்ய வேண்டியிருக்கும்.

கர்ப்ப காலம் முழுவதும் எந்தப் பிரச்னையும் இல்லாமல் கடைசி நேரத்தில் பனிக்குட நீர் பாதி போன பின் மருத்துவமனைக்கு வந்தால் அதுவும் பிரச்னைதான். அப்போது முடிந்த வரை கர்ப்பப்பைக்கு செயற்கையாக நீரை ஏற்றி (Amnio infusion) சுகப்பிரசவம் செய்ய முயற்சிப்பார்கள். சில நேரங்களில் குழந்தை வயிற்றுக்குள்ளே மலம் கழித்துவிடும். அப்போதும் இந்த அம்னியா இன்ஃப்யூஷன் செய்யும் போது, குழந்தை அந்த மலத்தை முழுங்காமல் இருக்கும்.

அப்படியும் முடியாத போது சிசேரியன் தான் செய்ய வேண்டி வரும். இல்லையெனில் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுவிடும். சிலர் நீர் முழுவதும் வடிந்தபின் வருவார்கள். அது மிக ஆபத்து. உடனடி சிசேரியன் தேவைப்படும்.

இவ்வளவு பிரச்னைக்குப் பிறகு குழந்தை பிறந்த பின், ‘மலஜலம் ஒழுங்காகக் கழிக்கிறதா? மஞ்சள் காமாலை இருக்கிறதா? நுரையீரல் வளர்ச்சி சரியாக இருக்கிறதா? சர்க்கரையின் அளவு சரியா சரியா?’ என அனைத்தையும் பரிசோதிப்பார்கள்.

பனிக்குட நீர் பற்றாக்குறையால் ஏற்படும் பல பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே பார்த்தால் சரிசெய்து விட முடியும். ‘குழந்தைக்கு போகவேண்டிய ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் போவதால் குழந்தையின் மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காது. அதனால் குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படலாம். நுரையீரல் வளர்ச்சியிலும் குறை ஏற்படலாம்...’’ ஆண் குழந்தைகளுக்கு ஏற்படும் யூரினரி ட்ராக்ட் அடைப்பை வயிற்றுக்குள்ளேயே சர்ஜரி மூலமாக நீக்கி விட முடியும். தாய்க்கு ஏற்படும் கர்ப்பப்பை நோய்த்தொற்றுக்கு ஆன்டிபயாடிக் எடுத்துக்கொண்டால் சரியாகும். தாயினால் ஏற்படும் பிரச்சனையாக இருந்தால் அடுத்த குழந்தைக்கும் இந்தப் பிரச்சனை வர வாய்ப்புண்டு. முன்கூட்டியே இதற்கான கலந்தாய்வு பெற்று கவனமாக பார்த்துக்கொள்ளும் போது இந்தப் பிரச்னையை எளிதில் கடந்துவிடலாம். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon