Link copied!
Sign in / Sign up
10
Shares

பாத வெடிப்பை போக்க உதவும் 5 இயற்கை மருத்துவம்..!

வீடுகளில் தண்ணீரை, ஆண்களைவிட பெண்கள் தான் அதிகளவில் பயன்படுத்துவார்கள். வீட்டை கழுவி சுத்தம் செய்வது, வீட்டில் பாத்திரம் கழுவுவது, தண்ணீர் எடுப்பது போன்ற வேலைகளில் பெண்கள் ஈடுபடுவதால், அவர்களின் கால்கள் அதிகளவு ஈரமாக இருக்கும். உப்புத்தண்ணீர் அதிகம் கால்களில் படுவதால் பாதத்தில் வெடிப்பு ஏற்படலாம்; அவ்வாறு உண்டாகும் வெடிப்புப் புண்ணாக மாறி வலியை ஏற்படுத்தும்.

இதனால் பெண்கள் அதிக துன்பத்திற்கு ஆளாகின்றனர்; இதுபோல், பாத வெடிப்புகளால் அவதியுறும் பெண்கள் அதற்கான பிரத்யேக சிகிச்சை பெற்றாலும் முழுவதுமாக குணமாகாது. இதற்கான நிரந்தர தீர்வு எவ்வாறு கிடைக்கும்? என்பது பற்றி பதிப்பில் படித்தறியலாம்..!

நிரந்தர தீர்வு தரும் குறிப்புகள்..!

பப்பாளி பழம்..!

பப்பாளிப்பழத்தை நன்கு அரைத்து, அதனை பாதங்களில் வெடிப்புள்ள பகுதியில் தடவ வேண்டும்; அது உலர்ந்ததும் பாதத்தை தண்ணீரால் கழுவி, மறுபடியும் தடவ வேண்டும்; தொடர்ந்து இவ்வாறு செய்தால், பித்தவெடிப்பு குணமாகும். 

மருதாணி இலைகள்..!

இந்த இலைகளை நன்கு அரைத்து பித்தவெடிப்பு இருக்கும் இடங்களில் தடவி காயவிட வேண்டும்; பின், பாதத்தை தண்ணீரால் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகிவிடும்.

சுடுநீர் வைத்தியம்..!

காலினால் தாங்கக் கூடிய அளவுக்கு தண்ணீரை சூடாக்கி, அதில் சிறிதளவு உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்க்க வேண்டும்; அத்தண்ணீரில் பாதத்தை சிறிதுநேரம் வைத்திருந்த பின், பாதத்தை சொரசொரப்பான பஞ்சைக்/பிரஸ்ஸைக் கொண்டு தேய்த்து கழுவ வேண்டும். இதனால் பாதத்திலுள்ள கெட்ட செல்கள் உதிர்ந்துவிடும்; மேலும் இது வெடிப்பு ஏற்படுவதை தடுத்து, பாதம் மென்மையாக இருக்கவும் உதவும்.

எண்ணெய் வைத்தியம்..!

விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் இவற்றை சம அளவில் எடுத்துக்கொண்டு, அதில் சிறிதளவு மஞ்சள் தூளை கலந்து பசை போல குழைத்து, பாதத்தில் வெடிப்புள்ள இடத்தில் தேய்த்து, சிறிதுநேரம் கழித்து கழுவினால் வெடிப்பு குணமாகிவிடும். இல்லையேல், வேப்பெண்ணெயில் சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பசைபோல குழைத்து வெடிப்புள்ள இடத்தில் தடவலாம்.

இரவில் தூங்கச் செல்லுமுன் கால்களை நன்றாகக் கழுவி, சிறிது தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் நல்லது; தினமும் குளித்து முடித்ததும் பாதங்களை ஈரம்  இல்லாதவாறு துணியால் துடைக்கவும், பின்பு பாதத்தில் சிறிதளவு விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால், வெடிப்பு வராமல் தடுக்கலாம்..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
100%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon