Link copied!
Sign in / Sign up
26
Shares

ஒரு வயது குழந்தைக்கான 7 சுவையான உணவுகள்

12 மாதங்கள் ஆன பின்னர் உங்கள் குழந்தையால் நன்றாக சமைக்கப்பட்ட, பல வகையான திட உணவுகளை சாப்பிட முடியும். அதற்காக பெரிய பெரிய துண்டுகளாக தர கூடாது. நன்கு மசித்து அல்லது குழைத்து கொடுக்கலாம். உங்கள் குழந்தைக்கு விருப்பமான உணவுகளை செய்து கொடுக்கலாம். கீழே உங்கள் குழந்தைக்கான சில சுவையான ரெசிபிகள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் குழந்தைக்கு இந்த உணவுகளால் அலர்ஜி உண்டாகும் எனில் அவற்றை தவிர்க்கவும்.

காலை உணவுக்கு
1 ரவா உப்புமா

தேவையான பொருட்கள்

1. ரவை - 1 1/2 கப்

2. கேரட் - 1 (சிறிய துண்டுகளாக நறுக்கியது)

3. பீன்ஸ் - 6-8 (சிறிய துண்டுகளாக  நறுக்கியது)

4. பச்சை பட்டாணி - 1/4 கப்

5. பச்சை குடைமிளகாய் - 1

6. வெங்காயம் - 1

7. பச்சை மிளகாய் - 3

8. இஞ்சி - சிறிய துண்டு

9. ஆலிவ் எண்ணெய் - 2 தேக்கரண்டி

10. கடுகு - ¼ தேக்கரண்டி

11. கறிவேப்பிலை - 15-20 இலைகள்

12. உளுந்து - ½ தேக்கரண்டி

13. உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி ஆகியவற்றை நறுக்கிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அது சூடானதும் சிறிது ஆலிவ் எண்ணெய் சேர்க்கவும். பின்பு அதில் கடுகு, இஞ்சி, கறிவேப்பில்லை, உளுந்து சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.

2. அதில் வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். மற்றொரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். வெங்காயம் பொன்னிறமாக ஆனதும், அதில் ரவை சேர்த்து 2-3நிமிடங்கள் வதக்கவும்.

3. பச்சை மிளகாய், உப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். குடை மிளகாயை நன்றாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.

4. கொதிக்க வைத்த தண்ணீரை இவற்றுடன் சேர்த்து, தண்ணீர் சுண்டும் வரை சமைக்கவும். பின்பு இதில் கேரட், பட்டாணி, பீன்ஸ் ஆகியவை சேர்த்து மூடி 1-2 நிமிடம் சமைக்கவும்.

5. இப்போது குடைமிளகாய் சேர்த்து கிளறி, மீண்டும் பாத்திரத்தை மூடி, ரவை நன்றாக வேகும் வரை சமைக்கவும். சூடாக பரிமாறவும்.

6. கொத்தமல்லி தழைகள் அல்லது தேங்காய் துருவல் சேர்த்தும் பரிமாறலாம்.

2 ஆலு பரோட்டா

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு பூரணம் செய்வதற்கு

1. பெரிய வேகவைத்த உருளைக்கிழங்கு - 2

2. துருவிய இஞ்சி - ¼ தேக்கரண்டி

3. மிளகாய்த்தூள் - ½ தேக்கரண்டி

4. கொத்தமல்லி தூள் - ½ தேக்கரண்டி

5. உப்பு - தேவையான அளவு

6. கரம் மசாலா - சிறிதளவு

7. நறுக்கிய கொத்தமல்லி - ½ தேக்கரண்டி

8. உலர்ந்த மாங்காய் தூள் - சிறிதளவு

9. சீரகம் - சிறிதளவு

சப்பாத்தி மாவு செய்ய

1. கோதுமை - 1 கப்

2. உப்பு - தேவையான அளவு

3. எண்ணெய் அல்லது நெய் - 1 தேக்கரண்டி

4. தண்ணீர் - தேவையான அளவு

5. 1/4 கப் கோதுமை மாவு ( சப்பாத்தி தேய்ப்பதற்கு)

சப்பாத்தி செய்ய

எண்ணெய் அல்லது நெய் தேவையினை அளவு

செய்முறை

குறிப்பு: 1 கப் = ~ 255 கிகி

உருளைக்கிழங்கு பூரணத்திற்கு

1. ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளைக்கிழங்குகளை நன்கு மசித்துக்கொள்ளவும்.

2. மேற்சொன்ன பொருட்களை சேர்த்து கலந்து கொள்ளவும்.

கோதுமை மாவிற்கு

1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு மற்றும் உப்பு எடுத்துக்கொள்ளவும்.

2. தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்களுக்கு பிசையவும்.

3. சிறிது எண்ணெய் சேர்த்து பிசைந்து, 20 நிமிடங்களுக்கு ஊற விடவும்.

ஆலு பரோட்டா

1. முதலில் பிசைந்த வைத்த மாவில் சிறிதளவு எடுத்து உருண்டை செய்யவும். அதை 5 அங்குல அளவு தட்டையாக்கவும்.

2. அதில் செய்து வைத்திருக்கும் சிறிது பூரணத்தை வைக்கவும்.

3. பிறகு அதை முன்பு போல் உருண்டையாக மடக்கவும்.

4. சேர்த்த மடிப்பை மீண்டும் தட்டையாக்கவும்.

5. சிறிது கோதுமை மாவை தூவி அதை சப்பாத்தி போல் தேய்க்கவும்.

6. ஒரு தவாவில் இந்த பரோட்டாவை போட்டு இரண்டு பக்கமும் திருப்பிவிட்டு சமைக்கவும்.

7. சிறிது எண்ணெய் அல்லது நெய் சேர்த்து கொள்ளலாம்.

8. சூடான இந்த பரோட்டாவை ஊறுகாய், தயிர் அல்லது சாஸுடன் சாப்பிடலாம்.

மதிய உணவிற்கு
1 சாதம் மற்றும் மீன்குழம்பு

தேவையான பொருட்கள்

குறிப்பு: 1 கப் = ~ 250 கிகி

1. மீன் துண்டுகள் - 5

2. துருவிய தேங்காய் - 1/2 மூடி

3. நறுக்கிய வெங்காயம் - 2 ( 1 அரைக்க, 1 குழம்பிற்கு )

4. பச்சை மிளகாய் - 7 ( 5 அரைக்க, 2 குழம்பிற்கு )

5. கொத்தமல்லி - ¾ தேக்கரண்டி

6. மஞ்சள் - ¼ தேக்கரண்டி

7. நறுக்கிய இஞ்சி - சிறிதளவு

8. பூண்டு பற்கள் - 12

9. கொத்தமல்லி தழைகள் - 1 1/2 கப்

10. சீரகம் - 1/4 தேக்கரண்டி

11. கறிவேப்பிலை - 14 இலைகள்

12. புளி அல்லது மாங்காய் - 1(நறுக்கியது)

13. தக்காளி - 1

14. எண்ணெய் - தேவையான அளவு

15. உப்பு - தேவையான அளவு

16. தண்ணீர் - 2 கப்

செய்முறை

1. மீன்களை நன்றாக கழுவி, உப்பு தடவி வைத்துக்கொள்ளுங்கள். மீண்டும் மீனை உபயோகப்படுத்தும் முன் கழுவ வேண்டும்.

2. 1 வெங்காயம், துருவிய தேங்காய், 5 பச்சை மிளகாய், 1 கப் கொத்தமல்லி இலை, கொத்தமல்லி விதை, மஞ்சள், பூண்டு, சீரகம், இஞ்சி ஆகியவற்றை சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.

3. ஒரு பெரிய பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் சேர்த்துக்கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் மீதமுள்ள வெங்காயம் மற்றும் 7 கறிவேப்பில்லை சேர்த்து 2 நிமிடங்களுக்கு குறைந்த தணலில் வதக்கவும்.

4. இப்போது நறுக்கிய மாங்காய், பச்சை மிளகாய், தக்காளி, சில கொத்தமல்லி இலைகள் போட்டு வதக்கவும்.

5. அரைத்து வைத்திருக்கும் விழுதை சேர்த்து கிளறவும். தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

6. சிறிது நேரங்களில் கொதி வந்த உடன் மீன் மற்றும் உப்பு சேர்த்து மெதுவாக கிளரவும். மீதமுள்ள கறிவேப்பிலையை சேர்க்கவும்.

7. பாத்திரத்தை மூடி குறைந்த தணலில் 10 நிமிடங்களுக்கு சமைக்கவும்.

8. அடுப்பை அனைத்து விட்டு சுவை பார்க்கவும். கூடுதலாக உப்பு காரம் தேவையா என்று பாருங்கள்.

9. கொத்தமல்லி தழையை மேலே தூவி, சாதம் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறுங்கள்.

2 மைசூர் மசாலா தோசை

தேவையான பொருட்கள்

1. இட்லி அரிசி - 3 கப்

2. உளுந்து - 1 கப்

3. கடலைப்பருப்பு - கைப்பிடியளவு

4. துவரம் பருப்பு - கைப்பிடியளவு

5. வெந்தயம் - சிறிதளவு

6. அவுல் - 1 கப்

7. ரவை - ¼ தேக்கரண்டி

8. சர்க்கரை - ¼ தேக்கரண்டி

9. உப்பு - தேவையான அளவு

செய்முறை

குறிப்பு: 1 கப் = ~ 255 கிகி

தோசை மாவு செய்ய

1. முதலில், 4-6 மணி நேரம் ஒரு கிண்ணத்தில் அரிசி, வெந்தயம், துவரம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பு ஆகியவற்றை ஊறவைக்கவும்.

2. மற்றொரு கிண்ணத்தில் 3-4 மணி நேரம் உளுந்தை ஊறவிடவும்.

3. மேலும், ¼ கப் தண்ணீரில் அவுலை ஊறவிடவும்.

4. முதலில் ஊறவைத்த உளுந்தை பஞ்சு போன்று அரைத்துக்கொள்ளவும்.

5. அடுத்து அரிசி, வெந்தயம், துவரம் பருப்பு, அவுல் மற்றும் கடலைப்பருப்பை அரைத்துக்கொள்ளவும்.

6. அரிசி மற்றும் உளுத்தம் மாவை கலந்து கொள்ளவும்.

7. 8-9 மணிநேரத்திற்கு இந்த மாவை புளிக்க விடுங்கள்.

உருளைக்கிழங்கு மசாலா

தேவையான பொருட்கள்

1. வேகவைத்த உருளைக்கிழங்கு - 4

2. வெங்காயம் - 1 (மெல்லியதாக நறுக்கியது)

3. பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)

4. இஞ்சி சிறிதளவு - (பொடியாக நறுக்கியது)

5. காய்ந்த சிவப்பு மிளகாய் - 1

6. சீரகம் - ¼ தேக்கரண்டி

7. கடுகு - ¼ தேக்கரண்டி

8. உளுத்தம் பருப்பு - ¼ தேக்கரண்டி

9. கடலை பருப்பு - ¼ தேக்கரண்டி

10. மஞ்சள் - சிறிதளவு

11. பெருங்காயம் - சிறிதளவு

12. கறிவேப்பிலை - சிறிதளவு

13. எலுமிச்சை சாறு - ½ தேக்கரண்டி

14. கொத்தமல்லி தழைகள் - சிறிதளவு

15. எண்ணெய் - ½ தேக்கரண்டி

16. உப்பு - தேவையான அளவு

செய்முறை

குறிப்பு: 1 கப் = ~ 255 கிகி

1. பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி இலைகளை பொடியாக வெட்டவும். மேலும், வெங்காயத்தை மெலிதாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.

2. ஒரு பாத்திரத்தில், ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, சீரகம், கடுகு, உளுத்தம்பருப்பு, சிவப்பு மிளகாய் மற்றும் கடலை பருப்பு ஆகியவற்றை சேர்க்கவும். கடுகு வெடிக்கும் வரை காத்திருக்கவும்.

3. பின் பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் வறுக்கவும்.

4. இப்போது நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து அவை நிறம் மாறும் வரை வதக்கவும்.

5. நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை சேர்க்கவும். இஞ்சியின் பச்சை வாசனை போகும் வரை வறுக்கவும்.

6. இப்போது வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.

7. உருளைக்கிழங்கை நன்றாக மசித்து, 1 தேக்கரண்டி நீரை சேர்த்து, 3 நிமிடங்கள் இதை சமைக்கவும்.

8. சிறிது எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து கிளறி விடவும்.

மசால் தோசை செய்முறை

1. முதலில், ஒரு சிறிய கிண்ணத்தில் தேவையான மாவை எடுத்துக்கொள்ளுங்கள்.

2. இப்போது உப்பு, சர்க்கரை மற்றும் ரவாவை சேர்த்து நன்கு கலந்து வையுங்கள்.

3. தவா சூடானதும் ஒரு கரண்டி மாவை அதில் ஊற்றி அதை வட்ட வடிவில் பரப்பவும். சிறிது எண்ணெய் சேர்த்து கொள்ளவும்.

4. தோசை பாதி வெந்தவுடன் உருளைக்கிழங்கு மசாலாவை தோசையின் நடுவே சேர்க்கவும்.

5. இறுதியாக இந்த தோசையை சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறலாம்.

இரவு உணவிற்கு
1 பன்னீர் பரோட்டா

தேவையான பொருட்கள்

பன்னீர் பூரணம் செய்வதற்கு

1. பன்னீர் - 2 கப்

2. மிளகாய் தூள் - ½ தேக்கரண்டி

3. கரம் மசாலா - ¼ தேக்கரண்டி

4. உப்பு - தேவையான அளவு

5. இஞ்சி - சிறிதளவு (துருவியது)

6. கொத்தமல்லி இலைகள் - கைப்பிடி அளவு (நறுக்கியது)

7. உலர்ந்த மாங்காய் தூள் - ½ தேக்கரண்டி

சப்பாத்தி / பரோட்டா மாவு பிசைய

1. முழு கோதுமை மாவு - 1 கப்

2. உப்பு - தேவையான அளவு

3. எண்ணெய் அல்லது நெய் - 1 தேக்கரண்டி

4. தண்ணீர் - தேவையான அளவு

5. கோதுமை மாவு - ¼ கப் ( பரோட்டா தேய்க்க )

செய்முறை

குறிப்பு: 1 கப் = ~ 255 கிகி

பன்னீர் பூரணம் செய்ய

1. முதலில், ஒரு சிறிய கிண்ணத்தில், நறுக்கப்பட்ட பன்னீர் எடுத்துக் கொள்ளுங்கள்.

2. மிளகாய் தூள், கரம் மசாலா, உலர்ந்த மாங்காய் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.

3. இஞ்சி மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்க்கவும்.

4. நன்றாக கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.

பரோட்டா மாவு செய்ய

1. ஒரு பெரிய கிண்ணத்தில், கோதுமை மாவு மற்றும் உப்பு சேர்க்கவும்.

2. தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் நன்கு பிசையவும்.

3. ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து பிசைந்து 20 நிமிடம் ஊறவைக்கவும்.

பன்னீர் பரோட்டா செய்முறை

1. முதலில் பிசைந்த வைத்த மாவில் சிறிதளவு எடுத்து உருண்டை செய்யவும். அதை 5 அங்குல அளவு தட்டையாக்கவும்.

2. அதில் செய்து வைத்திருக்கும் சிறிது பூரணத்தை வைக்கவும்.

3. பிறகு அதை முன்பு போல் உருண்டையாக மடக்கவும்.

4. சேர்த்த மடிப்பை மீண்டும் தட்டையாக்கவும்.

5. சிறிது கோதுமை மாவை தூவி அதை சப்பாத்தி போல் திரட்டவும்.

6. ஒரு தவாவில் இந்த பரோட்டாவை போட்டு இரண்டு பக்கங்களிலும் சமைக்கவும்.

7. சிறிது எண்ணெய் அல்லது நெய் சேர்த்து கொள்ளலாம்.

8. சூடான இந்த பரோட்டாவை ஊறுகாய், தயிர் அல்லது சாஸுடன் சாப்பிடலாம்.

2 சப்பாத்தி மற்றும் வெண்டைக்காய் குழம்பு

தேவையான பொருட்கள்

1. எண்ணெய் - ½ தேக்கரண்டி (வெண்டைக்காயை வதக்க)

2. வெண்டைக்காய் - 6

3. எண்ணெய் குழம்பிற்கு - ½ தேக்கரண்டி

4. சீரகம் - 1 தேக்கரண்டி

5. இஞ்சி-பூண்டு விழுது - ¼ தேக்கரண்டி

6. நறுக்கிய வெங்காயம் - ½ கப்

7. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

8. மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி

9. கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி

10. கரம் மசாலா தூள் - ½ தேக்கரண்டி

11. தக்காளி கூழ் - 1 கப்

12. முந்திரி விழுது - ¼ கப்

13. தண்ணீர் - தேவையான அளவு

14. உப்பு - தேவையான அளவு

15. பொடியாக நறுக்கப்பட்ட கொத்தமல்லி இலைகள் - 2 தேக்கரண்டி

செய்முறை

குறிப்பு: 1 கப் = ~ 255 கிகி

1. முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் வெண்டைக்காயை வதக்கவும்.

2. நடுத்தர சூட்டில் தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்கவும்.

3. பின்பு தனியாக எடுத்துவைத்துக்கொள்ளவும்.

4. மீண்டும் அந்த பாத்திரத்தில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து வறுக்கவும்.

5. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

6. வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

7. மிளகாய் தூள், மஞ்சள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா போன்ற மசாலாவை சேர்க்கவும்.

8. மசாலா நன்கு சமைக்கப்படும் வரை குறைந்த தணலில் சமைக்கவும்.

9. இப்போது தக்காளி கூழை சேர்த்து, வதக்கவும். எண்ணெய் தனியாக பிரிந்து, கிரேவி போன்று வரும்வரை வதக்கவும்.

10. இப்போது முந்திரி விழுதை சேர்க்கவும். தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்க்கவும்.

11. கொதி வரும் வரை விடவும்.

12. இப்போது வதக்கி வைத்திருக்கும் வெண்டைக்காயை சேர்த்து கிளறவும்.

13. பாத்திரத்தை மூடி 5 நிமிடம் கொதிக்க விடவும்.

14. இறுதியாக கொத்தமல்லி தழைகளை சேர்க்கவும்.

15. சாதம் அல்லது சப்பாத்தியுடன் இதை பரிமாறவும்.

நொறுக்குதீனி
பனானா ஸ்மூத்தி

தேவையான பொருட்கள்

1. உரிக்கப்பட்ட பாதாம் பருப்பு - 1 தேக்கரண்டி

2. வாழைப்பழங்கள் - 1 கப் (நறுக்கியது)

3. பால் - 1½ கப்

4. சர்க்கரை - ½ தேக்கரண்டி

5. வெண்ணிலா எசென்ஸ் - ½ தேக்கரண்டி

6. ஐஸ்கட்டிகள் - 8

செய்முறை

1. பாதாம், வாழைப்பழம் மற்றும் ½ கப் பால் சேர்த்து ஒரு மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

2. சக்கரை, மீதமுள்ள பால், வெண்ணிலா எசென்ஸ் மற்றும் ஐஸ்கட்டிகள் சேர்த்து நன்றாக மீண்டும் அரைக்கவும்.

3. இதை கிளாஸில் ஊற்றி பரிமாறவும்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon