Link copied!
Sign in / Sign up
4
Shares

பனிக்குடம் எப்படி உடைகிறது? கண்டறிவது எப்படி?

பனிக்குடம் உடைவதென்பது பிரசவத்திற்கான அறிகுறியாகும். அதாவது மூன்றாவது மூன்று மாதத்தில் இந்த பிரச்சனையானது கர்ப்பிணிகளுக்கு ஏற்படுகிறது. இந்த நாட்களில் திரவம் அதிகமாக வெளியேற, நீங்கள் பயமற்று இருக்க வேண்டியது மிகவும் அவசியம். இதைப்பற்றிய விரிவான தகவலை நாம் தெரிந்துக்கொள்வோமா?

பனிக்குடம் என்றால் என்ன?

கருவில் இருக்கும் குழந்தையை சுற்றி சவ்வு திரவம் நிறைந்த பை இருக்கும். இதனை பனிக்குடப்பை என்றும் அழைப்பர். இந்த பை தான் கருவில் இருக்கும் உங்கள் குழந்தையை பாதுகாக்கிறது. இந்த பனிக்குடப்பையில் இருக்கும் திரவமானது பெண்ணின் பிறப்புறுப்பின் மூலமாக வெளியாகும். கருவுற்ற 34ஆவது வாரம், இந்த பனிக்குடப்பை திரவத்தின் அளவாக 800 மில்லி இருக்கிறது. இது படிப்படியாக குறைந்து 600 மில்லியாக 40ஆவது வாரத்தில் இருக்கிறது. இந்த திரவம் ஒரே நிலையில் விழுங்கப்பட, குழந்தை வெளியேற்றத்துக்கும் உதவுகிறது.

1. பனிக்குடம் உடைய கருவில் இருக்கும் குழந்தை சுதந்திரமாக வெளிவருகிறது.

2. மாறாத வெப்பநிலையை கருவில் இருக்கும் குழந்தைக்கு தருகிறது.

3. நுரையீரல் செயல்பாடு என்பது சரியாக இருக்க உதவுகிறது.

மேலும் பனிக்குடம் உடைதல் என்பது சரியான பிரசவத்தை மட்டும் குறிப்பதில்லை. சிலசமயத்தில், உரிய நேரத்தில் குழந்தை பிறக்காத போது முன்பே பனிக்குடம் உடையவும் வாய்ப்பிருக்கிறது.

என்ன ஆகும்?

1. பிரசவ நிலையை எட்டும் பெண்களுக்கு பனிக்குடம் சிதைவடைகிறது. இதனால் பிறப்புறுப்பின் வழியாக துளித்துளி நீராய் வெளியேற, கொஞ்சமாக கசியவும் தொடங்குகிறது.

2. ஒருவேளை முழு பிரசவ நிலைக்கு முன்னர் அல்லது 37 வாரங்களுக்கு பிறகு பனிக்குடம் உடைந்தால் அது தான் குறைப்பிரசவம் எனப்படுகிறது. உங்கள் பிறப்புறுப்பு, கருப்பை அல்லது கருப்பை வாய் பாதிக்கப்பட்டால் இதற்கு வாய்ப்பிருக்கிறது.

3. அதேபோல் பனிக்குடப்பை விரிவடைந்து மெல்லியதாக இருக்குமெனில் பனிக்குடம் சீக்கிரம் உடைய வாய்ப்பிருக்கிறது. இதற்கு காரணம் அளவுக்கதிகமான திரவம் சேர்தல் அல்லது கருப்பையில் ஒன்றுக்கு மேல் குழந்தைகள் இருந்தால் பனிக்குடம் சீக்கிரம் உடைய வாய்ப்பிருக்கிறது.

எப்படி தெரிந்துக்கொள்வது?

உங்கள் ஆடை நனைந்து பனிக்குடப்பை உடைந்திருக்குமென உங்கள் மனதில் சந்தேகம் எழுந்தால் எப்படி தெரிந்துக்கொள்வது என பார்க்கலாம்.

1. சிறுநீர்ப்பையில் எதுவும் இல்லாதது போல் ஒரு உணர்வு தோன்றும்.

2. உங்கள் பிறப்புறுப்பில் வழிந்த நீரின் நிறம் மஞ்சள் நிறத்தில் துர்நாற்றம் வீசினால் அது சிறுநீர். ஒருவேளை நிறமற்று, துர்நாற்றம் அற்று இருந்தால் பனிக்குடப்பை நீர் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.

3. உங்கள் இடுப்பு தசையை இறுக்கி பாருங்கள். அந்த திரவம் நின்றுவிட்டால் சிறுநீர் தான். ஒருவேளை நிற்காமல் வெளியானால் பனிக்குடம் உடைந்திருக்கிறது என அர்த்தம்.

4. அதேபோல் பனிக்குடம் உடையும்போது நீருடன் சேர்த்து இரத்தமும் வெளியாகும்.

4. பனிக்குடம் உடைந்தால் காய்ச்சல் அல்லது உங்கள் உடலின் வெப்ப நிலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon