Link copied!
Sign in / Sign up
24
Shares

பன்னீர் பட்டர் மசாலா செய்வது எப்படி?

அசைவம் விரும்பாத பலரும் ஹோட்டலுக்கு சென்றதும் ஆர்டர் செய்யும் ஒரு உணவு தான் இந்த பன்னீர் பட்டர் மசாலா. அப்படி என்ன இருக்கிறது இந்த பன்னீர் பட்டர் மசாலாவில்? இதை நாம் எதற்கு வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிடலாம். ரொட்டி வகைகளுக்கு இதை செய்து சாப்பிட, இதன் சுவையால் மயங்கும் நம் மனம் மற்ற உணவுகளுக்கும் சேர்த்து சாப்பிட ஆசைப்படும் என்பதே உண்மையாகும். 

எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்:

பன்னீர் - 250 கிராம் (1 இன்ச் அளவுக்கு நறுக்கி கொள்ளுங்கள்)

வெங்காயம் (நடுத்தர அளவு கொண்டது) - 2 (நன்றாக நறுக்கி கொள்ளுங்கள்)

இஞ்சி - ஒன்றரை டீஸ்பூன் (நறுக்கியது)

பூண்டு - 3 அல்லது 4 கிராம்பு அளவு

தக்காளி (நடுத்தர அளவு கொண்டது) - 3

முந்திரி பருப்பு - 6 அல்லது 8 (15 நிமிடங்களுக்கு நீரில் ஊற வைத்தது)

கறி இலைகள் - 1 சிறிய துண்டு

பச்சை மிளகாய் - 2 (செங்குத்தாக நறுக்கியது)

கொழுப்பு கொண்ட பால் - அரை கப்

உலர்ந்த வெந்தய இலைகள் - 2 டீஸ்பூன்

கரம் மசாலா பவுடர் - அரை டீஸ்பூன் 

கொத்துமல்லி பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்

சிவப்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

பிரெஷ் க்ரீம் - 2 டேபிள் ஸ்பூன்

வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - சுவைக்கேற்ப

தேவையான நேரம்:

தயாரிக்க தேவையான நேரம்: 10 நிமிடம்

சமைக்க தேவையான நேரம்: 30 நிமிடங்கள்

எத்தனை பேர் உண்ணலாம்: 3

செய்முறை:

1. முதலில் உறையாத பன்னீர் துண்டை எடுத்துக்கொள்ளுங்கள்.

2. வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டை அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். அதேபோல் முந்திரி பருப்பை 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் கொண்டு பிசைந்து பேஸ்டை போல் ஆக்கிக்கொள்ள வேண்டும்.தக்காளியை உரித்து அதையும் மசித்து கூழாக்கி கொள்ளுங்கள்.

3. ஒரு நான் ஸ்டிக் கடாயில் எண்ணெய் மற்றும் வெண்ணெய்யை ஊற்றி மிதமான சூட்டில் கொதிக்க விடுங்கள். அத்துடன் சேர்த்து அரைத்த வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்து கறி இலையையும் போட்டு கிண்டி கொள்ளுங்கள். 4 முதல் 5 நிமிடங்களுக்கு கிண்டினால் இளம் பழுப்பு நிறத்தில் அதன் நிறம் மாறும்.

4. அதன்பிறகு, பச்சை மிளகாய் மற்றும் சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து மீண்டும் ஒரு 30 முதல் 40 நொடிக்கு கிண்ட வேண்டும். அத்துடன் அரைத்த முந்திரி பேஸ்டையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

5. இரண்டு நிமிடங்களுக்கு நன்றாக கிளறி விடுங்கள்.

6. மசித்த தக்காளி கூழை கொட்டி அந்த கூழிலிருந்து எண்ணெய் நீங்கும் வரை வைத்திருங்கள். அதாவது 3 முதல் 4 நிமிடங்களுக்கு வைத்திருங்கள்.

7. அத்துடன் கொத்துமல்லி பவுடர் மற்றும் கரம் மசாலா பவுடர் சேர்த்து மீண்டும் நன்றாக கிண்டி விடுங்கள்.

8. பின்னர் அரை கப் பால், அரை கப் தண்ணீர், மற்றும் உப்பை அத்துடன் சேர்த்து 4 முதல் 5 நிமிடத்திற்கு வைத்திருக்க எண்ணெய் பரப்பில் சூழ்ந்து காணப்படும்.

9. அதன்பிறகு பன்னீர் துண்டு மற்றும் உலர்ந்த வெந்தய பவுடரை கொட்டி 2 நிமிடத்திற்கு வைத்திருக்க வேண்டும். இப்போது பார்ப்பதற்கு அது கிராவி போல் காணப்படும்.

10. அத்துடன் ப்ரெஷ் கிரீம் சேர்த்துக்கொள்ளலாம்.

11. அதை நன்றாக கிண்டிவிட்டு சரியான நிலைக்கு வந்தவுடன் அடுப்பை அணைத்திடுங்கள்.

12. அவ்வளவு தான் சூடான பஞ்சாபி பன்னீர் பட்டர் மசாலா இதோ ரெடி.

13. இதை சப்பாத்தி, பரோட்டா, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவை அப்படி இருக்கும் என்பதை நான் மட்டும் சொன்னால் எப்படி.

14. நீங்களும் செய்துப்பார்த்து சொல்லலாமே!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon