Link copied!
Sign in / Sign up
2
Shares

பல்லி என்னும் உணவு காதலி

காலம் கடந்து நாம் நவீன உலகில் வாழ்ந்தாலும், கரப்பான் மற்றும் பல்லியை கண்டால் பயப்படும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். கீழ் அமர்ந்து நாம் பேப்பர் படிக்க, மேலிருந்து பார்க்கும் பல்லி பொத்தென உங்கள் மேல் விழும். உடனே, நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் காலண்டரை எடுத்துக்கொண்டு வருவதை பார்த்து இருப்பீர்கள். ஏனெனில், காலண்டரில் உடலின் ஒவ்வொரு பாகத்தில் பல்லி விழுந்தால் அதற்கு இத்தகைய நன்மை/ தீமை என போட்டிருக்கும். இது உண்மை தானா? உயரத்தில் அமர்ந்திருக்கும் பல்லி, உங்கள் கையில் இருக்கும் பேப்பரை படிக்க திணறி கூட விழுந்து இருக்கலாம் அல்லவா? எது எப்படியோ! பல்லியை கண்டால் பல்லியாக மாறி சுவற்றில் ஒட்டிக்கொள்கிறோம் நாம். 

இந்த பல்லியை எப்படி வீட்டை விட்டு விரட்டுவது என்பதை பற்றி நாம் இப்போது பார்க்கலாமே.

முட்டை ஓடுகள்:

முட்டையின் ஓட்டின் மணம் பல்லியை ஓடவைக்கும். உங்கள் வீட்டில் பல்லி தொந்தரவு அதிகமாக இருந்தால், இந்த முட்டை ஓட்டினை வீட்டின் கதவு ஜன்னல்களில் வைப்பதால் விரட்டி அடிக்க முடியும்.

பூண்டு மணம்:

இந்த பூண்டின் வாசனை பல்லிக்கு எரிச்சலை ஏற்படுத்தக்கூடியது. இதனால், இத்தனை நாட்கள் எச்சமிட்ட பல்லி, உச்சிலிருந்து துள்ளி குதித்து வீட்டை விட்டு வெளியேறுகிறது.

மிளகு தெளித்தல்:

மிளகின் வாசனை பல்லிக்கு அலர்ஜியை உண்டாக்க, இதனால் வீட்டை விட்டு தூர ஓடுகிறது. அதாவது, நொறுக்கிய மிளகை தண்ணீருடன் சேர்த்து தெளிப்பதனால்... பல்லி, அந்த வாசனை தாங்காமல் வீட்டை விட்டு வெளியேறக்கூடும்.

வெங்காயம்:

இந்த வெங்காயத்தில் இருக்கும் சல்பரானது மோசமான வாசனை கொண்டது. இந்த வாசனையை பல்லி நுகர்ந்தால் வாந்தி கூட எடுத்திடக்கூடும். அதனால், இந்த வெங்காயத்தை வீட்டின் கதவு, ஜன்னல் போன்ற இடங்களில் வைப்பதால் பல்லி தொந்தரவு என்பது இருப்பதில்லை. 

அந்துருண்டை (அ) ரசகற்பூரம்:

பொந்தில் ஒளிந்திருக்கும் பல்லியும் அந்துருண்டை வாசம் கண்டு வெளியேறும். அதனால் தான் இந்த அந்துருண்டையை வீட்டின் பீரோல் போன்ற இடங்களில் வைப்பதுண்டு.

குளிர்ந்த நீர்:

குளிர்ந்த நீரை பல்லியின் மேல் நாம் தெளித்தால், பல்லி நகர முடியாமல் சிரமம் கொள்ளுமாம். அந்த நேரத்தில் பல்லியை நாம் பிடித்து வெளியில் விட்டுவிடலாம்.

மயிலிறகு:

மயில் என்றால் பல்லியும் பயந்து ஓடுமாம். அதனால், மயில் இறகை பல்லி இருக்கும் இடத்தில் வைப்பதனால், மயில் பல்லியை துரத்தும் பிளாஷ்பேக் நினைவுக்கு வர,அது வீட்டை காலி செய்துவிட்டு அட்வான்ஸை கூட வாங்காமல் செல்வது உறுதி.

பீனைல் மாத்திரை:

இந்த மாத்திரையை வீட்டின் வாசலில் வைப்பதால், பல்லிக்கு உள்ளே அனுமதி இல்லை என்பது புரிந்து அதுவும் அடுத்த  வீட்டிற்கு செல்கிறது.

அட்டை கொண்டு அகற்றுங்கள்:

பல்லியை துன்புறுத்துவதை தாங்கள் விரும்பாவிட்டால், அட்டையால் பல்லியை பிடித்து வெட்ட வெளியில் விட்டு வீட்டுக்கு வாருங்கள்.

பல்லிக்கு மேலே இருக்க சொல்லி தருவது எப்படி?

1. உங்கள் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். அத்துடன் தரையில் உணவை வைத்து சாப்பிட்டு முடிக்கும் ஒவ்வொரு முறையும் மறக்காமல் சுத்தம் செய்யுங்கள்.

2. உங்கள் வீட்டு ஜன்னலை திறந்து வைக்காமல், மூடி வைத்திடுங்கள்.

3. பல்லிக்கு உங்கள் வீட்டு பல்பின் மீது காதல், எனவே, பல்லியை பார்த்தால் பல்பை அணைத்து வைப்பது நலம்.

4. உங்கள் வீட்டு நாற்காலி, டேபிளை உயரத்திலிருந்து ஆறு இன்ஞ் தள்ளிவைப்பது நல்லது.

5. ஒழுங்கான பராமரிப்பு, பல்லியை வீட்டில் வரவிடாமல் தடுக்கும்.

பல்லி என்பது சாஸ்திர அடிப்படையில் ஒரு சிலர் வீட்டில் வாழ்வதும் கூட. பல்லி சத்தம் போட்டால் நல்லது எனவும் ஒரு சிலர் சொல்வதுண்டு. அத்துடன் இந்த பல்லிக்கு உணவே, உங்கள் வீட்டில் நச்சரிப்பு தரும் பூச்சிகளை தின்பது தான். பல்லியால் நமக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை. சாப்பாட்டை திறந்துப்போட்டு விட்டு பல்லி விழுந்துவிட்டது என சொன்னால் அதற்கு பல்லியா பொறுப்பாகும். இன்னும் சொல்லப்போனால், சாம்பாரில் விழுந்த பல்லியின் மனம் என்ன யோசிக்கும் என்பதை யார் அறிவார்? தெரிந்தே பாலம் கிணற்றுக்குள் விழ அது என்ன உங்கள் சாம்பாரின் ஒருதலை காதலனா? கண்டிப்பாக இல்லை.

பல்லியை கண்டால் உங்களுக்கு அலர்ஜி என்றால், ஒரு சில எளிய வழிமுறை கொண்டு வீட்டை விட்டு வெளியேற அதற்கு உத்தரவிடுங்கள். ஒருசிலர் பல்லியை வளர்ப்பதும் உண்டு. அப்படி இருக்க, நமக்கு தொந்தரவு தராத எந்த வித வீட்டு வாழ் உயிரினுமும் வன்மத்தால் மட்டுமே கையாளக்கூடாத ஒன்று என்பதை புரிந்து செயல்படுவது நல்லது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon