Link copied!
Sign in / Sign up
71
Shares

ஒரு வயதிற்கு முன் குழந்தைகளுக்கு கொடுக்க கூடிய 9 உணவுகள்

நம் உணவில் பல்வேறு மசாலைகளை சேர்த்து உண்கிறோம். ஆனால் ஆரோக்கியமான உணவு என்னும் பெயரில், ஒரே வகையான உணவை ஊட்டி கொண்டிருக்காமல், ஏன் விதவிதமான உணவுகளை வெவ்வேறு சுவைகளில் குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது? இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், குழந்தைகளுக்கு ஒரு வயதிற்கு முன்பே பழங்கள், காய்கள் மற்றும் பல உணவு பொருட்களை கொடுப்பதாக சொல்கிறது ஒரு ஆராய்ச்சியின் முடிவு. மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், வேர்க்கடலை, முட்டை, கடல் மீன் மற்றும் சோயா போன்றவை குழந்தைகளுக்கு ஒவ்வாமை உருவாக்கலாம். அவை ஏற்கனவே ஒவ்வாததாக இருப்பினும், முதல் வருடம் வரை இந்த உணவை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவது நல்லது. இந்த ஒவ்வாமைக்கு எதிராக சிறிய எதிர்ப்பை உருவாக்க உதவுகிறது. இங்கு ஒரு வயதிற்கு முன் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய 9 உணவுகளை பார்க்கலாம். 

1 முட்டை

முட்டையில் உயர் தரமான புரதம், உடலுக்கு நன்மை பயக்கும் கொழுப்புகள், ஆரோக்கியமான கண்களுக்கு கோலைன், இரும்பு மற்றும் ஃபோலேட், வைட்டமின் A, D, E போன்றவை நிறைந்துள்ளது. அவை எளிதில் ஜீரணமாக கூடியவையாகவும், எளிய வழிகளில் சமைக்கவும் முடியும். உங்கள் குழந்தையின் உணவில் கூடுதல் புரோட்டீன்களை சேர்ப்பது நன்மைகளை தரக் கூடியதாகவும், உங்கள் குழந்தைக்கு எதிர் காலத்தில் ஒவ்வாமை ஏற்படுவதிலிருந்து தடுக்கவும் உதவுகிறது.

2 மீன்

மீன் மற்றும் மீன் எண்ணெய்கள், உங்கள் குழந்தையின் தோல் மற்றும் மன வளர்ச்சி மிகவும் நல்லது. அதிலும் குறிப்பாக துனா, மத்தி மற்றும் சால்மன் போன்ற மீன் நல்ல பலன் தரக்கூடியவையாக இருக்கும். குழந்தையின் விழித்திரை மற்றும் புலனுணர்வு வளர்ச்சிக்கு தேவைப்படும், அனைத்து முக்கிய ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் DHA வை கொண்டிருக்கின்றன. கூழ் செய்த, நீராவியில் வேகா வைக்க பட்ட அல்லது மசிக்கப்பட்ட மீன்களை உங்கள் குழந்தைக்கு உணவாக ஊட்டுங்கள், ஆனால் அவற்றின் எலும்புகள் குழந்தையின் மூச்சுகுழாயை அடைக்கும் என்பதால், மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

3 கீரைகள்

பச்சை இலை காய்கறிகள் உங்கள் குழந்தையின் இரத்தத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் அவற்றில் இரும்புச் சத்து அதிகளவில் நிறைந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக கீரைகள் நல்ல பலன் தரக்கூடியவை. இவை மிகவும் ஆரோக்கியமான உணவுகள், இவற்றை உங்கள் குழந்தைகள் மறுத்தாலும் கூழ் செய்து உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டும். வெங்காயம் மற்றும் பூண்டை சேர்த்து வேறுபட்ட சுவையுடன் கொடுக்கலாம்.

4 பெர்ரி

பெர்ரி பல வண்ணங்களில் இருப்பதால், உங்கள் குழந்தையின் கண்களை கவர கூடியதாக இருக்கும். இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால், அவற்றில் நார் மற்றும் வைட்டமின்கள் ஏ, சி போன்ற நிறைந்திருப்பதோடு, சிறந்த ஆக்ஸிஜனேற்றிகளாகவும் பயன்படுகின்றன. இது எலும்பு வளர்ச்சி மற்றும் ஆரோக்யமான இருதயத்திற்கு உதவுகிறது. இவை சுவை மிகுந்ததாக இருப்பதால், இதை சிறு துண்டுகளாக நறுக்கியோ அல்லது கூழ் செய்தோ குழந்தைகளுக்கு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் குழந்தைக்கு ஸ்கெர்ப்டிஸ் பெர்ரி, ஸ்டிராபெர்ரி மற்றும் ப்ளூபெர்ரி போன்றவற்றை கொடுக்கலாம்.

5 பயறு மற்றும் பீன்ஸ்

புரதம், இரும்பு, ஃபோலேட், துத்தநாகம் மற்றும் மாங்கனீசுகள் பயறுகளில் ஆதாரமாக இருக்கின்றன. பயறு மற்றும் பீன்ஸ் புத்தி கூர்மைக்கு மிகவும் நல்லது. அவை சமைக்கவும், சாப்பிடவும் மிகவும் எளிமையானவை. இவை உங்கள் குழந்தையின் உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய உணவாகும்.

6 மூலிகைகள் மற்றும் மசாலா

உங்கள் குழந்தையின் உணவில் மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களை சேர்ப்பது, அவர்களின் வாய் அண்ணதை விரிவாக்கவும், துணிச்சலாக உணவை உண்ணவும் உதவும். இவை சிறந்த ஆக்ஸிஜனேற்றிளாகும். ஆனால் சேர்க்கும் அளவுவில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் குழந்தையின் அண்ணம் உணர்திறன் கொண்டது, எனவே தயவு செய்து அதை கவனத்தில் கொள்ளுங்கள். குறிப்பாக மிளகாய் தூள் போன்ற மசாலாப் பொருட்கள் சேர்க்கும் பொது அதிக கவனம் தேவை. நினைவில் வைத்து கொள்ளுங்கள், உங்கள் குழந்தையால் நீங்கள் எடுத்துக்கொள்ளும், அதே அளவு மசாலாப் பொருளை எடுத்து கொள்ள முடியாது, எனவே உங்கள் குழந்தைக்கு சிறிது சிறிதாக பழக்க வேண்டும். மஞ்சள், இலவங்கப்பட்டை, ஜாதிக்காய், துளசி மற்றும் வோக்கோசு போன்ற மசாலா பொருட்களை, உங்கள் குழந்தையின் உணவுத் திட்டத்தில் எளிதாக சேர்த்து கொடுக்கலாம்.

7 தயிர், சீஸ் & வெண்ணெய்

உங்கள் குழந்தை லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்றது என்பதை ஏற்கனவே அறிந்திருந்தால் தவிர, உங்கள் குழந்தைக்கு 8-10 மாததில் தயிர், சீஸ், வெண்ணெய் மற்றும் பிற பால் பொருட்களை அறிமுகப்படுத்துவது சிறந்தது. அவை கால்சியம், நல்ல கொழுப்பு மற்றும் புரதத்தின் பெரிய ஆதாரமாக இருக்கின்றன. அவை உங்கள் குழந்தையின் எலும்புகளை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைக்கவும், தேவையான கொழுப்புகளையும் கலோரிகளையும் கொடுக்கின்றன. சாதாரண தயிர் பயன்படுத்தவும், சுவையூட்டப்பட்டு இருக்கும் தயிர் அதிக சர்க்கரை கொண்டுள்ளது. மேலும், உங்கள் குழந்தைக்கு வெண்ணெய் அல்லது சீஸ் அளவை அதிகரிக்க வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

8 விதைகள் (nuts)

குழந்தையில் அறிமுகப்படுத்த படாத நட்ஸ்கள், அவர்கள் வளரும் சாப்பிடும் போது ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. இதில் நிலக்கடலையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வேர்க்கடலை, முந்திரி மற்றும் பாதாம் போன்றவை வைட்டமின் ஈ, புரதம், நன்மை நிறைந்த கொழுப்பு அமிலங்கள், பொட்டாசியம், இரும்பு மற்றும் மாங்கனீசு போன்ற கனிமங்களுடன் அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்தவையாக இருக்கின்றன. எனவே சில வேர்க்கடலை வெண்ணெய் அல்லது நட்ஸ் கலந்த பழச்சாறுகளை உங்கள் குழந்தையின் உணவில் சேர்க்கலாம். இவைற்றை முழுதாக கொடுத்தால், உங்கள் குழந்தைகள் மெல்லாமல்விழுங்கும் போது, மூச்சு குழாயை அடைக்கும் ஆபாயம் உள்ளதால் கவனம் தேவை.

9 ஓட்ஸ்

உங்கள் குழந்தை ஏழு மாதங்கள் கடந்துவிட்டால், உங்கள் குழந்தைக்கு ஓட்ஸ் அறிமுகப்படுத்துவது நல்ல யோசனையாக இருக்கும். ஓட்ஸ்யில் நார்ச்சத்து, இரும்பு, துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் போன்றவை நிறைந்திருக்கின்றன. மேலும் உங்கள் குழந்தையின் செரிமான அமைப்பு, குடல் இயக்கம் மற்றும் குழந்தை வளர்ச்சியின் முறையான செயல்பாட்டுக்கு மிகவும் உதவுகின்றன. 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
100%
Not bad
0%
What?
scroll up icon