Link copied!
Sign in / Sign up
43
Shares

குழந்தைகளுக்கு வேடிக்கைக்காட்டி கற்றுக்கொடுக்க வேண்டிய முக்கியமான பழக்கங்கள்...

ஆரம்பகால வாழ்க்கையில், பணம் எவ்வாறு பயன்படுகிறது என்ற யோசனையை குழந்தைகள் பெற வேண்டும். அது உண்மையில் மரங்களில் வளரவில்லை அல்லது ஏடிஎம் இருந்து மாயமாக தோன்றவில்லை, பணம் சம்பாதிக்கபடுகிறது. அதை பொறுப்புடன் கையாளப்பட வேண்டும் என்பதை உங்கள் குழந்தைகளும் தெரிந்து கொள்ள வேண்டும். பணம் என்பது ஒரு நீண்ட மற்றும் கடினமான செயல்முறையின் மூலம் கிடைப்பது என்பதை உங்கள் குழந்தைக்கு உணர்த்துங்கள். பணம் பற்றிய அவர்களது கேள்விகளுக்கு பொறுமையுடன் பதிலளிக்க தயாராகுங்கள். உங்கள் குழந்தைகள் பணம் பற்றி அறிய உதவும் 3 நடவடிக்கைகளை பார்ப்போம். 

1 உருவம் கொண்ட உண்டியல்கள்

பணம் பற்றி உங்கள் குழந்தை அறிய வேண்டிய முதல் மற்றும் மிக முக்கியமான படிநிலை இதுதான். சிறுதுளி பெரு வெள்ளம் என்பதை போல், உங்கள் குழந்தையின் சிறு சேமிப்பும், பெரிதாக வளரும் என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள். அவற்றின் சேமிப்புகளை பன்றி, குபேரர் போன்ற உருவம் கொண்ட உண்டியல்களில் வைப்பதற்கு உதவுங்கள். கணிசமான தொகை சேரும் போது, அவர்களது விருப்படி ஒரு பொருளை வாங்கலாம். இந்த நடவடிக்கை குழந்தைகள் தங்கள் பணத்தை பாதுகாப்பாக வைக்க கற்றுக்கொடுக்கிறது.

2 வரவு செலவு திட்டம்

உங்கள் பள்ளி செல்லும் குழந்தைக்கு மாதாந்திர கொடுப்பனவுகளை கொடுத்து, அவர்கள் அவற்றை மாதம் முழுவதும் தின செலவிற்கு செலவழிக்க வேண்டும் என்று அவரிடம் சொல்லுங்கள். இது தேவையில்லாமல் பணத்தை வீணாக்காதே என்று குழந்தைக்கு போதிக்கிறது. அவர்கள் செய்யும் செலவுக்கான கணக்குகளை ஒரு பேப்பேரிலோ அல்லது பயன்பாட்டு அட்டைகளாலோ பதிவிட செய்யுங்கள். இதன் மூலம் அவர்கள் செய்யும் செலவுக்கான கணக்குகளை பதிவிட கற்றுக்கொள்வார்கள். அப்படி செய்கையில் உங்கள் குழந்தைகள் பணத்தை எங்கு எப்படி செலவழித்து என்று, அங்கு கண்காணிக்க முடியும் மற்றும் எப்படி தங்கள் செலவுகளை குறைப்பது மற்றும் பணத்தை சேமிப்பது என்று கற்று கொள்ளுவார்கள். இது குழந்தைகளுக்கு பணத்தை எப்படி கையாள்வது என்பதை வருங்காலத்தில் எளிமையாக்கும்.

3 அவர்களை பணம் சம்பாதிக்க செய்யுங்கள்

உங்கள் குழந்தைகள் கூடுதல் பணம் கேட்டால், அவர்களுக்கு சம்பாதிக்க கற்று கொடுங்கள். அவர்களின் தின வேலைகளில் குறுக்கிடாத படி சில வேலைகள் கொடுக்கலாம். கடைகளுக்கு சென்று வருவது, வீட்டை சுத்தம் செய்ய உதவி செய்வது மற்றும் சமையலில் உதவி செய்வது போன்றவற்றை செய்ய சொல்லி, கொஞ்சம் பணம் கொடுக்கலாம். இது அவர்கள் பணம் எளிதில் இலவசமாக கிடைப்பதில்லை, அதற்காக நாம் உழைக்க வேண்டும் என்பதை உணர்வதற்காக. இதன் மூலம் அவர்கள் பணம் சம்பாதிப்பது மற்றும் அதை மதிக்கும் பொதுக் கோட்பாடு பற்றி அறிந்து கொள்வார்கள்.

குழந்தைகளை செல்லமாக வளர்க்கிறோம் என்று, ஒன்றும் தெரியாமல் ஊதாரியாக வளர்ப்பதை விட அனைத்தையும் கற்று கொடுத்து வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய செய்வோமாக!

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
100%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon